கலகலத்த ராயப்பேட்டை.. தவெகவில் தஞ்சமான அதிமுக ஜாம்பவான்கள்! பனையூர் செல்லும் விஜய்! பரபர பாலிடிக்ஸ்!

  • சென்னை: நீண்ட இடைவெளிக்கு பிறகு இன்று பனையூர் செல்கிறார் தமிழ்நாடு முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமருமான விஜய். சமீபத்தில் சி விஜயபாஸ்கர், எம் ஆர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிமுக தலைவர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருக்கும் நிலையில் அவர்களுக்கு என்ன பொறுப்பு வழங்குவது குறித்து மூத்த நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    Advertisement

    கட்சி தவெக தான்.. ஆனால் அதுல இருக்கவங்க அதிமுக என்பது போல் தான் நிலைமை தற்போது மாறிக்கொண்டிருக்கிறது. 2026 தமிழக சட்டசபை தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்த அதிமுகவுக்கு இப்படி ஒரு நிலை வருமா என யாருமே யோசித்திருக்க மாட்டார்கள்.

    Advertisement

    தேர்தலில் வெற்றி தோல்வி சகஜம் என்றாலும், அதற்கு பிறகு அந்த கட்சி எவ்வாறு செயல்படுகிறது என்பது தான் அதன் தலையெழுத்தை தீர்மானிக்கும். 2016 சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு ஜெயலலிதா மரணம் அடைந்த நிலையில் ஓபிஎஸ்-ம் அதற்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமியும் கட்சியை வழிநடத்தினர்.

    எடப்பாடி பழனிச்சாமி

    ஓபிஎஸ் ஓரம் கட்டப்பட்ட பிறகு எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் தோல்விதான். 2019 நாடாளுமன்றத் தேர்தல், 2021 சட்டசன்ற தேர்தல், 2024 நாடாளுமன்றத் தேர்தல், இடையில் இடைத்தேர்தல்கள், உள்ளாட்சித் தேர்தல் என அனைத்திலும் அதிமுக படுதோல்வியை சந்தித்தது. 2026 இல் மீண்டும் ஆட்சியைப் பிடித்து விட வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி தீவிரமாக செயல்பட்டார். ஆனால், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வருகையால் அந்த கனவில் மண் விழுந்தது.

    Advertisement

    எஸ் பி வேலுமணி

    யாரும் எதிர்பாராத விதமாக அதிமுக திமுக என இரு பெரும் திராவிட கட்சிகளை வீழ்த்தி தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை பிடித்து விட்டது. ஆனால் அதற்குப் பிறகு அதிமுகவுக்கு தான் சேதாரம் ஏற்பட்டது. சட்டசபையில் எஸ் பி வேலுமணி, சிவி சண்முகம் தலைமையிலான எம்எல்ஏக்கள் தமிழக வெற்றிக்கழக அரசுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதனால் அவர்களை கட்சி தாவல் தடைச் சட்டத்தின் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என எடப்பாடி பொற்கொடி தூக்கினார்.

    தமிழக வெற்றிக் கழகம்

    இதற்குப் பிறகு பேச்சு வார்த்தைகள் மூலம் அந்த நடவடிக்கை வாபஸ் பெறப்பட்டது. ஆனால் அவர்களிடம் இருந்து பறித்த கட்சி பொறுப்புகளை தர முடியாது என எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டமாக இருந்ததால் பலர் ராஜினாமா முடிவுக்கு வந்துவிட்டனர். மரகதம் குமரவேல், இசக்கி சுப்பையா உள்ளிட்ட சிலர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து விட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளனர். அதிர்ச்சி தரும் விதமாக கரூர் விஜயபாஸ்கரும், புதுக்கோட்டை விஜயபாஸ்கரும் தமிழக கட்சி கழகத்தில் இணைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Advertisement

    விஜய்

    ஏற்கனவே தமிழக வெற்றிக் கழகத்தில் பலர் இணைந்திருக்கும் நிலையில் அவர்களுக்கு இன்னும் பதவி தரப்படாதது பல கேள்விகளை எழுப்பி உள்ளது. மேலும் இது முன்னாள் அமைச்சர்களின் இணைப்பு விழாவிலும் விஜய் பங்கேற்கவில்லை. இதனால் அவர்கள் அதிருப்தி அடைந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இன்று விஜய் பனையூர் செல்ல போகிறார் என்கின்றனர் தமிழக வெற்றிக் கழகத்தினர்.

    பனையூர் விஜயம்

    தேர்தல் நிறைவடைந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் பனையூர் செல்வது குறிப்பிடத்தக்கது.
    இன்று பனையூர் செல்லும் விஜய் மூத்த நிர்வாகிகளான செங்கோட்டையன், ஆனந்த், சி டி ஆர் நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா, கட்சியின் ஆலோசகரான ஜான் ஆரோக்கியசாமி உள்ளிட்டருடன் ஆலோசனையில் ஈடுபட இருப்பதாக சொல்லப்படுகிறது.

    Advertisement

    கட்சிப் பதவி

    குறிப்பாக இடைத்தேர்தல்களை எதிர்கொள்வது, இடைத்தேர்தல் வேட்பாளர் தேர்வு, அதிமுகவிலிருந்து தற்போது தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருக்கும் விஜயபாஸ்கர் அண்ட் கோவுக்கு பதவி வழங்குவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் கட்சியில் மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கை உயர்த்தி, புதிதாக சேர்ந்தவர்களுக்கு பதவி வழங்கும் ஆலோசனை நடைபெற இருப்பதாகவும் சொல்கின்றனர். இதனால், புதிதாகச் சேர்ந்தவர்களுக்கு கட்சிப் பதவி தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்கின்றனர் பனையூர் வட்டாரத்தினர்.

    English Summary

    Vijay is expected to discuss party posts, bypoll strategy and new AIADMK entrants at Panaiyur headquarters.