டிராக்டர் ஓட்டி.. டீ குடித்து வாக்கு சேகரித்த விஜய்! இடைத்தேர்தலுக்கு ரொம்ப மெனக்கெடும் முதல்வர்

  • சென்னை: மதுராந்தகம் தொகுதியில் இன்று மக்களை சந்தித்த முதலமைச்சர் விஜய் டிராக்டர் ஓட்டியும், மக்களோடு சேர்ந்து டீக்கடையில் டீ குடித்தும் வாக்கு சேகரித்தார். 2026 சட்டமன்ற தேர்தலுக்கு பல இடங்களில் பரப்புரையை ரத்து செய்த விஜய், இடைத்தேர்தலுக்கு மெனக்கெடுவது ஏன்? வழக்கமாக முதல்வராக இருப்பவர்கள் இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்ய மாட்டார்கள். ஆனால் விஜய் ஏன் இப்படி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்? என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

    Advertisement

    மதுராந்தகம் மற்றும் தாராபுரம் அதிமுக எம்எல்ஏக்களான மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா ஆகியோர் ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். இதன் காரணமாக 2 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

    Advertisement

    தேர்தலில் தவெக சார்பில் மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா ஆகியோருக்கு சீட் வழங்கப்பட்டிருந்தாலும், அதை கம்யூனிஸ்ட் கட்சிகள் ஏற்கவில்லை. ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளும் அளவுக்கு தவெகவுக்கு பலம் இருக்கிறது. கூட்டணி கட்சிகளும் இடையில் கழற்றிக்கொண்டு போய்விட மாட்டோம் என்று உறுதியாக கூறியிருக்கின்றன. இருந்தும் அதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமாவை விஜய் ஏற்றுக்கொண்டு அவர்களை கட்சியில் சேர்த்ததால்தான் தற்போது இடைத்தேர்தல் உருவாகியிருக்கிறது.

    இந்த இடைத்தேர்தல் அவசியமே இல்லாத ஒன்று என்று கூறி தவெகவுக்கு எதிராக இரண்டு தொகுதிகளிலும் இடதுசாரி கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை நிறுத்தியிருக்கின்றனர். மொத்தம் 5 முனை போட்டி நிலவுகிறது. தவெகவுக்கு எதிராக 4 கட்சிகள் களத்தில் இருக்கின்றன. இது போதாது என்று.. இடைத்தேர்தல் நடக்கும் 2 தொகுதிகளிலும் தவெக வேட்பாளருக்கு எதிர்ப்பு இருக்கிறது. பெரிய அளவில் வரவேற்பு இல்லை.

    Advertisement

    சூழல் இப்படி இருக்கையில் தற்போது தாராபுரத்தில் விஜய் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டிருக்கிறார். இன்று தாராபுரம் சென்ற அவர் டிராக்டர் ஓட்டியும், டீக்கடையில் மக்களுடன் சென்று டீ குடித்தும் வாக்கு சேகரித்திருக்கிறார்.

    எல்லாம் ஓகேதான். ஆனால், இடைத்தேர்தலில் முதலமைச்சர் நேரடியாக பிரச்சாரம் செய்ய மாட்டார் என்பதே இதற்கு முன்னர் இருந்த நடைமுறை. இருப்பினும் விஜய் இதை மீறியிருப்பது.. இடைத்தேர்தல் எப்படியாவது தவெக வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்கிற நெருக்கடிதான் விஜய்யை களத்தில் இறக்கியிருக்கிறதோ? என்று சந்தேகம் கிளப்புகின்றனர்.

    முதல் டாஸ்க் ஜெயிக்க வேண்டும். இரண்டாவது டாஸ்க்.. முன்பு வாங்கிய வாக்குகளை விட அதிக வாக்குகளை வாங்க வேண்டும். இது இரண்டில் ஒன்று நடக்காவிட்டாலும் விஜய்யின் பெயர் டேமேஜ் ஆகும். எனவே, இதற்கு இடம் கொடுத்துவிடக்கூடாது என்று கவனமாக இருக்கிறார் விஜய். அதனால்தான் மதுராந்தகத்திற்கு 2 முறை விசிட் அடிப்பது, தீவிரமாக வாக்குகளை சேகரிப்பது என்று பரபரப்பாக இயங்கி வருகிறார் என்று சொல்லப்படுகிறது.

    English Summary

    While meeting the public in the Maduranthakam constituency today, Chief Minister Vijay canvassed for votes by driving a tractor and sharing tea with locals at a tea stall. Various quarters have raised questions about why Vijay—who has cancelled campaign events in several locations for the 2026 Assembly elections—is putting in such effort for a by-election. Typically, sitting Chief Ministers do not campaign in by-elections; so, why is Vijay engaging in such an intense campaign?