சினிமா பயணம் முதல் ஸ்டாலின் மீது அட்டாக் வரை.. எத்தனை நிமிடங்கள் சட்டசபையில் முதல்வர் விஜய் பேசினார்?

  • சென்னை: தமிழக சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான பதிலுரையில் முதல்வர் விஜய் சுமார் 45 நிமிடங்கள் பேசி இருக்கிறார். இதில் தன்னுடைய சினிமா காலம் தொடங்கி மக்கள் இயக்கம் செய்த பணிகளை விவரித்து, பின்னர் அரசியலில் இறங்கியது, ஆட்சியை பிடித்தது மற்றும் தற்போதைய மின்வெட்டு, டாஸ்மாக், விவசாயிகள் பிரச்சனை வரை பேசி இருக்கிறார்.

    Advertisement

    தவெக ஆட்சி அமைத்த பின் சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றது. இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நிறைவடைந்தது. இந்த விவாதங்களுக்குப் பதிலளித்து முதலமைச்சர் எஸ். ஜோசப் விஜய் சுமார் 45 நிமிடங்கள் அவையில் விரிவான மற்றும் அதிரடியான பதிலுரையை வழங்கினார்.

    Advertisement

    விஜய்யின் உரை, 1990களிலேயே ரசிகர் மன்றம் மூலமாக விஜய் மக்களுக்கு எப்படி சேவை செய்தார் என்பதில் தொடங்கியது. இதன்பின் ரசிகர் மன்றம் நற்பணி மன்றமாகவும், அது மக்கள் இயக்கமாகவும் மாற்றி என்னென்ன மக்கள் சேவையில் ஈடுபட்டது என்பதையும் எடுத்துரைத்தார். இடையில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக நடத்திய போராட்டம், மீனவர்களுக்கான நடத்திய போராட்டத்தையும் பேசினார்.

    இதன்பின் தவெக ஆட்சி அமைத்த 40 நாட்களில் என்னென்ன செய்திருக்கிறது என்பதையும் பட்டியலிட்டார். சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு திமுகவை சாடிய விஜய், 10 மாதங்களாக டிஜிபி நியமிக்கப்படாததேயும் சுட்டிக் காட்டினார். அதேபோல் விவசாயிகளுக்கான பயிர்க் கடன் தள்ளுபடியை எதிர்த்து நடக்கும் போராட்டங்கள் எதிர்க்கட்சிகளால் தூண்டிவிடப்பட்டவை என்றும் குற்றம்சாட்டினார்.

    Advertisement

    மின் வெட்டு பிரச்சனைக்கும் கடந்த காலங்களில் நடந்த நிர்வாக பிரச்சனையை காரணமாக சொன்ன விஜய், திடீரென கட்சி நிதி என்று டாஸ்மாக் கடைகளில் பெறப்பட்டதாகவும் எதிர்க்கட்சி மீது குற்றம்சாட்டினார். அப்போது எழுந்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தைரியம் இருந்தால் கட்சி பெயரை சொல்லுங்கள் என்று சவால் விடுத்தார்.

    இதனால் சுமார் 15 நிமிடங்கள் வரை சட்டசபையில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து திமுகவை கடுமையாக சாடிய விஜய், முன்னாள் முதல்வர் ஸ்டாலினின் தோல்வியையும் நக்கல் செய்தார். இறுதியாக ஃபினிஷ்டு என்று சைகை காட்டி இருக்கையில் அமர்ந்தார். மொத்தமாக விஜய்யின் உரை சுமார் 45 நிமிடங்கள் வரை நீடித்தது.

    English Summary

    Vijay: CM Vijay Delivers a Powerful 45-Minute speech in Tamil Nadu Assembly