’தல’ அஜித்த போட்டு பொளக்குறாங்க.. அவரோட ரசிகர்களுக்கு தெரியுமா? பொளக்குறதே அவங்க தான்! என்னாச்சு?

  • சென்னை: தொழில் முதலீடுகளை ஈர்க்க அரசு முறை பயணமாக முதலமைச்சர் விஜய் லண்டன் சென்றிருக்கும் நிலையில், நடிகரும் கார் ரேஸருமான அஜித்குமார் பங்கேற்கும் சில்வர் ஸ்டோன் கார் பந்தயத்தை துவக்கி வைக்கிறார். இந்த நிலையில் 30 ஆண்டுகளாக இருவரின் ரசிகர்களை மோத வைத்துவிட்டு தற்போது ஒன்று சேர்ந்திருக்கும் விஜய்யும் - அஜித்தும் இடையில் எப்போதாவது அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என அறிக்கை விட்டார்களா? என அஜித் ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றன. சமூக வலைதளங்களிலும் இந்த மோதல் அதிகமாக வெடித்துள்ளது.

    Advertisement

    தமிழக சட்டசபை கூட்டத் தொடர் கடந்த வாரம் முடிந்திருக்கும் நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் முதலீடுகளை ஈர்க்க வெளிநாட்டு பயணம் மேற்கொள்ண்டுள்ளா. செப்டம்பர் 10 முதல் 16 வரை லண்டன் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் முதலீட்டாளர்களை சந்தித்து தொழில் தொடங்க அழைப்பு விடுக்கிறார்.

    Advertisement

    தொழில் முதலீடு மட்டுமல்லாமல், மற்றொரு அறிவிப்பும் வெளியாகியுள்ளது. தற்போது நடிகர் அஜித்குமார் பிரிட்டனில் நடக்கும் "லீமேன்ஸ் கப் சில்வர்ஸ்டோன்" கார் பந்தயத்தில் கலந்து கொள்கிறார். அவரது ஏகே ரேசிங் அணி இந்த பந்தயத்தில் இந்தியா சார்பில் பங்கே இருக்கிறது. இதற்கிடையே சனிக்கிழமை அன்று பிரிட்டன் செல்லும் முதல்வர் விஜய் கார்பந்தயத்தை கொடியசைத்து துவக்கி வைப்பார் என அறிவித்துள்ளது ரேசிங் நிறுவனம்.

    சென்னையில் உலக தரம் வாய்ந்த மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் அமைக்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்திருக்கும் நிலையில் தற்போது சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட் பார்வையிட்டு அந்த போட்டியை தொடங்கி வைப்பார் என சொல்லப்பட்டது. அப்போது உடனடியாக நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார் அஜித்குமார்.

    Advertisement

    இப்போது அஜித்குமார் பங்கேற்கும் ரேசிங் போட்டியை விஜய் தொடங்கி வைப்பார் என அறிவிக்கப்பட்டு இருப்பது சமூக வலைதளங்களை இரு வேறு கருத்துக்களை பெற்று வருகிறது. கடந்த 30 ஆண்டுகளாக இருவரும் திரை துறையில் பயணித்தாலும் இருவரது ரசிகர்களுக்குமே ஏழாம் பொருத்தம் தான். இயக்குனரின் மகனாக இருந்து சினிமாவில் நுழைந்து வெற்றிகளை பெற முடியாமல் தவித்து பின்னர் போராடி வென்றவர் விஜய்.

    அதே நேரத்தில் எளிமையான குடும்ப பின்னணியில், மெக்கானிக்காக இருந்து, விளம்பர மாடலாக, துணை நாயகனாக பின்னர் மாஸ் நாயகனாக உயர்ந்தவர் அஜித் குமார். இருவருக்குமே சம அளவில் ரசிகர் பட்டாளம் இருக்கிறது. ஆனால் விஜய்யை வாரிசு நடிகர் என்றும், அஜித்தை தலைக்கணம் பிடித்தவர் என்றும் இரு தரப்பு ரசிகர்களும் மோதிக் கொள்வார்கள்.

    Advertisement

    இன்று நேற்றுள்ள, காதல் கோட்டை - காதலுக்கு மரியாதை காலத்தில் தொடங்கி சுறா - மங்காத்தா, தற்போது வலிமை பீஸ்ட் வரை இரு தரப்பு ரசிகர்களும் மோதிக் கொண்டிருக்கிறார்கள். சில இடங்களில் கத்திக்கூத்து ,அடிதடி, போஸ்டர் கிழிப்பு, பேனர் கிழிப்பு, தியேட்டர் தாக்குதல் என எல்லை மீறி போயிருக்கிறார்கள். தொடர்ந்து சமூக வலைதளங்களின் ஆதிக்கம் பெருகிய பிறகு இரு தரப்பு ரசிகர்களும் வார்த்தை மோதலில் ஈடுபடுவது வழக்கம்.

    ஒரு நடிகரின் படம் வெளியாகும் போது இன்னொரு நடிகரின் ரசிகர்கள் அவர்களை போட்டு பொளந்து எடுப்பார்கள். அப்போதெல்லாம் படம் ரிலீஸ் ஆகவேண்டும் ரசிகர்களின் மோதிக் கொள்ள வேண்டும் என்று தான் இருவரும் நினைத்தார்களா என்ற கேள்வியை தற்போது எழுப்பி வருகின்றனர் ரசிகர்கள். குறிப்பாக விஜய் முதல்வர் ஆனதற்கு பிறகு அஜித்குமாரின் நடவடிக்கைகளில் மாற்றம் தெரிகிறது என்கின்றனர்.

    Advertisement

    கரூர் சம்பவத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்தது, திமுக ஆட்சியை பாராட்டவில்லை என சொன்னது, ரேசிங் சர்க்யூட் அமைக்கப்படும் என சொன்னதும் நன்றி தெரிவித்தது, தற்போது போட்டியை தொடங்கி வைப்பது என அஜித் விஜய் என இருவருமே சேர்ந்து ஒன்றாக இருப்பது போல் காட்டிக் கொள்ள முயற்சிக்கும் நிலையில் இதேபோல ரசிகர்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என எப்போதாவது அறிக்கை விட்டார்களா? என கேள்வி எழுப்புகின்றனர். அது மட்டும் அல்லாமல் ஆதவ் அர்ஜுனாவும் அஜித் குமாரும் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு தங்கள் மனக்குமுறலை வெளிப்படுத்தி வருகின்றனர்.

    English Summary

    Vijay will flag off Ajith’s Silverstone race, sparking fresh debate among their fans over rivalry and unity.