முதல்வராக முதல் பிறந்தநாள்.. விஜய்யின் ஒரு மாத கால ஆட்சி எப்படி? சாதனையா? வேதனையா? பெரிய சவால்!

  • சென்னை: தமிழகத்தின் அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்ற முதலமைச்சர் விஜயின் அரசு, தனது முதல் மாதத்தை நிறைவு செய்துள்ளது. தேர்தலுக்கு முன்பாக மாற்றத்தை வாக்குறுதியாக முன்வைத்து ஆட்சிக்கு வந்த இந்த அரசு, கடந்த 30 நாட்களில் எந்த அளவுக்கு செயல்பட்டுள்ளது? மக்கள் மத்தியில் என்ன மாதிரியான வரவேற்பு கிடைத்துள்ளது? எதிர்க்கட்சிகள் என்ன குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றன? என்ற கேள்விகள் தற்போது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளன.

    Advertisement

    ஒரு புதிய அரசு ஆட்சிக்கு வந்ததும் முதல் 100 நாட்கள் முக்கியம் என்று கூறப்படுவது வழக்கம். ஆனால் சமூக வலைதளங்களின் காலத்தில் முதல் மாதமே ஒரு அரசின் செயல்பாடுகளை மக்கள் கவனிக்கத் தொடங்கிவிடுகிறார்கள்.

    Advertisement

    அந்த வகையில், விஜய் தலைமையிலான அரசின் முதல் மாதம் பரபரப்பாகவும், அதே நேரத்தில் சவால்கள் நிறைந்ததாகவும் இருந்துள்ளது. பதவியேற்ற சில நாட்களிலேயே பல்வேறு துறைகளின் செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் நேரடியாக ஆய்வுக் கூட்டங்களை நடத்தினார்.

    முதல்வர் விஜய்

    பள்ளிக் கல்வி, உயர்கல்வி, தொழில் வளர்ச்சி, சமூக நலத் திட்டங்கள், குடிநீர் வசதி, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளின் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தப்பட்டது. முந்தைய அரசின் காலத்தில் அறிவிக்கப்பட்ட பல திட்டங்களின் தற்போதைய நிலை குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அரசின் முதல் மாதத்தில் நிர்வாக இயந்திரத்தை முழு வேகத்தில் இயக்க வேண்டும் என்ற நோக்கம் தெளிவாகக் காணப்பட்டதாக அதிகாரிகள் சொல்கின்றனர்.

    Advertisement

    தேர்தல் வாக்குறுதி

    தேர்தல் பிரச்சாரத்தின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் மீது அரசு ஆரம்பத்திலேயே கவனம் செலுத்தியுள்ளது. மக்கள் எதிர்பார்த்த முக்கிய திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு புதிய அரசின் மீதான நம்பிக்கை என்பது அதன் வாக்குறுதிகளை நிறைவேற்றும் திறனில்தான் இருக்கிறது. அதனால் இந்த விஷயத்தில் அரசு ஆரம்பத்திலேயே தீவிரம் காட்டியது ஆதரவாளர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

    சட்டம்-ஒழுங்கு

    அரசின் ஆரம்பகட்ட நடவடிக்கைகளில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் முக்கிய இடம் பெற்றன. குறிப்பாக இளைஞர்களை பாதிக்கும் போதைப்பொருள் விற்பனையை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என்று அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதுதவிர, சட்டம்-ஒழுங்கு தொடர்பான விவகாரங்களிலும் அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது என்ற தோற்றத்தை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

    Advertisement

    நிதி சவால்

    தமிழகத்திற்கு புதிய முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாகவும் அரசு தீவிரமாக செயல்படத் தொடங்கியுள்ளது. தொழில் நிறுவனங்களுடன் ஆலோசனைகள் நடத்தப்பட்டுள்ளன. வேலைவாய்ப்பு உருவாக்கம், தொழில் விரிவாக்கம், புதிய உற்பத்தி மையங்கள் அமைத்தல் போன்ற அம்சங்கள் அரசின் முன்னுரிமைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்க வேண்டும் என்பது தேர்தல் காலத்தில் கூறப்பட்ட முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றாக இருந்ததால், இந்த துறையில் அரசின் செயல்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன.

    முதலமைச்சர்

    அதே நேரத்தில், முதல் மாத செயல்பாடுகள் குறித்து எதிர்க்கட்சிகள் பல்வேறு கேள்விகளையும் எழுப்பி வருகின்றன. குறிப்பாக சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், விலைவாசி உயர்வு போன்ற விஷயங்களில் அரசு இன்னும் உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டப்படுகிறது. சில சம்பவங்களில் முதலமைச்சர் நேரடியாக கருத்து தெரிவிக்கவில்லை என்றும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. புதிய அரசு என்பதால் மக்கள் இன்னும் பொறுமையாக காத்திருக்கிறார்கள். ஆனால் காலப்போக்கில் முதல்வர் பேச பேச தான் அவரது செயல்பாடுகள் முழுமையாக தெரிய வரும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

    Advertisement

    மிகப்பெரிய சவால்

    விஜய் அரசுக்கு முன் நிற்கும் மிகப்பெரிய சவால்களில் ஒன்று மாநிலத்தின் நிதி நிலைமை. தமிழகத்தின் கடன் சுமை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், ஒருபுறம் நலத்திட்டங்களையும் மறுபுறம் நிதி ஒழுங்கையும் சமநிலைப்படுத்த வேண்டிய கட்டாயம் அரசுக்கு உள்ளது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கும், புதிய திட்டங்களை அறிவிப்பதற்கும் பெரும் நிதி தேவைப்படும். எனவே வருவாய் அதிகரிப்பு மற்றும் செலவுக் கட்டுப்பாடு ஆகிய இரண்டையும் சமமாக கையாள வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

    ஒரு மாத செயல்பாடு

    ஒரு அரசின் வெற்றியை வெறும் ஒரு மாத செயல்பாடுகளின் அடிப்படையில் முழுமையாக மதிப்பிட முடியாது என்பதும் உண்மை. இருப்பினும் முதல் மாதத்தில் அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள், அதன் முன்னுரிமைகள் என்ன என்பதை வெளிப்படுத்தியுள்ளன. இதுவரை பார்க்கும்போது, விஜய் அரசு நிர்வாக ரீதியாக வேகமாக செயல்பட முயற்சிப்பது தெரிகிறது. அதே நேரத்தில் தேர்தல் வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்துவது, சட்டம்-ஒழுங்கை வலுப்படுத்துவது, முதலீடுகளை ஈர்ப்பது, நிதி சவால்களை சமாளிப்பது போன்ற கடினமான பணிகள் சவலாக இருக்கின்றன.

    Advertisement

    அதிக எதிர்பார்ப்பு

    விஜய் அரசின் முதல் மாதத்தை வேகமான தொடக்கம், அதிக எதிர்பார்ப்பு, இன்னும் நிரூபிக்க வேண்டிய கட்டம் என்று வர்ணிக்கலாம். மக்கள் மத்தியில் நம்பிக்கையை உருவாக்குவதில் அரசு ஓரளவு வெற்றி பெற்றிருந்தாலும், சட்டம் ஒழுங்கு, கட்சியினரின் நடவடிக்கைகள், உட்கட்சி விவகாரங்கள் போன்றவை விஜய் முன் பெரிய சவாலாக இருக்கின்றன.

    English Summary

    A look at Vijay government’s first month, key initiatives, public expectations, and major challenges ahead.