கூப்பிடு தூரத்தில் வியட்நாம் கரை.. முடிந்திருக்க கூடாத இன்ப சுற்றுலா! நெஞ்சை பிழியும் சிபிஆர் காட்சி

  • சென்னை: தெற்கு வியட்நாமில் தீவுப் பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பியபோதுதான், அந்த சுற்றுலாப் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகிவிட்டது.. படகிலிருந்த இருந்த தமிழர்கள் உள்பட இந்திய சுற்றுலாப் பயணிகளில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.. பெரிய அலையும், பலத்த காற்றும் இத்தனை பேர் உயிரையும் வாரிச்சுருட்டிக் கொண்டுபோயுள்ளது. மீட்பு பணிகள் தொடர்பான வீடியோக்கள் வெளியாகி காண்போரை பதற வைத்துள்ளன.

    Advertisement

    வியட்நாமின் மிகப் பெரிய தீவான பு குவோக் அருகே உள்ளது ஹான் மே ரூட் ங்வோய் தீவு,,பவளப்பாறைத் திட்டுகளுடனும் அமைந்திருக்கும் தீவு இதுவாகும்.. இந்தத் தீவில் கடல்வாழ் உயிரினங்கள் அதிகம் இருக்குமாம்.. ஸ்நோர்கெலிங் மற்றும் ஸ்கூபா டைவிங் போன்ற சாகசங்களை ரசிப்பதற்காகவே உலகெங்கிலும் இருந்து இங்கு சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள்.

    Advertisement

    வியட்நாம் படகு விபத்து

    இந்த தீவில் இருந்து சுமார் 400 மீட்டர் தொலைவில்தான் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. படகில் 32 இந்திய சுற்றுலாப் பயணிகளும், 4 பணியாளர்களும் இருந்ததாக அதிகாரிகள் சொல்கிறார்கள்.

    "ஓஷன் பியர் ஐலண்ட்" என்ற தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்பீடு படகில்தான் சுற்றுலா பயணிகள் சென்றுள்ளனர்.. மே ரட் ஙோய் தீவிலிருந்து அன் தோய் துறைமுகத்தை நோக்கி அந்த படகு கிளம்பியிருக்கிறது.. பொதுவாக பெரிய மழை, புயல் இருந்தால், முன்கூட்டியே வானிலை நிலவரம் அறிந்து அலர்ட் செய்வார்களாம்.

    ஆனால், இன்று மழையோ, புயலோ போன்ற மோசமான வானிலை எதுவுமே நிலவவில்லை.. சாதாரணமான காலநிலை நிலவியிருந்தாலும், அன் தோய் கடல் பகுதியில் மட்டும் திடீரென வழக்கத்திற்கு மாறாக அலைகள் சீற்றத்துடன் காணப்பட்டுள்ளது..

    Advertisement

    படகுக்கு அடியில் சிக்கிய உயிர்கள்

    படகு துறைமுகத்தை நோக்கிச் சென்று, கரையிலிருந்து வெறும் 400 மீட்டர் தூரத்தில் வந்து கொண்டிருந்தபோதே,அலைகளின் வேகத்தைத் தாங்க முடியாமல் நடுக்கடலில் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.. கண் முன்னாலேயே கரை தெரிந்தும், பயணிகளால் தப்பிக்க முடியவில்லை.. அப்படியே தண்ணீருக்குள் மூழ்கிவிட்டார்கள்.

    விபத்து நடந்து சில நிமிடங்கள் கழித்து, அந்தப் பகுதியில் பயணித்து கொண்டிருந்த மற்ற சுற்றுலாப் படகுகளிலிருந்தவர்கள் நிலைமையை உணர்ந்து உடனடியாக மீட்புக் களத்தில் இறங்கியிருக்கிறார்கள்.

    சீற்றம் கண்ட கடல் - பெரிய அலைகள்

    அதேபோல தகவல் கிடைத்த 5 நிமிஷத்துக்குள், படகின் உரிமையாளர் விபத்து நடந்த இடத்தை அடைந்துவிட்டார். ஆனால் கடல் சீற்றம் அப்போதும் குறையவில்லை.. படகும் தலைகீழாக கவிழ்ந்துவிட்டது. இதனால் அதற்குள் இருந்த பயணிகள் வெளியேற்ற முடியவில்லை.. கவிழ்ந்த படகின் அடிபகுதிக்குள்ளேயே சிக்கி கொண்டார்கள்.. இதனால் தண்ணீருக்குள் தலைகீழாகக் கிடந்த படகின் இடிபாடுகளுக்குள் இருந்து ஆட்களை வெளியே கொண்டு வருவது மீட்பு பணியிலிருந்தவர்களுக்கு சவாலாக மாறியது... இதனாகேலயே பலரையும் உடனடியாகக் காப்பாற்ற முடியாமல் போனது.

    Advertisement

    மீட்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் சுயநினைவற்ற நிலையிலேயே தண்ணீரில் இருந்து வெளியே கொண்டு வரப்பட்டனர். அந்த பகுதியில் பெரிய அலைகள் இருந்ததாலும், பலர் படகுக்குள் சிக்கிக்கொண்டதாலும் மீட்புப் பணி சவாலாக இருந்ததாக வியட்நாமின் "விஎன் எக்ஸ்பிரஸ்" செய்தி வெளியிட்டுள்ளது.

    வீடியோ காட்சிகள்

    இந்த விபத்தை தொடர்ந்து அங்கிருந்து சில வீடியோ காட்சிகள் வெளியாகி பதைபதைக்க வைத்துள்ளது.. நடுக்கடலில் கவிழ்ந்த படகின் இடிபாடுகளில் சிக்கி உயிருக்காகப் போராடியவர்களின் அலறல் சத்தமும், அவர்களைக் காப்பாற்ற சுற்றியிருந்த படகுகளில் உள்ளவர்கள் துடித்த தவிப்பும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

    தண்ணீரில் இருந்து மீட்கப்பட்ட பயணிகளை கரைக்குக் கொண்டு வந்த பிறகு, அங்கிருந்த உள்ளூர் மக்களும், பிற சுற்றுலாப் பயணிகளும் கதறியபடியே அவர்களுக்கு முதலுதவியாக செயற்கை சுவாசம் (CPR) அளித்துக் காப்பாற்ற போராடும் காட்சிகளும் பார்ப்பவர்களை கண் கலங்க வைக்கின்றன. எப்படியாவது அந்த உயிர்களை காப்பாற்றிவிட வேண்டும் என்ற தவிப்பினை அந்த வீடியோக்களில் காண முடிகிறது.

    Advertisement

    இதையடுத்து, அன் தோய் எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 35 அதிகாரிகள், வீரர்கள் 2 பிரத்யேக மீட்புக் கப்பல்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். வியட்நாம் கடற்படை, கடலோரக் காவல்படை மற்றும் உள்ளூர் அவசரக் கால மீட்புக் குழுவினர் என அனைவரும் சேர்ந்து படகில் இருந்த 36 பேரையும் மீட்டு வெளியே எடுத்திருக்கிறார்கள்..!!!

    English Summary

    A sudden, tragic boat accident occurred off the coast of Vietnam, resulting in the death of 15 Indian tourists. The vessel capsized near An Thoi port due to severe weather conditions. Despite immediate, heroic rescue efforts by locals and authorities, 15 lives were lost, causing deep shock and mourning across the region.