முதல்வர் விஜய் பிரச்சாரக் கூட்டத்துக்காக பனைமரங்கள் அகற்றம்? மதுராந்தகம் அருகே ஷாக்!

  • சென்னை: தமிழக முதலமைச்சர் விஜய் பங்கேற்கும் தேர்தல் பரப்புரை கூட்டத்திற்காக மைதானத்தில் இருந்த பனை மரங்கள் வெட்டப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. பனை மரங்களை வெட்ட மாவட்ட ஆட்சியரின் அனுமதி தேவை என்ற உத்தரவு உள்ள நிலையில் பனை மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    Advertisement

    மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளின் இடைத்தேர்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் ஜோசப் விஜய் பங்கேற்கும் பிரச்சார பொதுக்கூட்டத்துக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    Advertisement

    மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 6 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், முதலமைச்சரும், தவெக தலைவருமான விஜய், வரும் 25 ஆம் தேதி மதுராந்தகம் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். தாராபுரம் தொகுதியில் வரும் 30 ஆம் தேதி பரப்புரை மேற்கொள்ள உள்ளார்.

    மதுராந்தகத்தில் வரும் 25 ஆம் தேதி முதலமைச்சர் ஜோசப் விஜய் இடைத்தேர்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து பரப்புரை மேற்கொள்ள இருக்கும் நிலையில், பொதுக்கூட்டத்துக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    Advertisement

    இந்நிலையில், பொதுக் கூட்டம் நடைபெறும் இடமான ஆத்தூர் சுங்கச்சாவடி அருகே 150 பனைமரங்கள் வேரோடு பிடுங்கப்படப் போவதாக வெளியான தகவலை அடுத்து சமூக ஆர்வலர் ராஜா தேர்தல் நடத்தும் அதிகாரி நரேந்திரரிடம் தனது மனுவை அளித்தார்.

    அதில் "நீதிமன்றம் பனைமரங்களை வெட்டக்கூடாது, அழிக்கக்கூடாது என்ற உத்தரவு பிறப்பித்தும் இந்த பிரச்சார கூட்டத்திற்காக 150 க்கும் மேற்பட்ட பண மரங்கள் அழிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாக மனு அளித்துள்ளார்.

    இதனையடுத்து இன்று மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் துறையினர் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். இதனால் இந்த பகுதியில் உள்ள பண மரங்கள் அகற்றப்படுமா? அகற்றப்படாதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    Advertisement

    பனை மரங்களை வெட்ட மாவட்ட ஆட்சியரின் அனுமது பெறுவது கட்டாயம் என கடந்த ஆட்சியில் அரசாணை வெளியிடப்பட்டது. பனை மரத்தை வெட்டி விற்கவும், செங்கல் சூளைகளுக்கு பயன்படுத்தும் நோக்கிலும் இந்த உத்தரவு போடப்பட்டது. தவிர்க்க இயலாத சூழலில் பனை மரங்களை வெட்ட நேரிட்டால் மாவட்ட கலெக்டரின் அனுமதி அவசியம் என அரசாணை உள்ளது.

    இந்நிலையில், முதல்வர் விஜய் பங்கேற்கும் பிரச்சாரக் கூட்டத்துக்காக, அவர் சில நிமிடங்கள் பேசும் கூட்டத்துக்காக பல ஆண்டுகள் வாழும் பனை மரங்களை வெட்டுவதா என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.

    இதேபோல, முதல்வர் விஜய் பங்கேற்கும் பிரச்சாரப் பொதுக் கூட்டத்துக்காக தாராபுரம் - உடுமலை சாலையில் உள்ள மாருதி நகர் பகுதியில் சுமார் 54 ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேடை, பந்தல் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Shocking information has emerged that palm trees at a ground are being cut down for an election campaign meeting attended by Tamil Nadu Chief Minister Vijay.