குடுமிப்பிடி சண்டை.. தவெக அரங்கேறிய கூத்து! சிஎம் விஜய் காதுக்குப் போன மேட்டர்! உடனே வெளியான லிஸ்ட்!

  • சென்னை: தமிழக வெற்றி கழகத்தில் கூடுதலாக 27 மாவட்ட செயலாளர்களை நியமித்து உத்தரவிட்டிருக்கிறார் தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான விஜய். ஏற்கனவே 120 மாவட்ட செயலாளர்கள் இருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 150ஐ நெருங்கி உள்ளது. இந்த நிலையில் புதிதாக மாவட்ட செயலாளர்களை விஜய் ஏன் நியமித்தார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

    Advertisement

    நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் அரசியலுக்கு வந்ததிலிருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். கட்சி ஆரம்பித்த இரண்டே வருடங்களில் ஆட்சியைப் பிடிப்போம் என அவர் பேசிய போது பலரும் அதனை கேலி செய்தனர்.

    Advertisement

    ஆனால் 2026 தமிழக சட்டசபை தேர்தலில் நடந்தது.. வேறு தனி பெரும்பான்மை கிடைக்காவிட்டாலும் தனிப் பெருங் கட்சியாக தமிழக வெற்றி கழகம் உருவெடுத்தது. மக்கள் தீர்ப்புக்கு தலை வணங்குகிறோம் என காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவளித்து. தற்போது ஆட்சியிலும் அவை பங்கு பெற்றுள்ளன.

    உட்கட்சி பூசல்

    இது ஒரு புறம் இருக்க தமிழக வெற்றி கழகத்தில் அடிக்கடி உட்கட்சி பூசல் எழுந்தது. பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் தேர்தலில் தோற்ற நிலையில், அந்தந்த பகுதிகளில் வென்ற எம்எல்ஏக்கள் தங்களுக்கு மாவட்ட செயலாளர் பதவியை வழங்க வேண்டும் என போர்க் கொடி தூக்கினர். அதுமட்டுமல்லாமல் ஒரே மாவட்டத்தில் இரண்டு எம்எல்ஏக்கள் இருந்தால் அவர்களுக்குள்ளும் மோதல் வெடித்தது. திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படாத நிலையில் பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர்.

    Advertisement

    கீர்த்தனா, ராஜேஸ்வரி

    விருதுநகரில் அமைச்சர் கீர்த்தனா, ராஜேஸ்வரி இடையே மோதல் வெடித்தது போல பல்வேறு மாவட்டங்களில் இதே சிக்கல் நீடித்தது. தூத்துக்குடியில் பகுதியில் வென்ற ஸ்ரீநாத் அமைச்சராக நியமிக்கப்பட்ட நிலையில் மாவட்ட செயலாளருக்கும் அவருக்கும் இடையே மோதல் இருந்தது. இப்படியாக கட்சிக்குள் புதிய மோதல் உருவாவதை விரும்பாத விஜய் தற்போது 27 மாவட்டங்களுக்கு மாவட்ட செயலாளர்களை அறிவித்திருக்கிறார்.

    நிர்வாகிகள் நியமனம்

    அதில் திண்டுக்கல், தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் இடம் பெற்று இருக்கிறது குறிப்பிடத்தக்கது. இது மட்டுமல்லாமல் தற்போது மாவட்ட, ஒன்றிய அளவிலான நிர்வாகிகள் மட்டுமே நியமனம் செய்யப்பட்டு இருக்கின்றனர். பகுதி அளவிலான நிர்வாகிகள் இன்னும் நியமனம் செய்யப்படவில்லை. கட்சியின் அடிப்படைக் கட்டமைப்பான கிளைச்செயலாளர்கள் நியமனமும் நடக்கவில்லை.

    Advertisement

    விஜய்

    இப்படி கட்சி இன்னும் முழுமையான கட்டமைப்புடன் இல்லாததை உணர்ந்த விஜய் அதனை சரி செய்யும் பொருட்டே தற்போது புதிய மாவட்ட செயலாளர்களை நியமனம் செய்திருக்கிறார் என்கின்றனர்.அது மட்டும் அல்லாமல் வரும் காலங்களில் மகளிர் அணி, ஓட்டுனர் அணி, தகவல் தொழில்நுட்பம், வழக்கறிஞர் அணி என பல்வேறு அணிகளுக்கான நியமன அறிவிப்பும் அடுத்தடுத்து வெளியாகும் என்கின்றனர்.

    நியமன அறிவிப்புகள்

    கடந்த தேர்தலில் பூத் கமிட்டி வலுவாக இல்லாததால் தான் பல தொகுதிகளில் தமிழக வெற்றி கழகம் தோல்வியை சந்தித்தது. எனவே இந்த முறை அந்த தவறு நடக்கக்கூடாது என்பதற்காக முதலில் பூத் கமிட்டிகளை வலுப்படுத்த வேண்டும் என மாவட்ட செயலாளர்களுக்கு விஜய் உத்தரவிட்டிருக்கிறார். வரும் காலங்களில் அடுத்தடுத்து பல்வேறு நிர்வாகிகள் தொடர்பான நியமன அறிவிப்புகள் வெளியாகும் என்கின்றனர் தமிழக வெற்றிக் கழகத்தினர்.

    English Summary

    Vijay appoints 27 new TVK district secretaries as internal conflicts grow, aiming to strengthen the party’s grassroots structure.