நேரடியாக நோ சொன்ன விஜய்! ராகுல் காந்தி வைத்த 3 கோரிக்கைகள்.. காங்கிரஸை அலட்சியமாக டீல் செய்யும் தவெக

  • சென்னை: மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி முன் வைத்த 3 கோரிக்கைகளையும் முதல்வர் விஜய் ஏற்கவில்லை என்று தகவல் வெளியாகி இருக்கிறது. குறிப்பாக தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக விஜய் குரல் கொடுக்க வேண்டும் என்றும், டெல்லிக்கு வந்து தவெக அமைச்சர்கள் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் ராகுல் காந்தி கேட்டதற்கு, விஜய் உறுதியாக எந்த பதிலையும் அளிக்கவில்லை என்று தெரிய வந்துள்ளது.

    Advertisement

    டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக தீவிர போராட்டம் நடைபெற்று வந்த சூழலில், சனிக்கிழமையன்று திடீரென ராகுல் காந்தி சென்னை வந்தார். ராகுல் காந்தி பயணத் திட்டத்தில் முதலில் முதல்வர் விஜய்யை சந்திப்பதாக இல்லை. ஆனால் மாணிக்கம் தாகூர் எப்படியோர் முதல்வர் விஜய்யிடம் அப்பாய்ண்ட்மெண்ட் வாங்கி ராகுல் காந்தி உடனான சந்திப்பை உறுதி செய்தார்.

    Advertisement

    இதன்பின் ராகுல் காந்தியை தனது வீட்டின் வாசல் வரை வந்து முதல்வர் விஜய் வரவேற்றார். இதன்பின் விஜய்யின் வீட்டில் தமிழ்நாட்டின் அரசியல் சூழல் பற்றி சிறிது நேரம் விவாதிக்கப்பட்டிருக்கிறது. இதன்பின் டெல்லியில் எஸ்ஐஆர், ஞானேஷ் குமார் மற்றும் பாஜகவுக்கு எதிராக நடந்து வரும் போராட்டம் குறித்து பேச்சு மாறியுள்ளது.

    பாஜகவுக்கு எதிராக இப்படியொரு எதிர்ப்பை கடந்த 12 ஆண்டுகளில் உருவாக்கியதில்லை. எஸ்ஐஆர்-க்கு எதிராக நீங்கள் அறிக்கை வெளியிட்டால் மட்டும் போதாது. ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி அழுத்தமான நடவடிக்கையை எதிர்பார்க்கிறோம். அதேபோல் தவெக அமைச்சர்களை டெல்லிக்கு அனுப்பி போராட்டத்தில் கலந்து கொள்ள சொல்லுங்கள் என்று கூறியுள்ளார்.

    Advertisement

    அதுமட்டுமல்லாமல் டெல்லிக்கு நேரில் வந்து இந்தியா கூட்டணி எம்பிக்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கோரி இருக்கிறார். அதற்கு விஜய் தரப்பில் எஸ்ஐஆர் விவகாரத்தில் ஏற்கனவே அறிக்கை வெளியிட்டுவிட்டோம். தவெக நிலைப்பாட்டையும் அறிவித்துவிட்டோம். மற்ற விஷயங்கள் தொடர்பாக ஆலோசனை செய்து பதில் சொல்கிறேன் என்று விஜய் பட்டும் படாமல் பதில் அளித்துள்ளார்.

    இதனால் ராகுல் காந்தியின் முகம் அங்கேயே மாறி இருக்கிறது. இந்த சந்திப்பின் போது பிரவீன் சக்கரவர்த்தியும் உடன் இருக்கவில்லை. இதனால் உணவு சாப்பிடும் போது கூட அமைதியே நிலவி இருக்கிறது. இதன்பின் கூட்டணியில் மனக்கசப்பு எதுவும் இல்லை என்பதை காட்டுவதற்காகவே ராகுல் காந்தி - விஜய் இருவரும் காபி ஷாட் சென்றிருக்கின்றனர்.

    Advertisement

    இதனால் காங்கிரஸ் கட்சியை தவெக தங்களின் ஸ்டைலில் டீல் செய்ய தொடங்கி இருப்பதாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அரசு வழக்கறிஞர்கள் நியமன விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியை தவெக கண்டுகொள்ளவே இல்லை. ராகுல் காந்தி நேரடியாக போராட்டத்திற்கு ஆதரவு கோரியும் விஜய் எந்த பதில் அளிக்கவில்லை. இதனால் பாஜகவை எதிர்த்து கொண்டு காங்கிரஸ் பக்கம் நிற்க தவெக தயங்குவதாக பார்க்கப்படுகிறது.

    English Summary

    Vijay: CM Vijay Refuses Rahul Gandhi Three Demands during the saturday meeting regarding SIR protest