சென்னை: தமிழக தேர்தல் முடிவானது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த திமுக அதிமுகவை தோற்கடித்து தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடித்து 4 மாதங்களை நிறைவு செய்யவுள்ளது. இந்நிலையில், தேர்தல் வழக்குகளை நிராகரிக்கக் கோரி தமிழ்நாடு முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களுக்கு பதிலளிக்க வேண்டும் என திமுக வேட்பாளர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசியலில் தேர்தல் முடிவு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுக, அதிமுகவை தோற்கடித்து தவெக ஆட்சியை பிடித்து ஆச்சர்யப்படுத்தியுள்ளது. தவெக ஆட்சியமைத்து 4 மாதங்கள் ஆகப்போகிறது. தேர்தலில் முதல்வர் விஜய் பெரம்பூர் தொகுதியிலும், திருச்சி கிழக்கு தொகுதியிலும் போட்டியிட்டு இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார்.
இதைத்தொடர்ந்து, திருச்சி கிழக்கு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் பதவியை முதல்வர் விஜய் ராஜினாமா செய்தார். பெரம்பூர் தொகுதியில் முதல்வர் விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பெரம்பூர் தொகுதியைச் சேர்ந்த வாக்காளர்கள் லட்சுமி நரசிம்மன், தினேஷ், திமுக வேட்பாளர் ஆர்டி சேகர் ஆகியோர் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர். திருச்சி கிழக்குத் தொகுதியில் திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜும் தேர்தல் வழக்கு தாக்கல் செய்தனர். இதேபோல, வில்லிவாக்கம் தொகுதியில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வெற்றி பெற்றதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வாக்காளர் ஆர்.சிவராஜ் என்பவர் தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த தேர்தல் வழக்குகளை நிராகரிக்கக் கோரி முதல்வர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதி தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி ஆகஸ்ட் 27 ஆம் தேதிக்குள் மனு தாக்கல் செய்ய வேண்டும். இல்லையென்றால் ரூ. 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்திருந்தார். இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது, தேர்தல் வழக்குகளை நிராகரிக்கக் கோரி விஜய், ஆதவ் அர்ஜுனா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி லட்சுமி நாராயணன், விஜய், ஆதவ் அர்ஜூனன் மனுக்களுக்கு பதிலளிக்கும்படி தேர்தல் வழக்குகளை தாக்கல் செய்த திமுக வேட்பாளர்களுக்கும், வாக்காளர்களுக்கும் உத்தரவிட்டு செப்டம்பர் 3 ஆம் தேதிக்கு விசாரணையை தள்ளி வைத்தார்.விஜய், ஆதவ் வெற்றிக்கு எதிர்ப்பு
திமுக வேட்பாளர்களுக்கு உத்தரவு