தாய் மாமன் செண்டிமெண்ட்! நவம்பர் 14ல் 61.84 லட்சம் மாணவர்களுக்கு கேக் கொடுக்க விஜய் முடிவு.. பின்னணி

  • சென்னை: நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினத்தையொட்டி பள்ளி மாணவர்களுக்கு கேக் வழங்க முதல்வர் விஜய் முடிவு எடுத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதற்காக 45 கிராம் எடையுள்ள 61 லட்சத்து 84 ஆயிரத்து 566 கேக்குகளை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ரூ.9.27 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

    Advertisement

    அண்மையில் தமிழக முதல்வர் விஜய் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்மாமனாக மோதிரம் கொடுப்பதாக விஜய் கூறி இந்த திட்டத்தை அறிவித்து நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளார். அதேபோல் குழந்தைகள் தன்னை விஜய் மாமா என்று அழைக்குமாறும் தொடர்ச்சியாக அறிவுறுத்தி வருகிறார்.

    Advertisement

    பெண்களிடம் அண்ணன் என்று செண்டிமெண்டாக பேசி வரும் விஜய், குழந்தைகளிடம் மாமா என்று புதிய செண்டிமெண்ட்டை கடந்த ஓராண்டாக கூறி வருகிறார். தவெகவினரும் விஜய் மாமா என்றே குழந்தைகளிடம் கூறி வருகின்றனர். இந்த நிலையில் நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தின விழாவை தவெக அரசு மிகப்பெரிய அளவில் கொண்டாட முடிவு செய்துள்ளது.

    இதற்காக குழந்தைகள் தினத்தையொட்டி பள்ளி மாணவர்களுக்கு கேக் வழங்க முதல்வர் விஜய் முடிவு எடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் குழந்தைகள் தின விழாவை சிறப்பாக கொண்டாட உள்ளனர். அதன் ஒரு பகுதியாக குழந்தைகள் அனைவருக்கும் கேக் கொடுக்க உள்ளனர். இதற்காக ரூ.9.27 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

    Advertisement
    இந்தியாவை உச்சத்திற்கு கொண்டு சென்ற மோடியை வீழ்த்த முயற்சி நடக்கிறது! செர்பியா முன்னாள் அதிபர் கோபம்

    மொத்தமாக 61 லட்சத்து 84 ஆயிரத்து 566 கேக்குகளை தமிழக அரசு கொள்முதல் செய்ய உள்ளது. இந்த கேக்குகள் 30 நாட்களுக்கு காலாவதியாகாமல் இருகக் வேண்டும் என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மிக்ஸ்டு புரூட் கேக், கிளாசிக் வெண்ணிலா கேக், ரிச் சாக்லெட் கேக், பால் வகைகளில் கேக் விநியோகிக்கப்பட உள்ளது.

    தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் கேக் வழங்கப்பட உள்ளது. மறைந்த பிரதமர் நேருவை குழந்தைகள் மாமா என்று அழைத்து வருகின்றனர். தற்போது அதனை விஜய் கையில் எடுத்துள்ளதால், குழந்தைகளுக்கு கேக் விநியோகம் செய்ய முடிவு எடுத்துள்ளதாக சில தரப்பில் சொல்லப்படுகிறது. இதற்கான டெண்டர் நுகர்பொருள் வாணிப கழகம் மூலமாக டெண்டர் கோரப்பட்டுள்ளது. அக்டோபர் 17ஆம் தேதிக்குள் டெண்டர் அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    English Summary

    Vijay: CM Vijay Led Govt Allocates ₹9.27 Crore to Distribute Cakes to Over 61 Lakh School Students