என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்.. கஜனாவை நிரப்ப ரெடியான விஜய்! வேற லெவல் ப்ளானா இருக்கே ப்ரோ!

  • சென்னை: தமிழக அரசின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை வெளியாகி அரசியல் அரங்கில் விவாதங்களை கிளப்பியுள்ள நிலையில், மாநில வருவாயை அதிகரிக்க புதிய நடவடிக்கைகளை விஜய் அரசு தீவிரமாக முன்னெடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, கனிம வளங்கள், பத்திரப்பதிவு, முத்திரைத்தாள் வருவாய் மற்றும் அரசு ஒப்பந்தப் பணிகளில் ஏற்படும் வருவாய் இழப்புகளை கட்டுப்படுத்துவதன் மூலம் இந்த நிதியாண்டிலேயே கூடுதலாக வருவாய் ஈட்ட அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    Advertisement

    தமிழக அரசின் நிதிநிலை தற்போது கடுமையான சவால்களை சந்தித்து வருகிறது. சமீபத்தில் வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கையில் மாநில அரசின் நேரடி கடன் ரூ.10 லட்சம் கோடியை எட்டியிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

    Advertisement

    மின்வாரியம், போக்குவரத்துக் கழகங்கள் மற்றும் பிற பொதுத்துறை நிறுவனங்களின் கடன்களையும் சேர்த்தால் மொத்த நிதிச்சுமை ரூ.13.18 லட்சம் கோடியாக இருப்பதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    தமிழக வருவாய்

    இந்த சூழலில் வரிகளை உயர்த்தாமல், பொதுமக்களுக்கு கூடுதல் சுமை ஏற்படுத்தாமல், அரசுக்கு வர வேண்டிய வருவாயை முழுமையாக வசூலிக்கும் வழிகளை அரசு ஆராய்ந்து வருகிறது. அதில் முக்கியமாக கவனம் செலுத்தப்படும் துறையாக கனிம வளத்துறை பார்க்கப்படுகிறது. தமிழகத்தின் பல மாவட்டங்களில் சுண்ணாம்புக்கல், கிரானைட், இரும்புத்தாது, மாக்னசைட், கிராபைட் உள்ளிட்ட பல்வேறு கனிம வளங்கள் அதிகளவில் உள்ளன.

    விஜய் அரசு

    ஆனால் இந்த வளங்களை குத்தகைக்கு விடுவது மற்றும் சுரங்கப் பணிகளை கண்காணிப்பதில் பல ஆண்டுகளாக முறைகேடுகள் நடைபெறுவதாக குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன. அரசுக்கு வர வேண்டிய வருவாயில் ஒரு பகுதி தனியார் தரப்புகளுக்கு சென்றுவிடுவதாகவும், சில இடங்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக கனிம வளங்கள் எடுக்கப்படுவதாகவும் புகார்கள் உள்ளன.

    Advertisement

    வருவாய் இழப்பு

    இதனை கட்டுப்படுத்த தொழில்நுட்ப கண்காணிப்பு, ஆன்லைன் அனுமதி முறை மற்றும் நேரடி ஆய்வு முறைகளை கொண்டு வர அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், பத்திரப்பதிவுத் துறையிலும் வருவாய் இழப்புகளை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன. சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள், சந்தை மதிப்பை விட குறைந்த மதிப்பில் பதிவு செய்யப்படுவதாக நீண்ட காலமாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.

    முத்திரைத்தாள் கட்டணம்

    இதனால் முத்திரைத்தாள் கட்டணம் மற்றும் பதிவு கட்டண வருவாயில் அரசுக்கு பெரும் இழப்பு ஏற்படுவதாக அதிகாரிகள் மதிப்பிடுகின்றனர். இதை தடுக்கும் வகையில் வழிகாட்டுதல் மதிப்பை மறுஆய்வு செய்து, சந்தை மதிப்புக்கு நெருக்கமாக மாற்றும் பணிகள் நடைபெறலாம் என கூறப்படுகிறது. இதனுடன் ஜி.எஸ்.டி., ஆயத்தீர்வை மற்றும் முத்திரைத்தாள் வருவாய் தொடர்பான கண்காணிப்பும் பலப்படுத்தப்பட உள்ளது.

    Advertisement

    மின்வாரியம்

    வரி ஏய்ப்பு மற்றும் குறைவான மதிப்பீடு காரணமாக ஆண்டுதோறும் பல நூறு கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுவதாக அரசுத் தரப்பில் கணக்கிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசின் கவனம் செலுத்தப்படும் மற்றொரு முக்கிய துறை ஒப்பந்தப் பணிகள். பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை, மின்வாரியம் உள்ளிட்ட பல துறைகளில் திட்ட மதிப்பீட்டை விட அதிக செலவில் ஒப்பந்தங்கள் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன.

    இ-டெண்டர்

    சில திட்டங்களில் போட்டி குறைவாக இருப்பதும், குறிப்பிட்ட நிறுவனங்களே தொடர்ந்து ஒப்பந்தங்களை பெறுவதும் அரசின் கவனத்திற்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் எதிர்காலத்தில் அனைத்து டெண்டர் செயல்முறைகளையும் மேலும் வெளிப்படையாக மாற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இ-டெண்டர் முறையை விரிவுபடுத்துவது, அதிக நிறுவனங்கள் பங்கேற்கும் சூழலை உருவாக்குவது, திட்ட மதிப்பீடுகளை தொழில்நுட்ப ரீதியாக மறுஆய்வு செய்வது போன்ற நடவடிக்கைகள் மூலம் செலவுகளை குறைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    Advertisement

    நிதிச் சவால்

    இதுதொடர்பாக பேசியுள்ள தலைமைச் செயலக வட்டாரங்கள்," புதிய வரி விதிப்பது அல்லது கட்டணங்களை உயர்த்துவது என்பது தற்போதைய திட்டம் அல்ல. மாறாக, ஏற்கனவே அரசுக்கு கிடைக்க வேண்டிய வருவாயை முழுமையாக வசூலிப்பதே முக்கிய நோக்கமாக இருக்கிறது என்பதாகும். வெள்ளை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்ட நிதிச் சவால்களை சமாளிக்க, வருவாய் பெருக்கமும் செலவுக் கட்டுப்பாடும் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கருத்து நிலவுகிறது.

    ரூ.20,000 கோடி

    அந்த வகையில், ஊழலை கட்டுப்படுத்தி, நிர்வாக வெளிப்படைத்தன்மையை அதிகரித்து, வருவாய் கசிவுகளை தடுக்க முடிந்தால் இந்த ஆண்டிலேயே ரூ.20,000 கோடி வரை கூடுதல் வருவாய் ஈட்ட முடியும் என்ற நம்பிக்கையில் விஜய் அரசு செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. நிதி நெருக்கடிகளை எதிர்கொண்டு வரும் தமிழகத்திற்கு இந்த முயற்சிகள் எவ்வளவு பலன் தரும் என்பது வரும் மாதங்களில் தெளிவாக தெரியும்" என்கின்றனர்.

    English Summary

    Tamil Nadu explores revenue expansion through mining reforms, property registrations and tighter monitoring without imposing new taxes.