கோலிவுட்டை கட்டுப்படுத்த ஜெகதீஷ் போடும் ரூட்..விஜய்யை சினிமா நட்சத்திரங்கள் சந்திப்பது ஏன்? பின்னணி

  • சென்னை: தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பின் சினிமா நட்சத்திரங்களை ஒவ்வொரு நாளும் சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்து வருகிறார். சாமானிய மக்களையோ, தவெக நிர்வாகிகளையோ விஜய் இதுவரை சந்திக்கவில்லை. இது ஒருபுறம் இருக்க, சினிமா நட்சத்திரங்கள் உடனான சந்திப்புக்கு பின் 'ரூட்' ஜெகதீஷ் இருப்பதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். சினிமாவில் தனது ஆதிக்கம் தொடர வேண்டும் என்பதற்காகவே ஜெகதீஷ், ஒவ்வொரு நாளும் விஜய்யை சினிமா நட்சத்திரங்கள் சந்திக்க ஏற்பாடுகளை செய்வதாக பேச்சுகள் எழுந்துள்ளன.

    Advertisement

    தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்து முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுள்ள நிலையில், கோட்டையிலும் அவரது இல்லத்திலும் அரங்கேறி வரும் தொடர் சந்திப்புகள் தற்போதைய அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளன. முதலமைச்சராகப் பதவியேற்றது முதல், விஜய் தினந்தோறும் சினிமா துறையைச் சேர்ந்த நட்சத்திரங்கள், இயக்குநர்களை சந்தித்து வருகிறார்.

    Advertisement

    இந்தத் தொடர் சந்திப்புகளுக்குப் பின்னால் இருக்கும் அரசியல் மற்றும் திரைமறைவு வியூகங்கள் குறித்து தற்போது பல அதிரடித் தகவல்கள் வெளியாகத் தொடங்கியுள்ளன. முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றவுடன், தங்களின் குறைகளைத் தீர்க்க மக்கள் அவரை எளிதில் அணுகலாம் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போதைய கள நிலவரம் வேறுபாடாக இருப்பதாகக் குமுறல்கள் எழுந்துள்ளன.

    கட்சியின் வெற்றிக்காகத் தேர்தல் களத்தில் இரவு பகலாக உழைத்த தவெகவின் அடிமட்டத் தொண்டர்களும், மாவட்ட நிர்வாகிகளும் கூட தங்களின் தலைவரைச் சந்தித்து வாழ்த்துப் பெற முடியாமல் தவித்து வருவதாக உள்கட்சி வட்டாரங்களிலேயே சலசலப்பு ஏற்பட்டுள்ளது. சினிமா நட்சத்திரங்கள் தினந்தோறும் வரிசையாக வந்து முதலமைச்சர் விஜய்யைச் சந்திப்பதன் பின்னணியில், 'ரூட்' ஜெகதீஷ் பழனிசாமி இருந்து வருகிறார்.

    Advertisement

    சினிமா துறையில் தனது தனிப்பட்ட செல்வாக்கையும் ஆதிக்கத்தையும் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள ஜெகதீஷ் முயல்வதாகக் கூறப்படுகிறது. இதற்காகவே, தனது 'தி ரூட்' நிறுவனத்தின் மூலம் பல்வேறு சினிமா பிரபலங்களை ஒருங்கிணைத்து, தினந்தோறும் அவர்கள் விஜய்யைச் சந்திப்பதற்கான ஏற்பாடுகளை அவர் முன்னின்று செய்து வருவதாகப் பேச்சுகள் எழுந்துள்ளன.

    அரசியல் ரீதியாகப் பொதுமக்களைச் சந்திப்பதை விட, சினிமா நட்சத்திரங்களின் சந்திப்புகள் மூலம் முதலமைச்சரை எப்போதும் சமூக வலைதளங்களில் டிரெண்டிங்கில் வைத்திருக்க ஜெகதீஷின் டிஜிட்டல் குழு திட்டமிட்டுச் செயல்படுவதாகவும் ஒரு தரப்பினர் குற்றம் சாட்டுகின்றனர். இப்படி சந்திக்க வைப்பதன் மூலமாக ரூட் நிறுவனத்தில் இன்னும் பல நட்சத்திரங்களை இணைக்க முடியும் என்று ஜெகதீஷ் நம்புகிறார்.

    Advertisement

    ரூட் நிறுவனம் சினிமா நட்சத்திரங்களுக்கு மேனேஜர் மட்டுமல்லாமல், சோசியல் மீடியா பக்கங்களையும் டேக் ஓவர் செய்து அவர்களுக்கு பணியாற்றி வருகிறது. ஒவ்வொரு நாளும் என்ன மாதிரியான புகைப்படங்கள் பதிவிட வேண்டும், எங்கு டூர் செல்ல வேண்டும், என்ன நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும், என்ன பேச வேண்டும் என்று நட்சத்திரங்களின் முழு கட்டுப்பாட்டையும் எடுத்துள்ளது. ஏற்கனவே ரூட் நிறுவனம் தயாரிப்பிலும் இறங்கிவிட்ட சூழலில், வரும் நாட்களில் அது மேலும் வளர்ச்சியடையக் கூடும் என்று பார்க்கப்படுகிறது.

    English Summary

    Vijay: CM Vijay’s Daily Celebrity Meets: Is Manager Jagadish Leveraging the CM Office to Control Kollywood