டிரேட் மார்க் செய்கை காட்டி.. இடைத்தேர்தல் வெற்றியை அமைச்சர்களுடன் சேர்ந்து கொண்டாடிய விஜய்

  • சென்னை: தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்களில் தவெக வெற்றி பெற்ற நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான விஜய் அமைச்சர்களோடு டிரேட் மார்க் செய்கையை காட்டி வெற்றியை கொண்டாடினார். அமைச்சர்கள் புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், அருண் ராஜ் ஆகியோரும் விஜய்யுடன் சேர்ந்து இதே செய்கையை காண்பித்தனர்.

    Advertisement

    மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் தவெக வேட்பாளர்கள் மரகதம் குமரவேல் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும், சத்தியபாமா 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றனர்.

    Advertisement

    இரு தொகுதிகளிலும் திமுக இரண்டாம் இடத்திலும், அதிமுக மூன்றாம் இடத்திற்கும் தள்ளப்பட்டது. அதே நேரத்தில் இரு கட்சிகளும் தவெகவுக்கு கடும் போட்டியையே அளித்தன. இரு கட்சிகளும் டெபாசிட் பெற்றன. இந்நிலையில் இடைத்தேர்தல் வெற்றியினை தமிழகம் முழுக்க தவெகவினர் கொண்டாடி வருகிறார்கள். மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் தவெகவினர் உற்சாகத்துடன் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

    தமிழக முதல்வர் விஜய்யும் இரு தவெக வேட்பாளர்களும் வெற்றி பெற்றதும் சென்னை தலைமை செயலகம் வந்தார். அப்போது அவர்களுக்கு அதிகாரிகள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதன் பிறகு அமைச்சர்கள் புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், அருண்ராஜ் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்தனர்.

    Advertisement

    இதையடுத்து விஜய்யும் அமைச்சர்களோடு இடைத்தேர்தல் வெற்றியை கொண்டாடினார். அப்போது விஜய் டிரேட் மார்க் செய்கையை காண்பித்தார். அவருடன் சேர்ந்து அமைச்சர்கள் புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், அருண்ராஜ் ஆகியோரும் அதே செய்கையை செய்து காண்பித்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

    English Summary

    Vijay celebrated the by election victory: Following TVK victory in the Dharapuram and Maduranthakam by-elections, the party's leader—and Chief Minister of Tamil Nadu—Vijay celebrated the win at the Chennai Secretariat by displaying his trademark gesture. Ministers Pussy Anand, Aadav Arjuna, Nirmal Kumar, and Arun Raj joined Vijay in making the same gesture.