எந்த பயனும் இல்ல! சவால் விடும் தோழர்கள்.. ஆட்சிக்கு ஆபத்து? அசால்ட்டாய் சிஎம் விஜய்! நிலவரம் காரணம்?

  • சென்னை: தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக கடந்த சில தினங்களாக கம்யூனிஸ்ட் தோழர்கள் விஜய் அரசுக்கு எதிராக பேசி வருகின்றனர். உச்சபட்சமாக இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் முத்தரசன், அரசுக்கு தரும் ஆதரவை வாபஸ் பெற்றால் அமைச்சரவை இருக்காது எனவும், அதற்காகத்தான் ஆளுநர் காத்துக் கொண்டிருக்கிறார் எனக் கூறியிருக்கிறார். தவெக தரப்பில் அதற்கு பதிலடியும் கொடுக்கப்பட்டு வருகிறது. உண்மையில் கம்யூனிஸ்டுகள் ஆட்சிக்கான ஆதரவை வாபஸ் பெற்றால் ஆட்சி கவிழுமா? வாபஸ் பெற்றால் விஜய்யின் கணக்கு என்ன? என்பது குறித்து பார்க்கலாம்..

    Advertisement

    2026 தமிழக சட்டசபை தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்திருக்கிறது. காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

    Advertisement

    இது ஒருபுறம் இருக்க அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமியே தோல்விக்கு காரணம் என கைகாட்டி விட்டு பலரும் தற்போது தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளனர். மரகதம் குமரவேல், இசக்கி சுப்பையா, எம் ஆர் விஜயபாஸ்கர், சி விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜு, வெள்ளமண்டி நடராஜன் என முக்கிய முகங்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருக்கின்றனர்.

    விஜய் அரசு

    இதை அடுத்து தற்போதைக்கு பிரச்சனை இல்லாமல் ஆட்சி சென்று கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் பட்டினப்பாக்கம் தலைமைச் செயலக பிரச்சினை உள்ளிட்ட விவகாரங்களை காட்டி கம்யூனிஸ்ட் கட்சிகள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு குடைச்சல் கொடுத்து வருகின்றார். எல்லாவற்றையும் விட கம்யூனிஸ் மூத்த தலைவர் முத்தரசனின் பேச்சு தமிழக வெற்றி கழகத்தினரை கொந்தளிப்பில் ஆழ்த்தி இருக்கிறது. அதாவது கம்யூனிஸ்டுகள் தயவில் தான் அரசு நடந்து கொண்டிருக்கிறது. ஆதரவை வாபஸ் பெற்றால் ஆட்சி கவிழும். ஆளுநரும் அதைத் தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார் என கூறி இருக்கிறார்.

    Advertisement

    கம்யூனிஸ்ட் ஆதரவு

    அதற்கு தமிழக வெற்றி கழகமும் பதிலடி கொடுத்து வருகிறது. இதற்கிடையே கம்யூனிஸ்டுகள் ஆதரவை வாபஸ் பெற்றால் விஜய் ஆட்சி கவிழுமா? என்ற பேச்சு ஒருபுறம் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் தமிழக சட்டமன்ற எம்எல்ஏக்கள் கணக்கை வைத்து பார்க்கும் போது அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்பதுதான் உண்மை.

    ஆட்சி பெரும்பான்மை

    தமிழக சட்டசபையில் மொத்தம் 234 உறுப்பினர்கள் இருக்க வேண்டும். முதல்வர் விஜய் பெரம்பூர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததோடு, விஜயபாஸ்கர், மரகதம் குமரவேல், இசக்கி சுப்பையா ஆகியோர் தங்கள் எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்தால் சட்டமன்றத்தில் எம்எல்ஏக்கள் பலம் 227 ஆக உள்ளது. அந்த கணக்கின்படி பார்த்தால் ஆட்சி அமைப்பதற்கு மொத்தம் 114 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை.

    Advertisement

    ஆட்சி கவிழுமா?

    தமிழக வெற்றிக் கழகத்திலும் தற்போது 107 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். காங்கிரஸ் 5, விசிக 2, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 2, காமராஜ் 1, கம்யூனிஸ்டுகள் 4 என சேர்த்து மொத்தம் 121 எம்எல்ஏக்களின் ஆதரவு இருக்கிறது. இதில் கம்யூனிஸ்டுகள் 4 எம்எல்ஏக்களின் ஆதரவை வாபஸ் பெற்றால் 117 என என தவெக ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை குறையும். அதே நேரத்தில் 114 என்ற எண்ணிக்கையை விட 3 எம்எல்ஏக்கள் அதிகமாகவே தமிழக வெற்றிக்கழக அரசுக்கு ஆதரவாக இருக்கின்றனர்.

    நம்பிக்கை வாக்கெடுப்பு

    அதுமட்டுமல்லாமல் அதிமுகவிலிருந்து ஒரு தரப்பு விஜய்க்கு ஆதரவு தயாராக இருக்கிறது. அது மட்டும் அல்லாமல் சட்டசபையில் வாக்கு எண்ணிக்கை நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் போது அவையில் இருக்கும் எம்எல்ஏக்களின் எண்ணிக்கையை வைத்து தான் வாக்கெடுப்பு நடத்தப்படும். ஒரு வேலை பாமக உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு செய்தால் அதுவும் விஜய் அரசுக்கு ஆதரவாக தான் இருக்கும். எனவே கம்யூனிஸ்டுகள் ஆதரவை வாபஸ் பெற்றாலும் விஜய் அரசுக்கு எந்தவித பிரச்சனையும் இருக்காது என்பதுதான் கள நிலவரம் சொல்லும் உண்மை.

    English Summary

    TVK has 107 MLAs, while Congress, VCK and IUML provide additional support as Communist parties back the government from outside.