3 பேரை நீக்க முடிவு.. லண்டனில் இருந்து திரும்பியதும் தவெக அமைச்சரவையை மாற்றும் விஜய்! லிஸ்டில் யார்?

  • சென்னை: தவெக ஆட்சி அமைத்து 4 மாதங்கள் முடிவடையும் சூழலில், 3 அமைச்சர்களை கழற்றிவிடும் முடிவுக்கு முதல்வர் விஜய் வந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. ஏற்கனவே 50 நாட்களில் அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து விஜய்க்கு ரிப்போர்ட் அளிக்கப்பட்டிருந்தது. தற்போது 100 நாள் ரிப்போர்ட்டிலும் அந்த 3 அமைச்சர்கள் துறை ரீதியான செயல்பாடுகளிலும் கோட்டைவிட்டதால், விஜய் ஆக்‌ஷன் எடுக்க தயாராகி வருகிறார்.

    Advertisement

    முதல்வர் விஜய் உட்பட மொத்தமாக அமைச்சரவையில் 35 பேர் இருக்கின்றனர். இதில் காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் 4 அமைச்சர்களை விடுத்தால், 31 பேர் இருக்கின்றனர். அவர்களின் துறை ரீதியிலான செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணிக்க முதல்வர் விஜய் உத்தரவிட்டிருந்தார். இதனால் முதல் ரிப்போர்ட் 50 நாட்கள் ஆட்சிக்கு பின் அளிக்கப்பட்டது.

    Advertisement

    அப்போதே அமைச்சரவை மாற்றம் தொடர்பாக சில தகவல் கசிந்தது. ஆனால் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் புதிதாக துறையை கவனிப்பதால், அவர்களுக்கு இன்னொரு வாய்ப்பு அளிக்கலாமே என்று முதல்வர் விஜய்யிடம் வேண்டுகோள் வைத்திருக்கின்றனர். இதனால் மனமிறங்கி வந்த விஜய், தற்போது 100 நாள் ரிப்போர்ட்டை பார்த்து டென்ஷனாகி இருக்கிறார்.

    ஏனென்றால் முதல் ரிப்போர்டில் மோசமாக இருந்த அமைச்சரின் செயல்பாடுகள், இப்போது இன்னும் மோசமாகி இருக்கிறது. இதனால் 3 அமைச்சர்களை கழற்றிவிடும் முடிவுக்கு விஜய் வந்துள்ளார். அந்த லிஸ்டில் முதலில் இருப்பது அமைச்சர் ஜெகதீஸ்வரி தான் என்கிறார்கள். பேனரில் தனது பெயரை முதலில் போடாதது ஏன் என ஆட்சியரிடமே கேட்டது, ஜட்டியோடு உட்கார வைத்து அடிப்பேன் என்று பேசி சர்ச்சையில் சிக்கினார்.

    Advertisement

    தொடர்ந்து மானியக் கோரிக்கை விவாதத்தில் வாசிக்கவே ஜெகதீஸ்வரி கஷ்டப்பட்டார். விருதுநகரில் உட்கட்சி பூசலும் உச்சத்தில் இருக்கிறது. சமூக நலத்துறை செயல்பாடுகளிலும் கோட்டைவிட்டிருக்கிறார். புஸ்ஸி ஆனந்த் மூலமாக ஏற்கனவே முதல்வர் விஜய் வார்னிங் கொடுத்ததாக சொல்லப்படுகிறது. ஆனாலும் அவரின் சேட்டைகள் தொடர்ந்து வருவதால், இந்த நடவடிக்கை பாயலாம் என்கின்றனர்.

    இந்த பட்டியலில் 2வது இடத்தில் இருப்பது கைத்தறி அமைச்சர் விஜய் பாலாஜி. இவரின் துறைக்குள் உறவினர் செய்யும் அதிகாரங்கள் முதல்வர் அலுவலகம் வரை பேசப்பட்டிருக்கிறது. அதேபோல் டெல்லி பயணத்தின் போது சில தொழிலதிபர்களையும் சந்தித்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதேபோல் வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளார்.

    Advertisement

    சட்டசபையில் காட்டுப்பன்றிகள் தொடர்பான விவாதத்தில் ரஞ்சித் குமார் அளித்த பதில் பலரையும் மிரள செய்துவிட்டது. அதனை உடனடியாக திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு திருத்தினார். இதனால் முதல்வர் விஜய் கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டதாக தெரிகிறது. இதனால் 3 பேரையும் லண்டனில் இருந்து திரும்பிய பின் அமைச்சரவையில் இருந்து நீக்கும் முடிவை விஜய் எடுப்பார் என்று சொல்லப்படுகிறது.

    இப்படி ஆக்‌ஷன் எடுப்பதன் மூலமாக ஜெயலலிதா பாணியில் செயல்படுகிறார் என்ற பிம்பத்தை விஜய்க்கு உருவாக்க முடியும் என்று ஜான் ஆரோக்கியசாமி தரப்பும் நம்புகிறது. ஆனால் அமைச்சரவையில் இருந்து 3 பேர் நீக்கம் குறித்த இறுதி முடிவை விஜய் இதுவரை எடுக்கவில்லை. இதனால் லண்டன் பயணத்திற்கு பின் மனம் மாறவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

    English Summary

    Vijay: CM Vijay Likely to Drop 3 Ministers Following Poor Performance Reports After 4 Months in Power