சிக்சர் அடித்த சிஎம்.. நெல்லுக்கு அள்ளிக் கொடுத்த விஜய்! வரலாற்றிலேயே இது தான் முதன்முறையாமே!

  • சென்னை: நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூபாய் 289ம் மற்றும் பொது நெல்லுக்கு ரூபாய் 159 என உயர்த்தி சன்னரக நெல் ரூபாய் 2750 பொது ரகங்கள் ரூபாய் 2600 என்று வழங்கப்படும் எனவும், கரும்பு விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசின் சிறப்பு ஊக்கத் தொகையாக டன் ஒன்றுக்கு 709.50 வழங்கப்படும்.. இதனால் கரும்பு விவசாயிகளுக்கு 4000 ரூபாய் டன்னுக்கு கிடைக்கும் என முதல்வர் விஜய் 110 விதியின் கீழ் அறிவித்துள்ளார். மாநில அரசு நெல்லுக்கான ஊக்கத் தொகையை ஓராண்டில் 156 ரூபாய் உயர்த்தி வழங்கப்படுவது இதுவே வரலாற்றில் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

    Advertisement

    தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. இன்றைய நிகழ்வுகள் தொடங்கியவுடன் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தமிழ் தாய் வாழ்த்துக்கு முதலிடம் கொடுப்பது தொடர்பான அரசினர் தீர்மானத்தை கொண்டு வந்தார்.

    Advertisement

    இந்த தீர்மானத்தின் மீது திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் பேசி நிலையில் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து 110 விதியின் கீழ் உரையாற்றினார் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்.

    முதல்வர் விஜய்

    அதில்," விவசாயிகள் நெல் மற்றும் கரும்புகளை பயிரிடவும் அறுவடை செய்திடவும் விற்பனை செய்திடவும் தங்களது உடல் பொருள் ஆவி அனைத்தையும் செலவிட்டு மேற்கொள்கின்றார்கள். தமிழ்நாட்டியின் நிதிநிலை சரியில்லாமல் இருந்தாலும் நெல் மற்றும் கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகளின் நலனை பாதுகாக்க வேண்டும் என்று கருதி தமிழ்நாட்டின் வரலாற்றில் இல்லாத அளவிற்கு மாநில அரசின் நெல் மற்றும் கரும்புக்கான ஊக்க தொகையை அதிகரிக்க முடிவு செய்துள்ளோம்.

    Advertisement

    நெல் ஊக்கத்தொகை

    கொள்முதல் கொள்முதல் பருவம் வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி தொடங்க இருப்பதால் குறைந்தபட்ச ஆதரவு விலையுடன் மாநில அரசின் ஊக்கத்தொகையாக சொன்னதாக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூபாய் 289ம் மற்றும் பொது நெல்லுக்கு ரூபாய் 159 என உயர்த்தி சன்னரக நெல் ரூபாய் 2750 பொது ரகங்கள் ரூபாய் 2600 என்று வழங்கப்படும்..

    கரும்பு ஊக்கத்தொகை

    மாநில அரசு நெல்லுக்கான ஊக்கத் தொகையை ஓராண்டில் 156 ரூபாய் உயர்த்தி வழங்கப்படுவது இதுவே வரலாற்றில் முதல் முறை. அதேபோல 2025 26 கரும்பு அறுவை பருவத்தில் சர்க்கரை ஆலைகளில் பதிவு செய்து கரும்பு விவசாயிகளுக்கு மத்திய அரசு டன் ஒன்றுக்கு 3290.50 நிர்ணயம் செய்துள்ளது. அதற்கு மேல் தமிழ்நாடு அரசின் சிறப்பு ஊக்கத்தொகையாக டன் ஒன்றுக்கு 709.50 வழங்கப்படும் இதனால் விவசாயிகளுக்கு நான்காயிரம் ரூபாய் டன்னுக்கு கிடைக்கும்" என்றார்.

    Advertisement

    விவசாயிகள் மகிழ்ச்சி

    தமிழ்நாடு முதலமைச்சர் விஜயின் இந்த அறிவிப்புக்கு ஆளும் கட்சியினரும் கூட்டணி கட்சி நரும் வரவேற்பை தெரிவித்தனர். அதே நேரத்தில் அள்ளிக் கொடுப்பார்கள் என எதிர்பார்த்தால் கிள்ளி கொடுப்பதாக திமுக விமர்சித்தது. இது ஒருபுறம் இருக்க விவசாயிகளிடையே இந்த அறிவிப்பு வரவேற்பு பெற்று இருக்கிறது. அதே நேரத்தில் நெல்லுக்கான ஊக்கத் தொகையை இன்னும் சற்று உயர்த்திக் கொடுத்திருக்கலாம் என விவசாயிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    வரலாற்றில் முதன்முறை

    இது ஒருபுறம் இருக்க தமிழக அரசியல் வரலாற்றில் மாநில அரசு நெல்லுக்கான ஊக்கத்தொகையை ஓராண்டில் 156 ரூபாய் உயர்த்தி வழங்குவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு அண்ணா, கலைஞர், ஜெயலலிதா, எம்ஜிஆர், எடப்பாடி பழனிச்சாமி, முக ஸ்டாலின் ஆட்சி காலத்தில் 30 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது முதல் முறையாக விஜய் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார் என்கின்றனர்.

    English Summary

    Tamil Nadu CM Vijay announces record paddy incentive hike and ₹4,000 per tonne support for sugarcane farmers.