கர்நாடகா பயணம்.. உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்.. கடைசி வரை பிடிவாதம் காட்டிய விஜய்.. என்ன நடந்தது?

  • சென்னை: காவிரி விவகாரம் தொடர்பாக முதல்வர் விஜய் பெங்களூர் வரும் போது, அவருக்கு கருப்புக் கொடி காட்ட கர்நாடகா அமைப்புகள் திட்டமிட்டிருந்ததாக உளவுத்துறை 2 நாட்களுக்கு முன்பே ரிப்போர்ட் கொடுத்திருக்கிறது. இதனால் விஜய் பயணத்தை ரத்து செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் விஜய் பிடிவாதமாக பயணத்தை ரத்து செய்யாமல் அமைதி காத்ததே தமிழ்நாட்டிற்கு பின்னடைவாக மாறி இருக்கிறது.

    Advertisement

    காவிரி நதிநீர் பிரச்சனையில் தமிழகத்தின் உரிமையை பெறுவதற்காக ஆகஸ்ட் 3-ந்தேதி பெங்களூருக்கு முதல்வர் விஜய் செல்வதாக சொல்லப்பட்டிருந்தது. இதனை கர்நாடக முதல்வர் சிவக்குமார், பெங்களூருக்கு விஜய் வருவதை உறுதிப்படுத்தும் வகையில் கருத்துச் சொல்லியிருந்தார். பெங்களூருக்கு விஜய் செல்வதை தமிழக அரசியல் கட்சிகளும், தமிழக விவசாய அமைப்புகளும் கடுமையாக எதிர்த்தன.

    Advertisement

    பெங்களூருக்கு முதல்வர் செல்லக் கூடாது என்றும் தொடர்ச்சியாக வலியுறுத்தின. இதன் மீது கவனம் செலுத்திய முதல்வர் விஜய், அது குறித்து விவாதிக்கவும் செய்தார். இந்த நிலையில், காவிரி நதிநீர் விசயமாக பெங்களூருக்கு விஜய் வரும் போது அவருக்கு கருப்புக் கொடி காட்ட கர்நாடகாவில் சில அமைப்புகள் திட்டமிடுவதாக தமிழக உளவுத்துறையினர் விஜய்க்கு ரிப்போர்ட் அனுப்பியிருந்தனர்.

    விஜய்யின் ஆலோசகர்களிடமும் இதனை விவரிக்கவும் செய்தது உளவுத் துறை. இதனையடுத்து பெங்களூர் பயணத்தை விஜய் ரத்து செய்வார் என்கிற எதிர்பார்ப்பு அதிகாரிகளிடம் இருந்தது. ஆனாலும், இறுதி முடிவை விஜய் எடுக்காமல் இருந்திருக்கிறார். இப்படியான சூழலில், கர்நாடகாவில் சூழல் சரியில்லாததால் இப்போதைக்கு விஜய் வரவேண்டாம்.

    Advertisement

    தனது பெங்களூர் பயணத்தை விஜய் ரத்து செய்வது நல்லது என்கிற ரீதியில் கர்நாடக முதல்வர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். அதனால் விஜய்யின் பயணம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. காவிரி மேலாண்மை ஆணையம் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டும், கர்நாடகா தண்ணீர திறக்க முடியாது என்று அறிவித்தது. இருப்பினும் கர்நாடகா செல்லும் முடிவை கைவிடாததே விஜய்க்கு பின்னடைவாக மாறி இருக்கிறது.

    காவிரி விவகாரத்தில் கர்நாடகாவிடம் எந்தவித பேச்சுவார்த்தையும் செய்ய வேண்டிய தேவை தமிழ்நாட்டிற்கு இல்லை. இருப்பினும் முதல்வர் விஜய் அலுவலகத்தில் இருந்து கர்நாடகா தலைமைச் செயலாளரை அணுகி பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டிருக்கிறது. முதலில் விஜய்யை வரவேற்ற கர்நாடகா முதல்வரே, கடைசி நேரத்தில் வர வேண்டாம் என்று கேட்டை பூட்டிவிட்டார்.

    Advertisement

    உளவுத்துறை முன்கூட்டியே கர்நாடகாவில் விஜய்க்கு எதிர்ப்பு எழுந்துள்ளதை கூறிவிட்ட பிறகும், அவர் கடைசி வரை பயணத்தை ரத்து செய்யாமல் இருந்திருக்கிறார். இதனால் விஜய்யின் அணுகுமுறை காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

    - சிறப்பு நிருபர் எழில்

    English Summary

    Vijay: Despite Protests Warning, CM Vijay Refusal to Cancel Bengaluru Visit Termed Setback for Tamilnadu