ஃப்ளைட்டுக்கு டாடா காட்டுறீங்க.. ஆம்புலன்ஸுக்கு வழி விட மாட்றீங்க! யாருய்யா நீங்கல்லாம்? கொடுமை!

  • சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்தை தொடங்கி வைக்க மதுரை சென்றார். சென்னை கிளம்பியதில் இருந்து மீண்டும் சென்னை வந்தது வரை ரிலீஸ் போட்டு மாஸ் காட்டி வருகின்றனர் தமிழக வெற்றி கழகத்தினர். உச்சபட்சமாக மதுரையிலிருந்து விஜய் புறப்பட்டுச் சென்ற தனியார் ஜெட் விமானத்துக்கு டாட்டா காட்டினர் தமிழக வெற்றி கழகத்தினர்.

    Advertisement

    சென்னை வந்ததும் முதல்வர் விஜயின் கான்வாய் செல்வதற்காக பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் ஆம்புலன்ஸ்கள் அடுத்தடுத்து காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இது சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    Advertisement

    2026 தமிழக சட்டசபை தேர்தலில் முதல்வர் விஜய் பிரச்சாரம் செய்த போது அளித்த வாக்குறுதிகளில் முக்கியமானது தாய்மாமன் தங்க மோதிர திட்டம். அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.

    தாய்மாமன் தங்க மோதிரம்

    தொடர்ந்து தேர்தலில் வெற்றி பெற்று முதல்வரான நிலையில் கடந்த சட்டசபையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் தொடர்பான அறிவிப்பு இடம் பெற்றது. பின்னர் இதற்கான டெண்டர் விடப்பட்டு தங்க மோதிரங்கள் தயார் செய்யப்பட்டு தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கிடையே நேற்று மதுரையில் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய். இதற்காக தனி விமான மூலம் மதுரை சென்றார்.

    Advertisement

    முதலமைச்சர் விஜய்

    முதலமைச்சர் விஜய் வீட்டில் புறப்பட்டதிலிருந்து விமான நிலையம் சென்றது, விமானத்தில் பயணித்தது, மதுரை வந்து இறங்கியது, அங்கிருந்து ஊர்வலமாக ராஜாஜி மருத்துவமனைக்குச் சென்றது, மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றது, பின்னர் சென்னை திரும்பியது வரை ஊடகங்கள் நேரலை செய்தன. அதைவிட அதிகமாக விஜயின் ஒவ்வொரு நகர்வையும் ரீல்ஸ் போட்டு டிரெண்டாக்கினர் தமிழக வெற்றிக் கழகத்தினர்.

    திணறிய மதுரை

    விஜய் நின்றார், விஜய் நடந்தார், விஜய் அமர்ந்தார், குழந்தை சிரித்தது, கேட்ச் பிடித்தார் என விதவிதமாக ரீல்ஸ்கள் இருந்தன. அதே நேரத்தில் விஜயின் பயணத்தால் மதுரை ஸ்தம்பித்தது என்று தான் சொல்ல வேண்டும். பல இடங்களில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகினர். மேலும் மதுரை மீனாட்சியம்மன் கோவில் முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதால் பக்தர்களும் இன்னலுக்கு ஆளாகினர்.

    Advertisement

    விமானத்துக்கு டாட்டா

    இதற்கிடையே மதுரையிலிருந்து முதலமைச்சர் விஜய் தனது தனி விமானத்தில் சென்னைக்கு புறப்பட்டார். விமான நிலையத்திலிருந்து விமானம் வானில் பறந்த போது அங்கு காத்திருந்த தமிழக வெற்றிக் கழகத்தினர் விமானத்துக்கு டாட்டா காட்டி வழி அனுப்பி வைத்தனர். இது ஒரு புறம் வைரலாக பரவினாலும், மறுபுறம் கடும் விமர்சனத்தை பெற்றிருக்கிறது.

    ஜெயலலிதா

    அதிமுக ஆட்சி காலத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஹெலிகாப்டரில் நிகழ்ச்சி நடைபெறும் மைதானத்திற்கு வந்தால் வானத்தைப் பார்த்து கும்பிடுவார்கள் முன்னாள் அமைச்சர்கள். தற்போது தமிழக வெற்றி கழகத்தினரும் அதே போல செய்து வருவதாக விமர்சனம் எழுந்திருக்கிறது. மறுபுறம் சென்னை வந்ததும் முதல்வர் விஜய் கான்வாய் செல்வதற்காக போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    Advertisement

    சிக்கிய ஆம்புலன்ஸ்கள்

    நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலைக்கு வாகன ஓட்டிகள் தள்ளப்பட்டனர். இந்த நிலையில் போக்குவரத்து நெரிசலுக்கு இடையே அடுத்தடுத்து ஆம்புலன்ஸ்கள் சிக்கியது. அலாரத்தை ஒலித்தபடி முன்னேறிச் செல்ல முயன்றும் போக்குவரத்து நெரிசலால் குறித்த நேரத்திற்கு ஆம்புலன்ஸ் செல்லவில்லை என சொல்லப்படுகிறது. தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வரும் நிலையில் கடும் விமர்சனத்தை பெற்றிருக்கிறது.

    English Summary

    Traffic restrictions during CM Vijay’s convoy reportedly delayed ambulances in Chennai, sparking criticism on social media after his Madurai visit.