நம்ம ஊர்ல இதை செய்ய முடியுமா? வெளிநாடு வீடியோவை காட்டிய விஜய்.. ஆய்வு கூட்டத்தில் சுவாரஸ்யம்!

  • சென்னை: நகர்புற வளர்ச்சி சாலை உள்ளிட்ட உட்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்துவதில் முதல்வர் மிகவும் ஆர்வமாக உள்ளதாக தெரிய வந்துள்ளது. ஒரு துறையின் ஆய்வுக் கூட்டத்தில் வெளிநாடுகளில் உள்ள ஒரு திட்டம் தொடர்பான வீடியோவை அதிகாரிகளுக்கு போட்டு காட்டி அது போன்ற திட்டங்களை செயல்படுத்த முடியுமா என்று விஜய் கேட்டுள்ளதாக தகவல் வெளி வந்துள்ளது.

    Advertisement

    முதல்வர் விஜய் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டத்தை நடத்தி வருகிறார். விரைவில் பட்ஜெட் தயாரிப்பு பணிகள் தொடங்கப்பட உள்ள நிலையில், அதற்கான குறிப்புகளையும் முதல்வர் விஜய் எடுத்து வருவதாக சொல்லப்படுகிறது. காலையில் 11.30 முதல் 12.30 மணி வரை இந்த ஆய்வுக் கூட்டம் நடக்கிறது.

    Advertisement

    அதேபோல் மதியம் 2.30 மணிக்கு ஆய்வுக் கூட்டம் மீண்டும் நடக்கிறது. கூட்டம் நடைபெறும் நாளுக்கு 2 நாட்களுக்கு முன்னதாக துறை ரீதியான தகவல்கள், PPT யை முதல்வர் அலுவலகத்தில் வழங்க வேண்டும் என்று முன்பே உத்தரவிடப்பட்டது. இதனால் ஆய்வுக் கூட்டத்தில் எந்தவித தாமதமும் இதுவரை நடக்கவில்லை. இந்த ஆய்வுக் கூட்டத்தில் செயல்படுத்த முடியாத திட்டங்கள் குறித்தும் முதல்வர் விஜய்க்கு சொல்லப்படுகிறது.

    அதேபோல் முதல்வர் விஜய் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் தீவிரமாக இருக்கிறார். நகரங்களுக்கு இணையாக கிராமங்களிலும் சாலை, குடிநீர் உள்ளிட்ட கட்டமைப்பு முறையாக செய்யப்பட வேண்டும் என்பதில் விஜய் தீவிரமாக இருக்கிறார். இதனிடையே விஜய் தலைமைச் செயலகத்திற்கு வரும் போதே சில தயாரிப்பு பணிகளுடன் வருவதும் தெரிய வந்துள்ளது.

    Advertisement

    வெளிநாடுகளில் செயல்படுத்தப்படும் சில உட்கட்டமைப்பு வசதிகளின் வீடியோக்களை அரசு அதிகாரிகளிடம் காட்டி, இதனை தமிழ்நாட்டில் செயல்படுத்துவது சாத்தியமா? அதற்கான தேவைகள் என்ன? எவ்வளவு செலவு ஆகும் என்றெல்லாம் கேட்பதாக தெரிய வந்துள்ளது. தவெக தேர்தல் வாக்குறுதியிலேயே மக்களின் அடிப்படை தேவைகள் முழுமையாக பூர்த்தி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

    அதற்கான பணிகளில் விஜய் மும்முரமாக இருப்பதாக தெரிகிறது. அதேபோல் தவெக அரசு அமைந்த பின் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் என்பதால், அனைத்து தரப்பினரும் மத்தியில் பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும் தவெக ஆட்சியில் புதிதாக என்ன திட்டங்கள் அறிவிக்கப்படும் என்ற பேச்சுகளும் அதிகரித்துள்ளன.

    English Summary

    Vijay: CM Vijay Shows Foreign Project Video to Officials to Drive Smart Infrastructure Shift in Tamilnadu