முக்குலத்தோர் சமூக வாக்குகள்.. கணக்கு போடும் முதல்வர் விஜய்.. தேவர் ஜெயந்திக்கு பசும்பொன் வருவாரா?

  • சென்னை: அதிமுக ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கும் முக்குலத்தோர் சமூக மக்கள் ஆதரவை கைப்பற்ற முதல்வர் விஜய் திட்டமிட்டிருப்பதாக முனுமுனுப்புகள் எழுந்துள்ளன. இதன் காரணமாகவே பசும்பொன்னில் நடக்கவுள்ள தேவர் ஜெயந்தி விழாவில் முதல்வர் விஜய் பங்கேற்க உள்ளதாகவும், அதற்கு சீனியர்கள் அந்த பயணத்தை தவிர்க்கலாம் என்றும் ஆலோசனை கூறி இருப்பதும் தெரிய வந்துள்ளது.

    Advertisement

    பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் தேவர் ஜெயந்தி விழா அக்டோபர் 30ஆம் தேதி விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. கடந்த முறை தவெக தரப்பில் புஸ்ஸி ஆனந்த், சிடிஆர் நிர்மல்குமார், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் நேரில் சென்று மரியாதை செலுத்தி இருந்தனர். ஆனால் இம்முறை தவெக ஆட்சி அமைத்திருக்கிறது. இதனால் முதல்வர் விஜய் தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

    Advertisement

    பசும்பொன் வந்து தேவர் நினைவிடத்தில் முதல்வர் விஜய் மரியாதை செலுத்த உள்ளதாக அக்கட்சியினர் மத்தியில் முனுமுனுப்புகள் அதிகரித்துள்ளது. இம்மானுவேல் சேகரனார் குருபூஜைக்கு மட்டும் வராத முதல்வர் விஜய், தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்றால் தேவையில்லாத விமர்சனங்கள் வரும் என்று சீனியர்கள் சிலர் ஆலோசனை கூறி இருக்கிறார்கள்.

    தேவையில்லாமல் சர்ச்சையில் சிக்குவதை விட, அந்த பயணத்தை தவிர்ப்பது நல்லது என்றும் அறிவுறுத்தி உள்ளனர். ஆனால் அதிமுகவின் கட்டமைப்பை மொத்தமாக தவெக பக்கம் திருப்ப இன்னும் பல்வேறு பணிகளை விஜய் செய்ய வேண்டிய தேவை உள்ளது. குறிப்பாக அதிமுகவுக்கு ஆதரவாக இருக்கும் முக்குலத்தோர் சமூக வாக்குகளை தவெக பக்கம் திருப்ப வேண்டிய தேவை இருக்கிறது.

    Advertisement
    விஜய் அழைத்தால் அரசியலுக்கு வருவேன்! ஜெயிலர் 3-ல் நான்தான் மூர்த்தி அண்ணன்! வாட்டர் மெலன் திவாகர்

    சிவகங்கை போன்ற மாவட்டங்களில் விஜய்க்கு பெரிய ஆதரவு அலை உருவாகினாலும், அதனை தக்க வைக்க முடியுமா என்ற சந்தேகம் உள்ளது. இதனால் தேவர் ஜெயந்தி விழாவில் நேரடியாக விஜய் பங்கேற்றால், முக்குலத்தோர் ஆதரவை தவெக பக்கம் திருப்ப பணிகளை எளிதாக செய்ய முடியும். இதன் மூலமாக உள்ளாட்சி அமைப்புகளில் தவெக பலம்பெறத் தொடங்கும்.

    விஜய் அடுத்தடுத்த தேர்தல்களில் வெற்றி பெற சமூக ரீதியிலான ஆதரவும் அவசியமாக உள்ளது. இதனிடையே விஜய் பசும்பொன் செல்லும் போது தேவையில்லாத சலசலப்புகள் உருவாகக் கூடும் என்றும் அஞ்சப்படுகிறது. இதனால் அக்டோபர் 25ஆம் தேதிக்கு பின் விஜய் பசும்பொன் செல்வது தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது.

    English Summary

    Vijay: Eyeing AIADMK Mukkulathor Base, CM Vijay Plans Pasumpon Visit for Thevar Jayanthi