ராகுல் vs விஜய்.. யார் பிரதமர் வேட்பாளர்? மாணிக்கம் தாக்கூர் கொடுத்த மழுப்பலான பதில்

  • சென்னை: தவெக- காங்கிரஸ் இடையேயான கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் என்பதில் யார் என்பதில் குழப்பம் நிலவி வருகிறது. இன்றைய தினம் கூட்டணிக்கான பெயர் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிரதமர் வேட்பாளர் தொடர்பாக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இருப்பினும், அவர் தெளிவாக எந்தவொரு பதிலையும் தராமல் மழுப்பலான பதிலையே கொடுத்தார்.

    Advertisement

    இன்றைய தினம் தவெக தலைவரும் முதல்வருமான விஜய் தலைமையில் கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் இடதுசாரிகள் பங்கேற்கவில்லை. கூட்டணி ஆட்சியில் பங்கெடுக்காமல் வெளியில் இருந்தே ஆதரவு தருவதால் ஆலோசனை கூட்டத்தில் பங்கெடுக்கவில்லை என இடதுசாரிகள் அறிவித்துவிட்டன.

    Advertisement

    மாணிக்கம் தாக்கூர்

    இதையடுத்து காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாக்கூர், விசிக தலைவர் திருமாவளவன், ஐயுஎம்எல் தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன், மதிமுக தலைவர் வைகோ ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கூட்டணிக்கான பெயர் இறுதி செய்யப்பட்டது. தவெக கூட்டணிக்கு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி என பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது.

    மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி

    இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர், "இன்றைய தினம் நாங்கள் கூட்டணி கட்சிக்கான பெயரை மட்டுமே முடிவு செய்தோம். மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி என பெயர் வைத்திருக்கிறோம். இந்த பெயருக்கு பல பலமான அர்த்தங்கள் உள்ளன. தமிழகத்தில் சமூகநீதி, மதச்சார்பற்ற தன்மையை போற்றும் அனைத்து கட்சிகளும் இங்கு நிற்கிறோம். தமிழகத்தின் உரிமைகளை காப்பாற்றும் அனைத்து கட்சிகளும் இங்கு இருக்கிறோம்.

    Advertisement

    தமிழக முதல்வர் விஜய் தலைமையில் நாங்கள் இந்த கூட்டணியை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உருவாக்கி இருக்கிறோம். வரும் இடைத்தேர்தல்களில் இந்த கூட்டணி சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்" என்றார்.

    நாடாளுமன்ற தேர்தல்

    அப்போது நாடாளுமன்ற தேர்தல் குறித்தும் இந்தியா கூட்டணி குறித்தும் எழுப்பப்பட்ட கேள்விக்கு, "காங்கிரஸ் இப்போது மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியில் இருக்கிறது. ஐயுஎம்எல், விசிக, மதிமுக ஆகிய கட்சிகள் எங்களுடன் உள்ளன. எம்பிக்கள் உள்ள கட்சிகள் எல்லாம் எங்களுடன் உள்ளன. மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி என்பது இந்தியா கூட்டணியின் ஒரு பகுதி! விஜய் தலைமையில் நாங்கள் தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல்களை எதிர்கொள்வோம். நாடாளுமன்ற தேர்தல் 2029ல் நடக்க போகிறது. இந்த கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் மிக பெரிய வெற்றியை அடையும்!" என்றார்.

    Advertisement

    பிரதமராக விஜய்?

    இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக ராகுலை விஜய் ஏற்றுக்கொண்டாரா என்ற கேள்விக்கு அவர், "இரண்டு விஷயங்களை குழப்பி கொள்கிறீர்கள். மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியின் தலைவராக விஜய் செயல்படுவார். இது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான கூட்டணி! 2029ல் லோக்சபா தேர்தல் அறிவிக்கப்படப் போகிறது. அப்போது தான் இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார். அப்போது பிரதமர் வேட்பாளருக்காக விஜய் முழு அளவில் பிரச்சாரம் செய்வார். அதில் சந்தேகம் வேண்டாம்.

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளராக வர வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு. ஆனால், இந்தியா கூட்டணி தலைவர்கள் அனைவரும் சேர்ந்தே நாடாளுமன்ற தேர்தலின்போது முடிவு செய்வார்கள். அதை மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியும் ஏற்றுக்கொள்ளும். எப்போதும் இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பது தேர்தல் சமயத்திலேயே முடிவு செய்யப்படும்" என்று மழுப்பலாகவே பதில் அளித்தார்.

    English Summary

    Tamil Nadu Congress chief Manickam Tagore said the Vijay-led alliance will support the INDIA bloc Prime Ministerial candidate(விஜய் பிரதமர் வேட்பாளராவது மாணிக்கம் தாகூர்): Vijay as PM Candidate What Manickam Tagore said.