10 மாதங்களுக்கு பின் கரூர் செல்லும் விஜய்.. என்னென்ன நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்? முழு பின்னணி

  • சென்னை: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் நடந்து 10 மாதங்களுக்கு பின் விஜய் மீண்டும் நாளை கரூருக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த நிலையில் கரூரில் நாளை முதல்வர் விஜய் என்னென்ன நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

    Advertisement

    2025ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள், முதியோர் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தேசிய அளவில் கவனத்தை பெற்றது. இந்த வழக்கை உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் மேற்பார்வையில் சிபிஐ விசாரித்து வருகிறது.

    Advertisement

    இந்த வழக்கில் தவெகவின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சிடிஆர் நிர்மல்குமார் மற்றும் கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் ஆகியோர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. தவெக தலைவர் விஜய்யிடமும் 2 நாட்கள் சிபிஐ விசாரணையை நடத்தியது. இந்த சம்பவத்திற்கு பின் விஜய் கரூர் பக்கமே செல்லவில்லை.

    சட்டசபைத் தேர்தல் பிரச்சாரத்திற்காக கூட விஜய் கரூர் செல்லவில்லை. இதன்பின் முதல்வரான விஜய், தற்போது முதல்முறையாக கரூர் செல்கிறார். ஏற்கனவே நாளை (ஜூலை 10) கரூர் செல்ல உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான ஏற்பாடுகளை கட்சியினரும், அரசு அதிகாரிகளும் மேற்கொண்டு வந்தனர்.

    Advertisement

    இதனிடையே கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசுப் பணிக்கான ஆணையை விஜய் வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இந்த நிலையில் நாளை கரூரில் முதல்வர் விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சி குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

    • அதன்படி கரூர் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம், மனவாசி ஊராட்சியில் ரூ.1,700 கோடி மதிப்பீட்டில் தோல் அல்லாத காலணி செய்யும் Evervan Kothari Footwear Private Limited என்ற புதிய தனியார் தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டு விழா நடக்கவுள்ளது. இந்த தொழிற்சாலையின் மூலமாக சுமார் 13,500 பேர் வேலைவாய்ப்பை பெறுவார்கள்.
    • தொடர்ந்து பல்வேறு அரசுத் துறைகளின் கீழ் பணியாற்றும் வகையில் 32 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை முதல்வர் விஜய் வழங்க உள்ளார்.
    • இதன்பின் தனியார் கல்லூரி மைதானத்தில் தவெக சார்பாக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க 5 ஆயிரம் பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடங்கி அடிப்படை வசதிகள் வரை அனைத்தும் தவெகவினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • அதுமட்டுமல்லாமல் கரூரில் விஜய் ரோடு ஷோ செல்ல உள்ளதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை.

    English Summary

    Vijay: CM Vijay to Deliver Government Employment Letters to 32 Karur Stampede Victim Families tomorrow