மொத்த பேரையும் திருப்பிய ஒரே போட்டோ.. விஜய், அஜித் பிசினஸ் டீல்? கார் ரேஸ் சலுகையும், ஓட்டு அரசியலும்

  • சென்னை: விஜய் - அஜித் சந்திப்பு.. ரசிகர்களுக்கு அது ஒரு நெகிழ்ச்சியான தருணம்தான்.. ஆனால், அந்த ஒரே சந்திப்புக்குள் அரசியல் இருக்கிறதா? அல்லது பிசினஸ் கணக்கு இருக்கிறதா? என்பதுதான் இப்போது எழுந்திருக்கும் கேள்விகள்.. கடந்த ஒரு வார காலமாகவே இந்த சந்திப்பு தமிழக அரசியலிலும் இணையத்திலும் பேசுபொருளாகி வருகிறது..!!

    Advertisement

    லண்டனில் நடிகர் அஜித்தை தமிழக முதல்வரும், நடிகருமான விஜய் சந்தித்துக் கொண்ட காட்சிகள் சோஷியல் மீடியாவில் வேகமாக பரவின. 2 பேரும் நட்புடன் சந்தித்துக் கொண்டது, கட்டியணைத்து, பரிசுகளை பரிமாறிக் கொண்டது என அந்த சந்திப்பு ரசிகர்களிடம் பலவிதமான எதிர்வினைகளை ஏற்படுத்தியது. அத்துடன் இணையத்தில் விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    ஜேம்ஸ் வசந்தன் சொன்னது என்ன

    இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் ஒரு சேனலுக்கு பேட்டி தந்துள்ளார்.. அதில், "அஜித்துடன் இணக்கமான பிம்பத்தை உருவாக்குகிறார் விஜய்.. இதனால் அஜித் ரசிகர்களையும் குறி வைத்து இடைத்தேர்தலுக்கான காயை நகர்த்துகிறார்.. அஜித்துக்கு இருக்கும் ரசிகர் ஆதரவை அரசியல் வாக்குகளாக மாற்றிக்கொள்ளும் நோக்கத்தில் இப்படிப்பட்ட நட்பை வெளிப்படுத்துகிறார்..

    விஜய்க்கு உள்ளதுபோலவே, அஜித்தின் அரசியலும் இதில் ஒளிந்துள்ளது.. தனது கார் ரேஸ் தொடர்பான முயற்சிகளுக்கு அரசின் வணிக ரீதியான சலுகைகளை பெறுவதற்காக இந்த நெருக்கத்தை பயன்படுத்திக் கொள்கிறார்.. மொத்தத்தில் இருவருமே தங்களுடைய தேவைக்காகவே இந்த உறவை பயன்படுத்திக் கொள்கிறார்கள்" என்பது என்பது ஜேம்ஸ் வசந்தன் வெளிப்படுத்தியுள்ள பார்வை.

    Advertisement

    மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன்

    அதேபோல மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் ஒரு பேட்டியில், "விஜய் சேதுபதி உள்ளிட்ட சில நடிகர்கள் குறுக்கு வழியில் புகழையோ அரசியலையோ அடைய முயற்சிக்கிறார்கள்.. 2 விருதுகள் கிடைத்தவுடன் தங்களை மக்கள் தலைவர்களாக நினைத்துக்கொண்டு அரசியலில் இறங்கிவிடும் போக்கு உள்ளது" என்று அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

    மேற்கண்ட கருத்துக்களை தாண்டி இன்னொரு கேள்வியும் இருக்கிறது.. திரையில் ஹீரோவாக இருப்பது வேறு.. நிஜ வாழ்க்கையில் அரசியல் தலைவராக இருப்பது வேறு. ஒரு நடிகருக்கு கிடைக்கும் புகழும், ரசிகர்களின் ஆதரவும் அரசியலிலும் அப்படியே கை கொடுக்குமா? சினிமாவில் கிடைத்த ஹீரோ இமேஜை வைத்து அரசியலிலும் அதே வரவேற்பை எதிர்பார்க்க முடியுமா? என்பதுதான் இங்கே முக்கியமான கேள்வி.

