அண்ணன் அண்ணன்னு சொல்லியே.. பட்ஜெட்டில் மொத்தமாய் பல்ப் கொடுத்த விஜய்! புலம்பும் அக்கா - தங்கைகள்!

  • சென்னை: நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தலைமையிலான தமிழக அரசு தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறது. பட்ஜெட்டில் பல முக்கிய திட்டங்கள் இடம்பெறும் என பெண்கள் - குடும்ப தலைவிகள் எதிர்பார்த்த நிலையில் அதில் எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை என்ற குற்றச்சாட்டு சமூக வலைதளங்களில் எழுந்திருக்கிறது. குறிப்பாக அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் 2500 ரூபாய் நிதி உதவி, வீட்டுக்கு 6 சிலிண்டர் வீடு, தேடி ரேஷன் பொருள், முதியோர் தொகை 3000 உள்ளிட்ட திட்டங்கள் இடம் பெறவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

    Advertisement

    நடிகர் விஜய் தலைமையில் தமிழக அரசு அமைந்திருக்கும் நிலையில் தவெக அரசின் முதல் தமிழ்நாடு பொது பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. 2026 - 2027 ஆம் நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் மரியா வில்சன் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

    Advertisement

    இந்த பட்ஜெட்டில் பெண்களுக்கு தாலிக்கு தங்கம், சீமந்த பொருட்கள், கல்வி வேலை - வாய்ப்பு உள்ளிட்ட பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகி இருக்கின்றன. குறிப்பாக முதல்வர் விஜய் தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்க பட்ட படி அறிவித்தபடி சில திட்டங்களுக்கு பட்ஜெட்டில் செயல் வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது.

    விஜய் அரசு

    அந்த வகையில், மணப் பெண்களுக்கு திருமண நிதி உதவியாக 8 கிராம் தங்கம் - பட்டுப் புடவையும் வழங்கும் அண்ணன் சீர் திட்டம், அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம், நவீன சைக்கிள் வழங்கும் திட்டம், ஹஜ் மானியம் என பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

    Advertisement

    தமிழக பட்ஜெட்

    விஜய் அரசின் பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய திட்டங்கள் இடம் பெற்று இருந்தாலும், ஏற்கனவே தமிழக அரசு செயல்படுத்தி வென்ற திட்டங்களை மேம்படுத்தி புதிய திட்டங்களாக செயல்படுத்தப்படும் என தேர்தல் அறிக்கையில் விஜய் கூறியிருந்தார். அதாவது அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் 2500 ரூபாய், வேலையில்லா பட்டதாரிகளுக்கு 4000 ரூபாய், ஒவ்வொரு வீட்டுக்கும் 6 சிலிண்டர், வீடு தேடி ரேஷன் பொருள், முதியோர் தொகை முதியோர் உதவித்தொகை 3000, மாற்று திறனாளிகளுக்கு மாத ஓய்வூதியம் 3000, பழைய ஓய்வூதிய திட்டம், உப்பள தொழிலாளர்களுக்கு மழைக் கால நிவாரணத் தொகை 7000 என பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்படும் என விஜய் தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தார்.

    Advertisement

    தேர்தல் வாக்குறுதி

    ஆனால் எந்த திட்டமும் இடம்பெறவில்லை. மேலும் மீனவர்களுக்கு மீன்பிடி தடைக் கால நிவாரணத் தொகை 20,000. அரசு கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு கல்வி வாழ்வு நிதியாக 8,000, அனைத்து குடும்பங்களுக்கான 250000 ரூபாய் காப்பீடு, மாதம் ஒருமுறை மின்சார கட்டணம், 150 நாள் ஊரக வேலை உறுதித் திட்டம், சொத்துவரி குறைப்பு, என பல்வேறு திட்டங்கள் இடம்பெறும் என விஜய் அறிவித்திருந்தார்.

    பெண்கள் கோபம்

    இந்த நிலையில் இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் அதில் ஒரு திட்டம் கூட தற்போது நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதை அடுத்து சமூக வலைதளங்களில் விஜய் அரசுக்கு எதிராக சமூக வலைதளங்களில் பெரும்பாலானோர் தற்போது விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். குறிப்பாக பெண்கள் விஜய் அரசின் பட்ஜெட்டுக்கு கடும் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.

    English Summary

    Women question missing election promises after Vijay government's first Tamil Nadu Budget omitted key welfare schemes.