சென்னை: நடிகரும், தமிழக முதல்வருமான விஜய் ஒரு பிரபல நடிகையுடன் திருமணத்தைத் தாண்டிய உறவில் இருந்ததாக, அவரது மனைவி சங்கீதா தாக்கல் செய்த விவாகரத்து மனுவில் 11 பாயிண்டில் குறிப்பிட்டுள்ளார். இந்தத் தொடர்பு தமக்கு ஏப்ரல் 2021-ல் தெரியவந்ததாகவும், அதன்பிறகும் விஜய் அந்தத் தொடர்பைத் தொடர்ந்ததால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் அவர் அந்த மனுவில் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அதனை குறிப்பிட்டு திமுக என்ஆர்ஐ விங் 11வது பாயிண்ட்டில் குறிப்பிட்டு, அது யார்? என கேள்வி எழுப்பியுள்ளது.
கடந்த பல ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் அதிகம் கொண்டாடப்பட்ட குடும்பங்களில் விஜய் மற்றும் சங்கீதா தம்பதியினரும் ஒன்றாக இருந்து வந்தனர். 1999-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
நீண்டகாலமாக இணைந்து வாழ்ந்து வந்த இந்த தம்பதியரைப் பற்றி கடந்த சில ஆண்டுகளாகவே பல்வேறு வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவி வந்தன. இந்த நிலையில், சங்கீதா தரப்பில் விவாகரத்து மனு தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 24-ஆம் தேதி, சங்கீதா தரப்பில் செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. அதோடு நிரந்தர ஜீவனாம்சமும் கோரப்பட்டிருந்தது. அவர் தாக்கல் செய்த வழக்கு செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றம் முன் தாக்கல் செய்யப்பட்டதாகவும், பின்னர் அது குடும்ப நல நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. சுமார் 27 ஆண்டுகளாக நீடித்த மணவாழ்க்கைக்கு பின் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரம் வெளியானது. சங்கீதா தனது மனுவின் 11 பாயிண்டில் 2021 ஏப்ரல் மாதம் முதல் எதிர்மனுதாரர் (விஜய்) ஒரு நடிகையுடன் கொண்டுள்ள நெருக்கமான தொடர்பே குடும்பப் பிளவுக்கு முக்கியக் காரணம் எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரம் தனக்கு மிகுந்த மன உளைச்சலையும், ஏமாற்றத்தையும் அளித்ததோடு, பொதுவெளியில் பெரும் அவமானத்தை ஏற்படுத்தியதாகவும் அவர் புகார் தெரிவித்துள்ளார். குறிப்பாக, அந்த நடிகை சமூக வலைதளங்களில் வெளியிட்ட பதிவுகள் தங்களையும் பிள்ளைகளையும் பாதித்ததாகக் கூறியுள்ளார். கடந்த 2021 முதல் விஜய் தன்னை உணர்வு ரீதியாகவும், உடல் ரீதியாகவும் புறக்கணித்து வருவதாகவும், தற்போது ஒரே வீட்டில் இருந்தாலும் இருவரும் தனித்தனியாகவே வாழ்வதாகவும் (Constructive Desertion) அவர் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், இந்நிலையில் அதனை குறிப்பிட்டு திமுக என்ஆர்ஐ விங் 11வது பாயிண்ட்டைக் குறிப்பிட்டு, அது யார்? என கேள்வி எழுப்பியுள்ளது. அதில், விவாகரத்துக் கேட்டு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கும் பெண் ஒருவர், 11வது பாயிண்ட்டில் ஒரு விஷயத்தை சொல்லியிருக்கிறார். விவரம் அறிந்தவர்கள் அது யார் என்று விளக்கவும்.." என கூறியுள்ளது.