சென்னை: அதிமுக, திமுக உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி தவெகவில் இணைந்தவர்களுக்கு புதிய பொறுப்பு வழங்கியுள்ளார் தவெக தலைவர் விஜய். வைகைச்செல்வன், கலைராஜன், சி.மகேந்திரன், வா.புகழேந்தி ஆகியோர் தவெக முதன்மை செய்தி தொடர்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
திமுகவில் இருந்து தவெக சென்ற பழ.செல்வகுமார், அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்த வழக்கறிஞர் சசிரேகா ஆகியோர் தவெகவின் தேசிய செய்தி தொடர்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்தபிறகு, மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், முன்னாள் எம்.எல்.ஏக்கள் என ஏராளமானோர் தவெகவில் இணைந்தனர். எனினும், அவர்களுக்கு பதவிகள் வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், புதிதாக இணைந்தவர்களுக்கு பொறுப்புகளை வழங்கியுள்ளார் விஜய். இதுதொடர்பாக தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழக வெற்றிக் கழகத்தின் ஊடகம் மற்றும் செய்தித் தொடர்பு (Media and Communication)அணி பின்வரும் முறையில் விரிவாக்கம் செய்யப்பட்டு நிர்வாகிகள் நியமிக்கப்படுகிறார்கள். சி.டி.ஆர். நிர்மல்குமார், B.E., LLB., MA கழக இணைப் பொதுச்செயலாளர். (மாண்புமிகு சட்டம் மற்றும் மின்சாரத் துறை அமைச்சர்) ஆ.ராஜ்மோகன், BA, கழகத் துணைப் பொதுச்செயலாளர். (மாண்புமிகு பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி. செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர்) ஆ.ராஜ்மோகன், BA, எஸ். ரமேஷ், B.E., (மாண்புமிகு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர்) முனைவர் வைகைச்செல்வன் М.А., B.L., D.Lit., D.Ed., Ph.D. பெலிக்ஸ் ஜெரால்ட், Μ.Α., Dip. TTM. DCA, முகில் வீரப்பன் (எ) மு.க.சிவகுமார். BA. தமிழன் ராகுல்காந்தி (ஏ) ராகுல்காந்தி B.E., புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் வாழ்த்துகள். கழகத்தின் ஆக்கப்பூர்வப் பணிகள் குறித்து எனது உத்தரவு மற்றும் ஆலோசனையின்படியும் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் வழிகாட்டுதலின்படியும். இந்தப் புதிய நிர்வாகிகள் பணிகளை மேற்கொள்வார்கள். கழகத் தோழர்கள் அனைவரும் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.புதிய பொறுப்புகளில் நியமனம்
தலைமை நிலையச் செயலக முதன்மைச் செய்தித் தொடர்பாளர்கள்
அணி பொறுப்பாளர்:
துணைப் பொதுச்செயலாளர்,
(மாண்புமிகு பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர்)ஒருங்கிணைப்பாளர்கள்:
கேத்தரின் பாண்டியன் D.T.Ed., B.Ed., M.A.
க.சி.தி.அனந்தஜித் மகியா M.A.,முதன்மைச் செய்தித் தொடர்பாளர்கள்
வி.பி.கலைராஜன். MA., BL
சி.மகேந்திரன், B.A.,
ஓய்.ஜவஹர் அலி, B.Com
வா.புகழேந்தி, B.A.,தேசியச் செய்தித் தொடர்பாளர்கள்:
வழக்கறிஞர் CA, டாக்டர் எம்.சத்யகுமார், LLM, ACA ACMA, ACS, CIMA-ACMA KO CISI-ACSI (UK), MA (Economics). D
எஸ்.வீர விக்னேஸ்வரன், BE
எம்.கே.தேன்மொழி பிரசன்னா, B.Tech (IT)
அமெரிக்கை வி நாராயணன், B.Com. MBA (Gin -USA) CPA (Texas-USA). CMA (USA)
வழக்கறிஞர் ஏ.சசிரேகா, MA., B.L
பழ செல்வக்குமார், DCA
விவேக் கணநாதன், BEமாநிலச் செய்தித் தொடர்பாளர்கள்:
மு.ஞான செல்வின் இன்பராஜ் (எ) மு.ஞா.செ.இன்பா. B.Sc.
ச.முஹமது இப்ராஹிம் (எ) ராவுத்தர் இப்ராஹிம், DECE
ஜெகதீசபாண்டியன். BFA., DFT.
பி.கே.ஜெயக்குமார்
பம்மல் திரு. டி.கந்தசாமி. DC-TECH BCA.
ஆர்.கே.ஜலீல்
தேவகுமார் BPT. F. Ortho FFA, MBA., LLB
மு. சௌந்தரராஜா ВЕ, МА.மாநில வலைத்தள செய்தித் தொடர்பாளர்கள்
சு.தியாகராஜன், DME
நரேஷ்குமார் ராஜேந்திரன், BA