சென்னை: விஜய்யின் பீஸ்ட் பட ஒளிப்பதிவாளர், பிகில் பட தயாரிப்பாளர், ஜனநாயகன் பட தயாரிப்பாளர் என தமிழக முதல்வர் விஜய்யின் திரைப்படங்களில் பணியாற்றிய தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அரசு பொறுப்புகளில் நியமனம் செய்யப்பட்டு வருவது விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. தற்போது வரை அரசு பொறுப்புகளில் நியமனம் செய்யப்பட்டுள்ள விஜய்யின் படக்குழுவினர் யார் யார்? என்ற விவரங்களை பார்க்கலாம்.
தமிழக முதல்வரக விஜய் பொறுப்பேற்ற பிறகு அவர் செய்யும் நியமனங்கள் தமிழக அரசியல் வட்டாரத்தில் விவாதப்பொருளாகியுள்ளது. ஆஸ்தான ஜோதிடருக்கு ஆலோசர் பதவி வழங்கியது சர்ச்சையை கிளப்பியதால் தனது முடிவில் இருந்து விஜய் பின் வாங்கினார். ஆனால், அடுத்தடுத்து சத்தமில்லாமல் சில நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக தனது மேனேஜராக இருந்த ஜெகதீஷ் பழனிசாமிக்கு தனி செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. இந்த நியமனமே ஜெகதீஷ் பழனிசாமி வெளியில் கூறிய பிறகே தெரியவந்தது. ஜெகதீஷ் பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட்ட பிறகே, அரசாணை வெளியாகியிருந்தது. ஜெகதீஷ் பழனிசாமி விஜய்யின் மேலாளராக இருந்தது மட்டுமின்றி அவரது லியோ படத்தின் இணை தயாரிப்பாளராகவும் இருந்தார். சினிமா துறையில் தனக்கு நம்பிக்கைக்குரியவராக இருந்த பலருக்கு தமிழக அரசு பதவிகளை விஜய் தூக்கி கொடுப்பது கடும் விமர்சனத்தை எதிர்கொண்டு வருகிறது. அந்த வகையில் முதல்வர் விஜய் தனது படக்குழுவை சேர்ந்த யாருக்கெல்லாம் அரசு பதவிகளை கொடுத்துள்ளார் என்ற விவரங்களை பார்க்கலாம் முதல்வர் விஜய்யின் நடிப்பில் கடைசியாக வெளி வந்த படம் ஜனநாயகன். இந்த படத்தினை தயாரித்த கேவிஎன் புராடொக்ஷன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான வெங்கட நாராயணாவுக்கு தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி பொறுப்பு வழங்கப்பட்டது. இது கடும் விமர்சனத்திற்கு உள்ளான நிலையில், இது குறித்து பேசிய அமைச்சர் நிர்மல் குமார், டெல்லி சிறப்பு பிரதிநிதி என்பது வெறும் கவுரவ பதவி மட்டுமே. முக்கியமான முடிவுகளை எடுக்கும் பதவி இல்லை. முதல்வருக்கு இக்கட்டான காலத்தில் அவர் உடன் இருந்தார். நம்பிக்கையானவர். தவறான நபருக்கு அந்த பொறுப்பு வழங்கப்படவில்லை" என்று கூறியிருந்தார். பிரபல திரைப்பட தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி, விஜய்யின் பிகில் மற்றும் கோட் படத்தை தயாரித்து இருந்தார். திரிஷாவின் தோழியாகவும் அறியப்படும் அர்ச்சனா கல்பாத்திக்கு கோவில்களுக்கான அறங்காவலர் நியமனக் குழுவில் உறுப்பினர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் திரைப்பட பயிற்சி நிறுவனத்தின் தலைவரக பீஸ்ட் பட ஒளிப்பதிவாளராக பணியாற்றிய மனோஜ் பரமஹசா நியமனம் செய்யப்பட்டுள்ளர். திரைப்படம் சர்ந்த பயிற்சி நிறுவனம் என்றாலும் எத்தனையோ பேர் இருக்கும் போது தனது படத்தில் பணியாற்றியவருக்கு இந்த பதவி வழங்குவதா? என விமர்சனங்கள் எழுந்துள்ளன. வருஷத்துக்கு 10 லட்சத்துக்கும் அதிகமாக வருமானம் உள்ள கோயில்களுக்கு பரம்பரை சாரா அறங்காவலர்களை நியமிப்பது உள்ளிட்ட முக்கிய பணிகளை மேற்கொள்ளும் குழுவில் அர்ச்சனா கல்பாத்தி நியமனம் செய்யப்பட்டு இருந்தது பேசுபொருளான நிலையில் அதே குழுவில், பின்னணி பாடகர் வேல்முருகனும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தவெக கட்சியின் 2 ஆம் ஆண்டு துவக்க விழாவில், விஜய்யை புகழ்ந்து பாடும் போது, முருகன் பாடலை இழிவுபடுத்தியதாக வேல் முருகன் மீது சர்ச்சை கிளம்பியது. கடவுள் முருகரின் பக்தி பாடலின் வரிகளை மாற்றி அதனை விஜயை மையப்படுத்தி பாடியது அதிகமாக விமர்சனம் செய்யப்பட்டது.லியோ இணை தயாரிப்பாளர் - ஜெகதீஷ் பழனிசாமி
ஜனநாயகன் தயாரிப்பாளர் வெங்கட நாராயணா:
பிகில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி:
பீஸ்ட் பட ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா:
பாடகர் வேல் முருகன்: