'கடும் தண்டனை பெற்றுத் தரப்படும்.. கோவை சிறுமியின் பெற்றோரிடம் போனில் பேசிய முதல்வர் விஜய்

  • சென்னை: கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோருடன் தொலைபேசியில் பேசி முதல்வர் விஜய் ஆறுதல் தெரிவித்துள்ளார். மேலும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும் சிறுமியின் பெற்றோரிடம் உறுதியளித்துள்ளார்.

    Advertisement

    கோவை அருகே உள்ள சூலூர் பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி, பக்கத்து வீட்டில் வசித்த கொடூரனால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் இருவரை கைது செய்தனர்.

    Advertisement

    சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணையை தொடங்கிய போலீசார், சிறுமியை பைக்கில் கடத்தி சென்ற பக்கத்து வீட்டை சேர்ந்தவரும், நாகையை சேர்ந்தவருமான கார்த்திக் ( வயது 33) என்பவரையும் அவருக்கு உதவிய மோகன் ராஜ் என்பவரையும் கைது செய்தனர். போலீசாரின் பிடியில் இருந்து தப்ப முயன்ற கார்த்தி கை மற்றும் காலில் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    தற்போது இருவரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், சிறுமி கொலை விவகாரத்தில் குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்று தரப்பும் என்று முதல்வர் விஜய் உறுதி அளித்து இருந்தார். இந்த நிலையில், சிறுமியின் பெற்றோரை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட முதல்வர் விஜய், பெற்றோருக்கு ஆறுதல் கூறியுள்ளார். மேலும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தரப்படும் என்று பெற்றோரிடம் முதல்வர் விஜய் உறுதியளித்துள்ளார்.

    English Summary

    Vijay spoke to the parents of the Coimbatore girl murder victim over the phone and offered his condolences. He assured them that the accused would face strict punishment and promised firm action in the case.