சென்னை: தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு கல்வி விருதுகள் வழங்கும் விழா இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், முதலமைச்சருமான விஜய் பங்கேற்று மாணவர்களுக்கு விருதுகள், ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்களை வழங்கி வருகிறார்.
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கடந்த 2023ம் ஆண்டு முதல் மாணவர்களுக்கு கல்வி விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் சிறந்து விளங்கும் மாணவர்களை அழைத்து விஜய் பாராட்டி வருகிறார்.
மாணவர்களின் கல்விச் சாதனைகளை பாராட்டி ஊக்குவிப்பதற்காகவே, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வருடந்தோறும் இந்த கல்வி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் சட்டமன்றத் தொகுதிகள் வாரியாக பல்வேறு கட்டங்களாக மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கி சிறப்பிக்கப்படும். அந்த வகையில் இந்த வருடமும் இவ்விழா நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக மாணவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்படுவதுடன், அவர்களின் பெற்றோர்களுக்கும் சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டது. இதையடுத்து, சென்னை நீலாங்கரையில் அமைந்துள்ள ஆர்.கே. கன்வென்ஷன் சென்டரில் நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தொடங்கின. 2025-26ம் கல்வியாண்டில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களின் கல்விச் சாதனைகளை பாராட்டும் வகையில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டது. 5 மாவட்ட மாணவர்கள் முதற்கட்டமாக அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 5 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் இந்த விழாவில் பங்கேற்றுள்ளனர். மாணவர்களுடன் அவர்களது பெற்றோர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதால், அவர்களும் இந்நிகழ்வில் பங்கேற்றுள்ளனர். கல்விச் சாதனைகளைப் பாராட்டுவதுடன், மாணவர்களின் உயர்கல்வி மற்றும் எதிர்கால முன்னேற்றத்திற்கு ஊக்கமளிக்கும் வகையில் பரிசுத்தொகையும் வழங்கப்படுகிறது. பாஸ் விநியோகம் முன்னதாக, இந்த விழாவில் பங்கேற்கும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோருக்கான அனுமதி பாஸ்களை பெறுவதற்காக, சம்பந்தப்பட்ட 5 மாவட்டங்களின் தவெக நிர்வாகிகள் அமைச்சர் ஆனந்தை நேரில் சந்தித்தனர். அப்போது மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான அனுமதி பாஸ்களைப் பெற்றுச் சென்றனர். அதேபோல மற்ற மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளும் பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்திற்கு வந்து டோக்கன்களைப் பெற்றுச் செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பெற்றோருக்கும் அழைப்பு கடந்த 3 வருடங்களைப் போல அல்லாமல், இந்த முறை மாணவர்களின் பெற்றோர்களுக்கும் விழாவில் பங்கேற்க தவெக தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படியே பிள்ளைகளுடன் பெற்றோர்களும் விழாவில் பங்கேற்றுள்ளனர். தவெக நிர்வாகிகள் மத்தியிலும் இந்த விழா கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மதியம் 2 மணிக்கு விழா தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், விழாவில் பங்கேற்கும் மாணவர்கள் அனைவரும் காலை 11 மணிக்கே அரங்கிற்குள் அனுமதிக்கப்பட்டனர். மேலும், விழாவில் பங்கேற்பவர்களுக்காக மதிய உணவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழா தொடங்குவதற்கு முன்னதாக, தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் உணவு பரிமாறினார். இதையடுத்து, மாணவர்களுக்கான கல்வி விருது வழங்கும் விழா தொடங்கியது. விருதுகளை வழங்கும் விஜய் தற்போது முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய், இந்த கல்வி விருது வழங்கும் விழாவில் பங்கேற்று மாணவர்களைக் கவுரவித்து வருகிறார். முதற்கட்டமாக அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 5 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு விருதுகள், ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்களை வழங்கி வருகிறார்.மாணவர்களின் கல்வி சாதனை