    Advertisement

    அஜித் - விஜய் அரசியல்

    ஒரு நடிகருக்கு பெரிய ரசிகர் கூட்டம் இருக்கலாம்.. சோஷியல் மீடியாவில் ஏராளமான பேர் பின்தொடரலாம்.. படம் வெளியானால் அந்த கூட்டம் தியேட்டருக்கும் வரலாம். ஆனால் தேர்தல் என்று வரும்போது, அதே ரசிகர்கள் எல்லோரும் ஒரே பக்கம் வாக்களிப்பார்களா? என்பதுதான் இங்கே அடுத்த கேள்வி.

    ரசிகர் கூட்டம் இருப்பது மட்டும் தேர்தல் ஆதரவுக்கு உத்தரவாதம் கிடையாது. ஒவ்வொரு தேர்தலிலும் அந்த ரசிகர்களின் அரசியல் நிலைப்பாடு எப்படி இருக்கிறது என்பதையும் தனியாகத்தான் பார்க்க வேண்டும். அதனால்தான் இன்றைய விவாதம் "விஜய் அஜித்தை ஏன் சந்தித்தார்?" என்பதோடு முடிந்துவிடவில்லை. சினிமா புகழ் அரசியல் ஆதரவாக மாறுமா? அப்படி மாற வேண்டுமென்றால் அதற்கு ரசிகர் பலம் மட்டும் போதுமா? என்ற கேள்வியும் இப்போது எழுந்திருக்கிறது.

    Advertisement

    விஜய் சேதுபதி சொன்னது சரியா

    சமீபத்தில் விஜய் சேதுபதி பிக் பாஸ் நிகழ்ச்சியில் தலைமைத்துவம் குறித்து பேசிய கருத்தும் இதேபோன்ற அரசியல் விவாதத்துக்குள் இழுக்கப்பட்டது. அவர் யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் பேசியிருந்தாலும், சோஷியல் மீடியாவில் சிலர் அதை முதல்வர் விஜய்யை மறைமுகமாக அட்டாக் செய்வதாக எடுத்துக்கொண்டனர். அந்த கருத்துகள் வெளியாட்களை குறிக்கும் வகையில் இல்லை என்று விஜய் டிவி விளக்கம் அளித்தாலும், இதிலிருந்து ஒரு விஷயம் தெளிவாகிறது.

    தமிழகத்தைப் பொறுத்தவரை சினிமாவையும் அரசியலையும் அப்படியே பிரித்துப் பார்க்க முடியாது. ஆனால் ஒரு நடிகர் யாரை சந்தித்தாலும், என்ன பேசினாலும், ஒரு போட்டோ போட்டாலும் அதற்குப் பின்னால் அரசியல் கணக்குதான் இருக்கிறது என்று பார்க்க ஆரம்பித்தால், பிரச்சனை அங்கேதான் தொடங்குகிறது.

    Advertisement

    அதேபோல, சினிமா பிரபலங்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்றும் சொல்லிவிட முடியாது.. அவர்கள் அரசியலுக்கு வரலாம்.. ஆனால் சினிமாவில் கிடைத்த புகழை மட்டும் வைத்து அரசியலிலும் ஆதரவை எதிர்பார்க்க முடியுமா? அவர்களுடைய கொள்கை என்ன.. மக்கள் பிரச்சனைகள் குறித்து என்ன சொல்கிறார்கள்.. நிர்வாகத்தை எப்படி பார்க்கிறார்கள் என்பதையும் மக்கள் பார்க்கத்தானே செய்வார்கள்?

    நடிகர் டூ அரசியல் தலைவர்

    முக்கியமாக, இளைஞர்களை சுற்றித்தான் இந்த விவாதம் இன்னும் முக்கியமாகிறது. ஒரு நடிகரை ரசிப்பது வேறு.. அவரை அரசியல் தலைவராக ஏற்றுக்கொள்வது வேறு. சினிமாவில் பிடித்த ஹீரோவை அரசியலிலும் தலைவராக மக்கள் ஏற்றுக்கொள்வார்களா? அல்லது இரண்டையும் தனித்தனியாகத்தான் பார்க்கப் போகிறார்களா? இதுதான் இப்போது எழுந்திருக்கும் பெரிய கேள்வி..!!

    சினிமாவில் கிடைத்த புகழை மட்டுமே நம்பி அரசியலிலும் பெரிய ஆதரவு கிடைத்துவிடும் என்று நினைக்கலாமா? உங்கள் கருத்து என்ன மக்களே

    English Summary

    Vijay Ajith London Meeting.. Business Deal Behind The Viral Photo? Car Racing Benefits & Vote Bank Politics?