ஜெகதீஷ் பழனிசாமிக்கு வந்த அரசியல் ஆசை.. தவெகவில் முக்கிய பொறுப்பு? விஜய் காதுகளுக்கு சென்ற விஷயம்!

  • சென்னை: முதல்வர் விஜய்யின் தனிச்செயலாளராக இருந்து வரும் ஜெகதீஷ் பழனிசாமி, தவெகவில் இளைஞரணி பொறுப்புக்கு காய் நகர்த்தி வருவதாக தகவல் கிடைத்துள்ளது. ஏற்கனவே தவெகவின் இணைப் பொருளாளராக இருக்கும் ஜெகதீஷ் பழனிசாமி, தனக்கென்று தனித்த அரசியல் அடையாளத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

    Advertisement

    முதல்வர் விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன்பு இருந்த அவரின் மேனேஜராக இருந்து வருபவர் ஜெகதீஷ் பழனிசாமி. சினிமாவில் இருந்து விலகும் முடிவை எடுத்த போது விஜய் ஜெகதீஷ் பழனிசாமி உடனான ஒப்பந்தத்தை முடிவுக்கு கொண்டு வர நினைத்தார். ஆனால் திடீரென ஜெகதீஷ் பழனிசாமி தொடர்ந்து தவெகவிலும் பயணிக்க விரும்பினார். இதனால் அவருக்கு தவெகவில் இணைப் பொருளாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.

    Advertisement

    புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போல் ஜெகதீஷ் பழனிசாமி வழக்கமாக அரசியல் நிகழ்ச்சிகளில் முன்னுக்கு வர மாட்டார். அவர் முழுக்க முழுக்க ரூட் நிறுவனத்தை வைத்து சோசியல் மீடியாவில் தனது நடவடிக்கைகளை மேற்கொள்வார். சட்டசபைத் தேர்தலின் போதே ஜெகதீஷ் பழனிசாமி போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் சீட் வேண்டாம் என்று விலகியே நின்றார்.

    இருந்தாலும் ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநர் அர்லேகரை சந்திக்க விஜய் சென்ற போதும் கூட ஜெகதீஷ் உடன் சென்றார். தவெக ஆட்சி அமைத்த பின் ஜெகதீஷ் பழனிசாமிக்கு தனிச் செயலாளர் பொறுப்பை முதல்வர் விஜய் வழங்கினார். அதற்கு முன் திருச்சி கிழக்கு தொகுதியில் ஜெகதீஷ் பழனிசாமி போட்டியிட உள்ளதாக பேச்சுகள் எழுந்தன.

    Advertisement

    ஆனால் விஜய்யுடன் இருக்க வேண்டும் என்பதே ஜெகதீஷ் பழனிசாமியின் விருப்பமாக இருந்திருக்கிறது. ஆனால் சமீப காலமாக ஜெகதீஷ் பழனிசாமிக்கு அரசியல் ஆசை வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் தவெகவில் இளைஞரணி பொறுப்புக்கு காய் நகர்த்த ஜெகதீஷ் பழனிசாமியின் பின்னால் இருப்பவர்கள் அறிவுறுத்தி வருவதாக சொல்லப்படுகிறது.

    தனக்கென அரசியல் அடையாளத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணமும் அவருக்கு உள்ளது. அதேபோல் தவெக ஆட்சியில் தன்னுடன் நெருங்கிய வட்டத்தில் இருப்பவர்களுக்கு பதவி, பொறுப்பு கொடுத்து விஜய் அழகு பார்த்து வருகிறார். இதனை ஜெகதீஷ் பழனிசாமியின் எண்ணத்தை விஜய் காதுகளுக்கும் சிலர் கொண்டு சென்றுள்ளனர். இதனால் விஜய் என்ன முடிவு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    English Summary

    Vijay: As per Sources CM Vijay Personal Secretary Jagadish Palanisamy Eyes TVK Youth Wing Role