செப்.17ல் விருதுநகர் வரும் விஜய்.. காலை உணவு திட்டம் விரிவாக்கம்.. தயாராகும் கீர்த்தனா, ஜெகதீஸ்வரி!

  • சென்னை: காலை உணவு திட்டம் விரிவாக்கத்தை செப்டம்பர் 17ஆ,ம் தேதி விருதுநகரில் உள்ள காமராஜர் பயிற்சி கேவிஎஸ் நடுநிலைப் பள்ளியில் முதல்வர் விஜய் தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. முதல்முறையாக விருதுநகர் மாவட்டத்திற்கு விஜய் வருவதால், தவெகவினர் பிரம்மாண்ட வரவேற்பை அளிக்க முடிவு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

    Advertisement

    2022ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் ஸ்டாலினால் காலை உணவுத் திட்டம் மதுரையில் தொடங்கி வைக்கப்பட்டது. 1 முதல் 5 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டது. அந்த திட்டத்திற்கு முதலமைச்சர் காலை உணவு திட்டம் என்று பெயர் சூட்டப்பட்டது. இந்த திட்டத்தை பல்வேறு மாநிலங்களும் நகலெடுக்க தொடங்கியுள்ளன.

    Advertisement

    இந்த நிலையில் தவெக ஆட்சி பொறுப்பேற்ற பின், காலை உணவு திட்டத்தை விரிவாக்கம் செய்வதாக அறிவித்தது. அதேபோல் முதலமைச்சர் காலை உணவு என்ற பெயரை, காமராஜர் காலை உணவு திட்டம் என்று மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் காலை உணவு திட்டம் விரிவாக்கத்தை செப்டம்பர் 17ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட உள்ளது.

    பெரியார் பிறந்தநாளன்று முதல்வர் விஜய் இந்த திட்டத்தை விரிவாக்கம் செய்ய உள்ளார். இதனை விருதுநகரில் காமராஜர் படித்த கேவிஎஸ் நடுநிலைப் பள்ளியில் விஜய் விரிவாக்கம் செய்து வைக்கிறார். இதற்காக முதல்வர் விஜய் செப்டம்பர் 17ஆம் தேதி விருதுநகர் செல்ல இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகின்றன.

    Advertisement

    தவெகவை தொடங்கியதில் இருந்தே விஜய் விருதுநகர் மாவட்டம் செல்லவில்லை. தேர்தல் பிரச்சாரத்தின் போது கூட விருதுநகர் வரவில்லை. தற்போது முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பின் முதல்முறையாக விருதுநகர் வர இருக்கிறார். ஏற்கனவே விருதுநகரில் கீர்த்தனா மற்றும் ஜெகதீஸ்வரி ஆகிய அமைச்சர்கள் இருக்கின்றனர்.

    இதனால் முதல்வர் விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க தவெகவினர் முடிவு செய்துள்ளனர். அதேபோல் செப்டம்பர் 17ஆம் தேதி மதுரையில் மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. இந்த விழாவில் விஜய் பங்கேற்க உள்ளதாகவும் பேச்சுகள் எழுந்துள்ளன. இதனால் விஜய்யின் பயணத் திட்டம் குறித்து விவாதம் அதிகரித்துள்ளது.

    English Summary

    Vijay: CM Vijay to Launch Expanded Breakfast Scheme in Virudhunagar on September 17