அடுத்த விக்கெட் இவரா! விஜய் கூட சேரும் கொங்கு மண்டல டாப் புள்ளி? ஆடிப்போன அதிமுக எடப்பாடி பழனிசாமி

  • சென்னை: அதிமுக கரைந்து கொண்டேயிருக்கிறது.. தவெகவில் பலரும் இணைந்து வருகிறார்கள்.. அந்தவகையில், முக்கிய புள்ளி ஒருவர் தவெகவில் இணைய போவதாக தகவல்கள் பரபரத்து வருகின்றன.. இது அதிமுகவுக்கு மேலும் ஒரு அதிர்ச்சியை தந்து கொண்டிருக்கிறது.. யார் அந்த நபர்? தவெக வியூகம் என்ன? எடப்பாடி பழனிசாமி இதை எப்படி எதிர்கொள்ள போகிறார்??

    Advertisement

    மூத்த தலைவர் கேசி பழனிசாமியை பொறுத்தவரை, எடப்பாடி மீது கடுமையான கருத்துக்களை முன்வைத்து வருபவர்.. அதிமுகவின் முன்னாள் எம்பியாக பதவி வகித்தவர் கேசி பழனிச்சாமி. இவர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்ட புகாரில், கடந்த 2018 ம் ஆண்டு அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார். அப்போதிருந்து அதிமுக மற்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளருக்கு எதிரான கருத்துக்களை சொல்லி வருகிறார்.

    Advertisement

    ஆனால், எடப்பாடி பழனிசாமியோ, "என்னை விமர்சனம் செய்த கே.சி.பழனிச்சாமி அதிமுக உறுப்பினரே கிடையாது. ரோட்டில் போவோர், வருபவர் எல்லாம் ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஆகிவிட முடியாது. ரோட்டில் போறவங்க ஒருங்கிணைப்புக் குழு என ஆரம்பித்தால் அதுக்கு அதிமுக பதில் சொல்லணுமா? அதுவும் கேசி பழனிச்சாமி கட்சியிலிருந்தே நீக்கப்பட்டவர்" என்று சொல்லியதுடன், கேசி பழனிசாமியை அதற்கு பிறகு கண்டுகொள்ளவேயில்லை.

    எடப்பாடியை விடாத கேசிபி

    ஆனால், கேசி பழனிசாமி எடப்படியை விடவேயில்லை.. இன்றுவரை எடப்பாடி மீதான அவரது விமர்சனங்கள் தொடர்ந்து வருகின்றன.. இப்போதுகூட தன்னுடைய பேஸ்புக்கில் ஒரு போஸ்ட் போட்டுள்ளார்..

    Advertisement

    அதில், "ஊழல் செய்த முன்னாள் திமுக அமைச்சர்கள் மீது ரெய்டு நடவடிக்கைகள் நடந்துகொண்டிருக்கின்றன. ஆனால், ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில், முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன் என்று கூறியிருந்தாலும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஏனென்றால், எடப்பாடி பழனிசாமி அதற்காக ஒரு விலை கொடுத்து தப்பித்துக்கொண்டார்.

    ஜான் ஆரோக்கியசாமி

    அதேபோல், தற்போது தவெக அரசுக்கு ஆலோசனை சொல்லும் ஆலோசகராக உருவெடுத்திருக்கிறார். கிட்டத்தட்ட ஜான் ஆரோக்கியசாமிக்கு போட்டியாக வந்து, ஊழல் வழக்குகளில் இருந்து தப்பித்துக்கொள்ள முயற்சிக்கிறார். ஆனால், முதல்வர் விஜய் இவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார். அதாவது எந்த ஆட்சி வந்தாலும், எடப்பாடி மீது நடவடிக்கை எடுங்கள் என்று கோரிக்கை விடுத்தபடி உள்ளார்..

    Advertisement

    இப்போது விஷயம் என்னவென்றால், அதிமுகவின் சீனியர் புள்ளிகளில் ஒருவரான இதே கே.சி.பழனிசாமி, விரைவில் தவெகவில் இணைய போகிறார் என்று கிசுகிசுக்கப்படுகிறது..

