விஜய் பர்த்டே ஸ்பெஷல்: இரண்டு ‘விஜயபாஸ்கர்’களின் அதிரடி மூவ்! இத்தனை இடிக்கு எடப்பாடி தலை தாங்குமா?

  • சென்னை: அரசியல் வட்டாரங்களில் இப்போ எரியுற நெருப்புக்குக் காரணம் இந்த சுடச்சுடத் தகவல் தான். வரும் ஜூன் 22-ம் தேதி தவெக தலைவர் விஜய்யின் பிறந்தநாள்! அன்றைய தினம் தளபதிக்கு 'பர்த்டே கிஃப்ட்' கொடுக்கும் விதமாக, அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களான சி.விஜயபாஸ்கரும், எம்.ஆர். விஜயபாஸ்கரும் தங்களது எம்.எல்.ஏ பதவிகளை அதிரடியாக ராஜினாமா செய்துவிட்டு, முறைப்படி தமிழக வெற்றி கழகத்தில் (தவெக) இணையப் போவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

    Advertisement

    ஏற்கனவே பெருந்துறை ஜெயக்குமார், மரகதம் குமரவேல் உள்ளிட்ட 4 அதிமுக எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவிகளைத் தூக்கிப் போட்டுவிட்டு தவெகவில் இணைந்துள்ள நிலையில், இப்போ புதுக்கோட்டை மற்றும் கரூர் மாவட்டங்களின் இந்த மெகா தூண்களும் நகர்வது, அதிமுக கூடாரத்தையே ஆட்டம் காண வைத்துள்ளது.

    Advertisement

    அதிமுகவில் என்னதான் நடக்குது? வெடிக்கும் உட்கட்சி பூசல்!

    சட்டசபைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, அதிமுகவுக்குள் புகைந்து கொண்டிருந்த அதிருப்தி நெருப்பு, இப்போ எரிமலையாக வெடிச்சிருக்கு. "கட்சியை ஒரு குறிப்பிட்ட குடும்பமும், சில தனிநபர்களும் மட்டுமே தங்கள் பிடிக்குள் வைத்திருக்க நினைக்கிறார்கள், தொண்டர்களுக்கும் மூத்த நிர்வாகிகளுக்கும் மதிப்பே இல்லை" என்கிற குமுறல் தான் இப்போ அதிமுகவின் உட்கட்சிப் பூசலுக்கு முக்கியக் காரணம்.

    கட்சித் தலைமை மேல் இருக்கும் இந்த அதிருப்தியால் தான், சி.வி.சண்முகம் போன்ற மூத்த தலைவர்கள் ஒருபுறம் பகிரங்கமாகக் கண்டனம் தெரிவிக்க, மறுபுறம் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் போன்ற 'ஹெவி-வெயிட்' தலைவர்கள் மாற்றுப் பாதையைத் தேர்ந்தெடுத்துவிட்டார்கள் என்கிறார்கள் விபரமறிந்தவர்கள்.

    Advertisement

    ட்விட்டரில் 'க்ளூ' கொடுத்த சி.விஜயபாஸ்கர்!

    இந்த ஹாட் நியூஸ் காட்டுத்தீயாய் பரவிக்கொண்டிருக்கும் வேளையில், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் இன்று தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் ஒரு பதிவைப் போட்டுள்ளார். அதில் அவர், "எம்ஜிஆர், அம்மா காட்டிய வழியில் மக்கள் சேவையே என் என்றும் மாறாத லட்சியம். விராலிமலை தொகுதி மக்களின் நம்பிக்கையையும், என் மீது அன்பு கொண்ட தொண்டர்களின் விருப்பத்தையும் மதித்து என் அடுத்தகட்ட அரசியல் பயணம் அமையும்!" என்று குறிப்பிட்டுள்ளார்.

    இந்த ட்வீட்டைப் பார்த்த நெட்டிசன்களும் அரசியல் விமர்சகர்களும், "அண்ணன் ஓப்பனாகவே சொல்லிட்டார் பாஸ்... தொகுதி மக்கள் மற்றும் தொண்டர்களின் விருப்பப்படி அவர் தவெக-வில் இணைவது 100% கன்பார்ம்!" என்று கமெண்ட்களைத் தட்டி விடுகிறார்கள்.

    Advertisement

    ஜூன் 22-ல் கோட்டையை நோக்கிப் பாயப் போகும் இந்த 'இரட்டை விஜயபாஸ்கர்' அம்பு, தமிழக அரசியலில் என்ன மாதிரியான அதிரடிகளை நிகழ்த்தப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!

    English Summary

    Political circles are abuzz with reports that former AIADMK ministers C. Vijayabaskar and M.R. Vijayabaskar may resign from their MLA posts and join Tamilaga Vettri Kazhagam (TVK) on party leader Vijay’s birthday on June 22. The development, however, remains unconfirmed officially.