சென்னை: தமிழ்நாட்டில் தற்போது நிலவி வரும் கடுமையான நிதி நெருக்கடி மற்றும் வரலாறு காணாத கடன் சுமைக்கிடையே, அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு சார்பில் புதிய கார்கள் மற்றும் அதற்கான வசதிகள் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் விஜய் அவர்கள் சட்டமன்றத்தில் அறிவித்திருப்பது பெரும் விவாதத்தையும் புயலையும் கிளப்பியுள்ளது. இது தொடர்பாக ஒரு பிரத்யேக தகவல் நமக்கு கிடைத்துள்ளது.
அனைத்து எம்எல்ஏக்களுக்கும் கார் அறிவிப்புக்கு பலத்த எதிர்ப்புகள் அரசியல் களத்தில் வெடித்து வருகிறது... கஜானா காலியாக இருப்பதாக வெள்ளை அறிக்கை வெளியிட்டு, மாநிலம் சுமார் ரூ.13 லட்சம் கோடி கடனில் தவிப்பதாகவும் சொல்லிவிட்டு, நிதி நெருக்கடியை காரணம் காட்டியே, தேர்தல் வாக்குறுதிகளை தவெக அரசு நிறைவேற்றவில்லை. ஆனால், 234 எம்எல்ஏக்களுக்கும் காஸ்ட்லி வாகனங்கள் வாங்க மட்டும் பணம் எங்கிருந்து வந்தது?
எம்எல்ஏக்களை தக்க வைத்துக்கொள்ளவே முதல்வர் விஜய் இப்படி செய்கிறாரோ என்ற சந்தேகங்கள் வலுத்து வருகின்றன,. அதுமட்டுமல்ல, மக்கள் வரிப்பணத்தில் கார் வழங்குவது எந்த வகையில் நியாயம்? கார் இல்லாத உறுப்பினர்களுக்கு மட்டும் சலுகை வழங்கியிருக்கலாமே, அல்லது கட்சி நிதியில் இருந்து கார் வசதியை செய்திருக்கலாமே.. எம்எல்ஏக்களின் வசதிக்காக அரசு கஜானாவை பயன்படுத்துவது நியாயமில்லை என்ற விமர்சனமும் சோஷியல் மீடியாவில் வலுத்து வருகிறது. தேர்தலுக்கு வரும் நபர், "உங்களுக்கு சேவை செய்ய எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்" என்று சொல்லி வாக்கு வாங்கி ஜெயிக்கிறார்கள். ஜெயித்ததும் எல்லா வசதிகளும் இலவசமாகவே அரசு தர வேண்டும் என கோரிக்கை வைத்து சாதித்துக் கொள்கிறார்கள். எம்எல்ஏக்கள் ஒன்றும் இலவசமாக மக்கள் சேவை செய்யவில்லையே? அதற்கும் சம்பளம் வாங்குகிறார்கள்தானே? அதில் கார் வாங்கிக் கொள்ளட்டுமே! மக்கள் வரி பணத்தை இப்படி விரயமாக்குவதா? மகளிர் உரிமை தொகை கொடுக்க முடியாமல் தவிக்கும் அரசு, மக்கள் பணத்தை எம். எல். ஏ. க்களுக்காக விரயமாக்குவதா? என்றும் கண்டன விமர்சனங்கள் கிளம்பி வருகின்றன.. இந்த அதிருப்தி அலைகளும், கடுமையான விமர்சனங்களும் முதல்வர் விஜய்யின் கவனத்திற்கும் சென்றுள்ளதால் அவர் ஆழ்ந்த யோசனையில் இருப்பதாக தெரிகிறது. "தப்பு பண்ணிட்டோமோ'" என்கிற கவலை அவரிடம் தெரிகிறதாம். மேலும், அரசின் வருவாயை பெருக்கும் வழிகளை ஆராய்வதற்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்ட உயர் மட்டக் குழுவினரிடம் எவ்வித ஆலோசனையும் நடத்தாமல் இந்த திடீர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது அந்தக் குழுவின் தலைவருக்கு கடும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது. இதுவும் முதலமைச்சர் விஜய்யின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாம். மேற்கண்ட இந்த விஷயங்கள்தான், தற்போது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி கொண்டிருக்கின்றன. - சிறப்பு நிருபர் எழில்எம்எல்ஏக்களுக்கு கார்
தவெக அரசு அறிவிப்பு
விஜய் காதுக்கு போன விஷயம்