சென்னை: ஆந்திர முன்னாள் முதலமைச்சரும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டி இல்ல திருமண விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா ஆகியோர் பங்கேற்றனர். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
ஆந்திர மாநிலத்தில் 2019 முதல் 2024 வரை முதல்வராக இருந்தவர் ஜெகன் மோகன் ரெட்டி. கடந்த 2024ல் நடந்த தேர்தலில் இவர் தோல்வி அடைந்தாலும், ஆந்திராவில் முக்கியமான அரசியல் தலைவர்களில் ஒருவராக இருக்கிறார்.
இதற்கிடையே ஜெகன் மோகன் ரெட்டியின் இல்ல திருமண விழா சென்னையில் நடைபெற்றது. சென்னையின் எம்.ஆர்.சி. நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி இல்லத் திருமண விழா நடைபெற்றது. இந்த திருமண விழாவில் பங்கேற்ற முதல்வர் விஜய் மணமக்களை வாழ்த்தினார். அப்போது அவருடன் நடிகை த்ரிஷாவும் மேடையில் இருந்தார். இருவரும் மணமக்களுடன் ஒன்றாக புகைப்படமும் எடுத்துக்கொண்டனர். விஜய் நிகழ்ச்சிக்கு வந்தபோது அவர் தனது சொகுசு காரில் தனியாக வந்ததாக தெரிகிறது. இருப்பினும், பின்னர் மேடையில் மணமக்களுடன் மேடை ஏறும்போது விஜய் மற்றும் த்ரிஷா இருவரும் ஒன்றாக நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இந்த போட்டோ, வீடியோ சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது. இதற்கிடையே திருமண விழாவை முன்னிட்டு ஓட்டல் வளாகம் மற்றும் அந்த சாலைகளில் முதலமைச்சர் விஜய், ஜெகன் மோகன் உள்ளிட்டோரின் மிக பெரிய கட் அவுட்கள் வைக்கப்பட்டிருந்தன. ஆனால், மழைக்காலம் என்பதால் காற்றில் கட் அவுட்கள் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து தமிழக வெற்றிக் கழகத்தினர் அங்கு வைக்கப்பட்டிருந்த விஜய் உள்ளிட்டோரின் கட் அவுட்களை அகற்றினர். சென்னை மாநகராட்சியின் எச்சரிக்கையை தொடர்ந்து முதலமைச்சர் விஜய் உட்பட அனைவரது கட் அவுட்களும் அகற்றப்பட்டன. மேலும், இந்த திருமண விழாவில் பங்கேற்பதற்காக வந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினரை காவல்துறையினர் சிறிது நேரம் தடுத்து நிறுத்தினர். அதாவது முதலமைச்சர் விஜய் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தபோது அந்த நிர்வாகிகளும் வந்திருந்தனர். இதனால் பாதுகாப்பு கருதி அவர்களை போலீசார் சற்று நேரம் காத்திருக்க வைத்தனர். முதல்வரின் கான்வாய் உள்ளே சென்ற பிறகே மற்றவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டன.ஜெகன் மோகன் ரெட்டியின் இல்ல திருமணம்
சில்வர்ஸ்டோன் ரேசிங் சர்க்யூட்டில் த்ரிஷா! முதல்வர் விஜய் தொடங்கி வைத்த ரேஸை பார்க்க நேரில் சென்றார்
விஜய், த்ரிஷா
கொஞ்சம் நாள் வரலை.. அணில்ஸ்க்கு பயம் விட்டுப்போச்சு.. ரகளையான த்ரிஷா என்ட்ரி மீம்ஸ்!
ஜெகன் கட்சி நிர்வாகிகளுக்கு அனுமதி மறுப்பு