சென்னை: பாமக தலைவர் அன்புமணிக்கு முதல்வர் விஜய் தொலைபேசியில் அழைத்து பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். அதேபோல் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் தவெக வெற்றி பெற்றதற்கு அன்புமணி தரப்பில் முதல்வர் விஜய்க்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. தவெக - பாமக இடையிலான நெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து இருப்பதாகவும் பார்க்கப்படுகிறது.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் தவெக வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலமாக தவெக எம்எல்ஏ-க்கள் எண்ணிக்கை 109ஆக அதிகரித்துள்ளது. தாராபுரம் தொகுதியில் தவெகவுக்கு கடுமையான போட்டியை திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் கொடுத்திருந்தன. அதேபோல் அமைச்சர்கள் பட்டாளத்தையே இறக்கி தவெக தேர்தல் பணிகளை மேற்கொண்டது.
ஆனால் மதுராந்தகம் தொகுதியில் தவெகவின் வெற்றி கிட்டத்தட்ட முன்பே முடிவு செய்யப்பட்டுவிட்டது. அதற்கு வன்னியர்கள் வாக்கு தவெக பக்கம் சென்றதே காரணமாக அமைந்துள்ளது. அதிமுகவுக்கு ஆதரவு அளிக்காமல், இடைத்தேர்தலில் பாமக கையை தூக்கிவிட்டது. அதற்கு முன்பாகவே செளமியா அன்புமணியின் தந்தைக்கு தகைசால் தமிழர் விருதை முதல்வர் விஜய் வழங்கி இருந்தார். அப்போதே வன்னியர் வாக்கு வங்கிக்கு தவெக குறி வைப்பதாக பார்க்கப்பட்டது. இருப்பினும் விசிக கூட்டணியில் இருந்ததால், வன்னியர்கள் வாக்கு தவெக பக்கம் திரும்புமா என்ற கேள்வி எழுந்தது. தற்போது இடைத்தேர்தல் முடிவுகளில் வன்னியர்கள் வாக்கு தவெகவுக்கு அதிகளவில் கிடைத்ததால், எளிதாக தவெக வென்றுவிட்டது. அதிமுக 3வது இடம் சென்றதற்கும் வன்னியர்கள் ஆதரவு இல்லாததே முக்கிய காரணம். இந்த நிலையில் இடைத்தேர்தல் முடிவுகளுக்கு பின் பாமக தலைவர் அன்புமணிக்கு முதல்வர் விஜய் தொலைபேசியில் அழைத்து பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். அதேபோல் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் தவெக வெற்றி பெற்றதற்கு அன்புமணி தரப்பில் முதல்வர் விஜய்க்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தவெக - பாமக இடையிலான நெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து இருப்பதாகவும் பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கம்யூனிஸ்ட்டுகள் தவெகவுக்கு அளித்து வரும் ஆதரவை திரும்ப பெற உள்ளதாக பேச்சுகள் எழுந்துள்ளன. இதனால் கம்யூனிஸ்ட்டுகள் ஆதரவை திரும்ப பெற்றால், உடனடியாக பாமகவை கூட்டணிக்குள் கொண்டு வர தவெக திட்டமிடுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேபோல் விசிகவை கூட்டணியில் இருந்து வெளியேற்றும் முடிவில் இருக்கிறதா என்ற சந்தேகமும் அதிகரித்துள்ளது.