2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன?

  • தமிழக அரசியல் களம் தற்போது டெல்லி வரை அதிரும் வகையில் ஒரு மிகப்பெரிய திருப்பத்தைச் சந்தித்துள்ளது. தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்றப் தேர்தலுக்குப் பிறகு திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே ஏற்பட்ட விரிசல், தற்போது தேசிய அளவில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

    Advertisement

    வரும் ஜூன் 8-ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ள எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' (INDIA Bloc) கூட்டணிக் கூட்டத்தைப் புறக்கணிக்கப் போவதாகத் திமுக தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு திமுக கூட்டணியில் இருந்து விலகிய காங்கிரஸ் கட்சி, தற்போதைய முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) கூட்டணி அமைத்து ஆட்சி அதிகாரத்திலும் பங்கு பெற்றுள்ளது. காங்கிரசின் இந்த அதிரடித் தாவலால் அதிர்ச்சி அடைந்த திமுக, தற்போது டெல்லிக்குத் தனது பாணியில் ஒரு பலத்த அதிர்ச்சி வைத்தியத்தைக் கொடுத்துள்ளது.

    Advertisement

    டெல்லிக்கு ஷாக் கொடுத்த அறிவாலயம்

    சட்டமன்றத் தேர்தலுக்குப் பின் காங்கிரஸ் கட்சி தவெகவுடன் கைகோர்த்ததால், தேசிய அளவிலான 'இந்தியா' கூட்டணியில் திமுக தொடர்கிறதா இல்லையா என்ற ஒரு மிகப்பெரிய கேள்விக்குறி அரசியல் வட்டாரத்தில் நிலவி வந்தது.

    இந்தச் சூழலில் தான் வரும் ஜூன் 8-ஆம் தேதி டெல்லியில் 'இந்தியா' கூட்டணியின் அவசர ஆலோசனைக் கூட்டம் கூட்டப்பட்டு, அதில் பங்கேற்கத் திமுகவிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

    ஆனால், சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸின் கட்சி தாவல் திமுக தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டியுள்ளது என்று திமுக தலைமை கறாராகத் தெரிவித்துள்ளது. இதனால், காங்கிரஸ் தலைமையிலான இந்த டெல்லி ஆலோசனைக் கூட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் எக்காரணம் கொண்டும் பங்கேற்காது என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து, தங்களின் 'சைலண்ட்' பழிவாங்கலைத் தொடங்கியுள்ளது. திமுகவின் இந்தத் திடீர் முடிவு 'இந்தியா' கூட்டணியில் உள்ள மற்ற தேசியத் தலைவர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    திமுக அவுட்... தவெக இன்?

    திமுகவின் இந்த அதிரடிப் புறக்கணிப்பு அறிவிப்பானது, மறுபுறம் தமிழக வெற்றிக் கழகத்தின் பனையூர் வட்டாரத்தைத் தற்போது பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    தேசிய அளவிலான 'இந்தியா' கூட்டணியில் இருந்து திமுக விலகும் பட்சத்தில், அந்தப் பிரம்மாண்ட தேசிய அரசியல் வெற்றிடத்தைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முதலமைச்சர் விஜய் தீவிரமாக திட்டம் தீட்டி வருகிறார்.

    திமுக வெளியேறுவதன் மூலம் டெல்லியில் ஏற்படும் இடத்தை வெற்றிடத்தை நிரப்பி, அதன் மூலம் தேசிய அளவில் தவெகவிற்கான முக்கியத்துவத்தை அதிரடியாகப் பெற வேண்டும் என்ற தங்களின் இலக்கை நோக்கிப் பனையூர் டீம் தற்போது வேகமாக நகரத் தொடங்கியுள்ளது.

    Advertisement

    பவர் பாலிடிக்ஸ்.. பாஜகவின் அடுத்த மூவ் என்ன?

    தமிழ்நாட்டில் காங்கிரசுக்கு ஆட்சி அதிகாரத்தில் தவெக பங்கு கொடுத்ததால், டெல்லியில் உள்ள பாஜக தலைமை ஏற்கனவே முதலமைச்சர் விஜய் மீது கடும் அதிருப்தியில் உள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், நிர்வாக ரீதியாக முதலமைச்சர் விஜய் இதுவரை எங்கும் வெளிப்படையாக பாஜகவை எதிர்த்துப் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    இத்தகைய சூழலில், தவெக தற்போது காங்கிரஸ்-ன் 'இந்தியா' கூட்டணியிலும் இணைந்தால், அது பாஜக தலைமையின் கோபத்தை மேலும் அதிகரிக்கும் என்று அரசியல் விமரிசகர்கள் கருதுகின்றனர். இரு தேசியக் கட்சிகளின் அதிருப்திக்கும் ஆளாகாமல், அதேநேரம் காங்கிரசின் ஆதரவோடு தமிழக ஆட்சியைத் தொய்வில்லாமல் நடத்துவது எப்படி என்ற அக்னிப்பரீட்சையில் விஜய் உள்ளார்.

    Advertisement

    டார்கெட் 2029 நாடாளுமன்றத் தேர்தல்

    முதலமைச்சர் விஜய்யின் உண்மையான அரசியல் இலக்கு என்பது வரும் 2029 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தல் தான் என்று விபரமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அந்தத் தேர்தலில் தேசிய அளவில் தவெக ஒரு மிக முக்கியப் பிராந்திய சக்தியாக உருவெடுக்க வேண்டும் என்று விஜய் விரும்புகிறார்.

    இதற்காகத் தமிழ்நாடு மட்டுமல்லாது, தனக்கு நல்ல செல்வாக்கு உள்ள கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மற்ற தென்மாநிலங்களிலும் தமிழக வெற்றிக் கழகத்தை விரிவுபடுத்தத் திட்டமிட்டு வருகிறார். இந்த நீண்டகால மாஸ்டர் பிளானை சாத்தியப்படுத்த வேண்டுமானால், தேசிய அளவில் 'இந்தியா' போன்ற ஒரு வலுவான கூட்டணியில் அங்கம் வகிக்க வேண்டியது அவசியம் என்பதையும் விஜய் உணர்ந்துள்ளார்.

    Advertisement

    தமிழகத்தில் ஏற்பட்டுள்ள இந்த புதிய ஆட்சி மாற்றத்தையும், டெல்லியில் அரங்கேறும் இந்த அதிரடி அரசியல் சதுரங்க ஆட்டத்தையும் மக்களுக்கு தினமும் அதிர்ச்சியை கொடுத்து வருகிறது. காங்கிரசின் துரோகத்தால் கோபத்தில் இருக்கும் திமுகவின் அடுத்தகட்ட நகர்வு என்னவாக இருக்கும், அதேநேரம் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி 2029 நாடாளுமன்றத் தேர்தலுக்கான அஸ்திவாரத்தைப் பனையூர் கோட்டை எப்படி பலப்படுத்தப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    English Summary

    In a major political shock, DMK has decided to boycott the INDIA bloc meeting scheduled in Delhi on June 8, citing Congress’s alliance with CM Vijay’s TVK in Tamil Nadu. This move signals a deep fracture in the opposition alliance and opens the door for Vijay to expand his national ambitions ahead of 2029 Lok Sabha elections.