    கேசி பழனிசாமி பவர்ஃபுல் பிளான்

    ஒருவேளை கேசி பழனிசாமி தவெகவில் இணைந்தால், அது விஜய்க்கு பலம்தான்.. காரணம், விஜய்யின் தவெக ஒரு புதிய கட்சி.. அதற்கு மக்கள் மத்தியில் ஆரம்பகட்ட ஈர்ப்பு இருந்தாலும், தேர்தல் களம் என்று வரும்போது அனுபவமிக்க அரசியல் தலைவர்களின் வழிகாட்டுதல் ரொம்பவே அவசியம்.. கே.சி.பழனிசாமி போன்ற ஒரு சீனியர் தலைவர் உள்ளே வரும்போது, கட்சிக்கு அது பெரிய பலமாக மாறும்.

    அதுவும் கொங்கு மண்டலத்தில் நல்ல செல்வாக்கும், பிசினஸ் பின்னணியும் கொண்டவர் கே.சி.பி. தவெகவுக்கு மேற்கு மாவட்டங்களில் தடம் பதிக்க இவரை போன்ற ஒரு பவர்ஃபுல் தலைவர் தேவைதான்.. அதுமட்டுமல்லாமல், டெல்லி அரசியல், நாடாளுமன்ற நடைமுறைகள், தேர்தல் வியூகங்கள் என அத்தனையையும் விரல் நுனியில் வைத்திருக்கும் ஒரு அனுபவஸ்தர் கிடைப்பது விஜய்க்கு பெரிய பிளஸ் பாயிண்ட்..

    Advertisement

    கொங்கு பெல்ட் வாக்கு வங்கி

    கட்சியின் கொள்கைகளை முதிர்ச்சியோடு பொதுவெளியில் கொண்டு சேர்க்கவும், மற்ற கட்சிகளுடன் டீலிங் பேசவும் கே.சி.பி.யின் அரசியல் மூவ்மெண்ட்கள் தவெகவுக்கு சற்று அதிகமாகவே கைகொடுக்கும்.

    ஆனால், அதிமுக இன்னும் அதலபாதாளத்தில் போய்விடும் போல தெரிகிறது.. ஏற்கனவே அதிமுகவில் இருந்து ஓபிஎஸ், தினகரன், சசிகலா என முக்கிய முகங்கள் பிரிந்து போய்விட்ட நிலையில், கே.சி.பழனிசாமி போன்ற பழைய விசுவாசிகள் முற்றிலும் விலகி மாற்று முகாமிற்கு போவது கட்சிக்கு நிச்சயம் பின்னடைவுதான்.

    ஏற்கனவே அதிமுகவின் உள்கட்சி அரசியலை அக்குவேறாக ஆணிவேறாக அசிங்கப்படுத்தி கொண்டிருக்கிறார் கேசிபி.. இப்போது தவெகவில் இணையும்போது, அதிமுகவில் அதிருப்தியாளர்கள் பலருக்கும் இது ஒரு புதிய பாலமாக அமையலாம்..

    Advertisement

    அஸ்திவாரம் போடும் தவெக

    அதுமட்டுமல்ல, அதிமுகவில் சீனியர்களுக்கு மதிப்பில்லை எனற பேச்சு, சமீபகாலமாகவே உள்ளது.. அப்படியிருக்கும், சம்பந்தப்பட்ட சீனியர்கள் கேசிபி ரூட்டில் இனி இணையலாம்.. அதேபோல கொங்கு மண்டலத்தில் எடப்பாடியின் கோட்டையிலேயே ஓட்டையை போட கே.சி.பி.யால் கண்டிப்பாக வியூகம் வகுக்க முடியும்.. இதெல்லாம் அதிமுகவுக்கு ஜெர்க் தரும் விஷயங்கள்தான்.

    அனைத்துக்கும் மேலாக அதிமுகவின் வாக்கு வங்கியை கொங்கு பெல்ட்டில் அசைத்துப் பார்க்க தவெக போடும் ஒரு அஸ்திவாரமாக இது பார்க்கப்படுகிறது.. மொத்தத்தில் தவெகவின் புதிய ரத்தமும் + கேசிபி போன்ற பழைய அனுபவமும் ஒன்றுசேரும்போது, அதிமுகவின் நிலைமை??? பொறுத்திருந்து பார்ப்போம்..!!

    English Summary

    Vijay Eyes Top Kongu Leader as TVK Looks to Strengthen Its Base, Worrying Edappadi Palaniswami