விஜய் காதில் சந்திரபாபு நாயுடு நாயுடு ஓதிய பாஜக மந்திரம்? இந்த லாபக் கணக்கு புதுசா இருக்கே

  • சென்னை: விஜய், சந்திரபாபு நாயுடு சந்திப்பு இப்போது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
    இந்த சந்திப்பின் பின்னணியில் 2029 தேர்தல் கணக்குகள் முதல் மத்திய அரசுடனான உறவு வரை பல கேள்விகள் எழுகின்றன. விஜய்யின் அரசியல் நகர்வுகளில் ஆந்திராவைச் சேர்ந்தவர்களின் பங்கு என்ன? பிரியன் முன்வைக்கும் கருத்துகள் என்ன? அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்..!!

    Advertisement

    பிரபல சேனல் ஒன்றிற்கு மூத்த பத்திரிகையாளர் பிரியன் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அதில், "சந்திரபாபு நாயுடுவை விஜய் சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது. அந்த சந்திப்பில் என்ன பேசப்பட்டது என்பது வெளிப்படையாக தெரியவில்லை. ஆனால், மத்திய அரசுடன் இணக்கமாக செயல்படுவதன் மூலம் ஆந்திராவுக்கு கிடைக்கும் நன்மைகளை சந்திரபாபு நாயுடு, விஜய்யிடம் எடுத்துக் கூறியிருக்கலாம் என்று பேசப்படுகிறது.

    Advertisement

    விஜய் - சந்திரபாபு நாயுடு

    குறிப்பாக, "மத்திய அரசுடன் எல்லா நேரங்களிலும் மோதிக்கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. பாஜகவின் கொள்கைகளில் எதிர்க்க வேண்டிய விஷயங்கள் இருந்தால் எதிர்க்கலாம். அதே நேரத்தில், மாநிலத்தின் வளர்ச்சிக்கு தேவையான நிதியை பெறுவதற்காக மற்ற விவகாரங்களில் மத்திய அரசுடன் இணக்கமாக செயல்படலாம்.

    சினிமா புகழை மட்டுமே வைத்து நீண்ட காலம் அரசியலில் நிலைத்திருக்க முடியாது. மக்களுக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்தி சாதித்துக் காட்ட வேண்டும். அதற்கான நிதியைப் பெறுவதும் முக்கியம்.

    மத்தியில் யார்

    2029 தேர்தலில் விஜய் தனித்துப் போட்டியிட்டு சில இடங்களில் வெற்றி பெற்றாலும், மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி மாநிலத்துக்குத் தேவையானவற்றைப் பெறும் அணுகுமுறையை கையாள வேண்டும்.

    Advertisement

    பாஜகவின் கொள்கைகளில் எதிர்க்க வேண்டியவற்றை எதிர்த்துக்கொண்டே, மாநிலத்தின் நலனுக்காக மத்திய அரசுடன் இணக்கமாக செயல்பட வேண்டும்" என்ற ஆலோசனையை சந்திரபாபு நாயுடு விஜய்க்கு வழங்கியிருக்கலாம். இங்குதான் சந்திரபாபு நாயுடுவின் அரசியல் அனுபவம் முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.

    காங்கிரசுடன் உறவை தொடர்வாரா

    2029 தேர்தலில் விஜய் தனித்துப் போட்டியிடுவாரா, காங்கிரஸுடனான உறவை தொடர்வாரா அல்லது வேறு கூட்டணியை தேர்ந்தெடுப்பாரா என்ற கேள்விகளும் இருக்கின்றன. அவர் தனித்து போட்டியிட்டால், காங்கிரஸுக்கு செல்லக்கூடிய வாக்குகள் பிரியுமா? அப்படி நடந்தால் அது பாஜகவுக்கு சாதகமாக அமையுமா என்பதும் அரசியல் விவாதமாக இருக்கிறது. எனினும், இதை மட்டும் வைத்து விஜய் பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுவார் என்று முடிவு செய்ய முடியாது.

    Advertisement

    அதுமட்டுமல்லாமல், விஜய்யை சுற்றி ஆந்திராவை சேர்ந்தவர்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. விஷ்ணு ரெட்டி, சுஜல் ரெட்டி, அனில் ரெட்டி உள்ளிட்டவர்கள் விஜய்யுடன் நெருக்கமாக இருக்கிறார்கள். முக்கியமான அரசியல் முடிவுகளிலும் அவர்கள் பங்கு வகிக்கிறார்கள். அமைச்சரவை கூட்டங்களில்கூட அவர்கள் கலந்துகொள்கிறார்கள். விஷ்ணு ரெட்டி, ஜான் ஆரோக்கியசாமி ஆகியோர் அரசாங்க ஆலோசகர்களைப் போல செயல்படுகிறார்கள்.

    விஜய்யை சுற்றி ஆந்திரா நபர்கள்

    விஜய்யை சுற்றி ஆந்திராவை சேர்ந்தவர்களின் செல்வாக்கு அதிகமாக இருக்கிறது. இதனால், விஜய் ஆந்திராவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறாரா என்ற கேள்வி எழுகிறது. ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவுக்கு அரசியல் எதிரியாக இருக்கும் ஜெகன்மோகன் ரெட்டியும் விஜய்க்கு நெருக்கமானவர்.

    Advertisement

    இப்போது மத்தியில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. சந்திரபாபு நாயுடு பாஜகவுடன் நெருக்கமாக செயல்படுகிறார். விஜய்க்கு எதிர்காலத்தில் மாநிலத்தின் வளர்ச்சிக்குத் தேவையான நிதி உள்ளிட்ட உதவிகள் மத்திய அரசிடமிருந்து கிடைக்க வேண்டும் என்றால், மத்திய அரசுடன் இணக்கமான உறவை பேண வேண்டும்.

    ஜெகன்மோகன் ரெட்டி

    ஜெகன்மோகன் ரெட்டி மூலமாக பாஜகவுடன் உறவை வளர்த்துக்கொள்வதைவிட, பாஜகவுடன் நெருக்கமாக இருக்கும் சந்திரபாபு நாயுடு மூலமாக அணுகுவது விஜய்க்கு உதவியாக இருக்கும். இதற்கு விஷ்ணு ரெட்டி உள்ளிட்ட ஆந்திராவை சேர்ந்தவர்கள் உதவியாக இருக்கலாம்.

    சந்திரபாபு நாயுடுவுடனான சந்திப்பிலும் விஷ்ணு ரெட்டி உள்ளிட்டவர்களை பார்க்க முடிந்தது. விஜய்யை சுற்றி ஆந்திராவை சேர்ந்தவர்களின் செல்வாக்கு இருக்கும் நிலையில், எதிர்கால அரசியலுக்கு இந்தத் தொடர்புகள் உதவும் என்று விஜய் கருதுகிறாரா என்ற கேள்வி எழுகிறது. ஆந்திராவை சேர்ந்தவர்களின் ஆலோசனையின் அடிப்படையில் விஜய் அரசியல் நகர்வுகளை மேற்கொள்கிறாரா என்பதையும் கவனிக்க வேண்டும்.

    Advertisement

    எதிர்காலத்தில் விஜய் பாஜகவுடன் எத்தகைய உறவை பேணுவார், இந்தத் தொடர்புகள் அவரது அரசியல் முடிவுகளில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதுதான் முக்கியமான கேள்வி" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

    English Summary

    Chandrababu Naidu Vijay Meeting.. BJP Strategy Behind Their Political Talks Raises Questions