ஏன் என்னிடத்தில் சொல்லவில்லை? போனை போட்டு கோபப்பட்ட விஜய்.. கடுமையான மூவ் அவுட்டாம்! ஏன்?

  • சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி பிரச்சாரம் தொடர்பாக விஜய் ஏகத்துக்கும் மூட்-அவுட்டா கியிருக்கிறாராம். அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனாவையும் சி.டி.நிர்மல் குமாரை யும் ஃபோனில் தொடர்புகொண்டு, "என்னுடைய பிரச்சார பொதுக்கூட்டத்துக்கு மற்ற மாவட்டங்களில் இருந்து நம் கட்சிக்காரர்களை மொபலைஸ் பண்ணி அழைத்து வந்தீர்களா? என்று கடுமையாக கேள்வி எழுப்பி உள்ளாராம். அப்படி என்ன நடந்தது?

    Advertisement

    மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் முதல் கட்டத் தேர்தல் பிரச்சாரத்தை முடித்துவிட்டு, சாலை மார்க்கமாக ஓட்டு சேகரிக்கும் அடுத்த கட்ட பிரச்சாரப் பயணத்துக்கு தயாராகி வருகிறார் முதல்வர் விஜய்.

    Advertisement

    இரண்டு தொகுதிகளிலும் நடந்த பிரச்சாரப் பொதுக்கூட்டத்துக்கு வெளி மாவட்டங்களில் இருந்து தவெகவினரை அழைத்து வந்து அவர்களுக்கு பாஸ் கொடுத்து பொதுக்கூட்டத்தில் அமர வைத்த விவகாரம், விஜய்க்கு எதிராக சர்ச்சைகளை உருவாக்கியது.

    4 மாதங்களில் கிழிந்து தொங்குகிறது

    குறிப்பாக, பொதுக்கூட்டத்துக்கு ஆட்களை வெளி மாவட்டத்திலிருந்து அழைத்து வந்த வாகனங்களின் பதிவு எண்களைக் கொண்டு ஆதாராப்பூர்வமாக அம்படுத்திய திமுக மற்றும் நாம் தமிழர் கட்சிகளின் தொண்டர்கள், "விஜய்யின் சினிமா மாஸ் 4 மாதங்களில் கிழிந்து தொங்குகிறது; தொகுதி மக்கள் யாரும் விஜய்யின் பிரச்சாரப் பொதுக்கூட்டத்துக்கு வரவில்லை. நான்கே மாதத்தில் அவரது மாஸ் சரிந்து விட்டது" என்று விமர்சித் து வருகின்றனர்.

    Advertisement

    விஜய் ஏகத்துக்கும் மூட்-அவுட்டா கியிருக்கிறார்

    இந்த விமர்சனம் விஜய்க்கு தெரிந்து அவர் ஏகத்துக்கும் மூட்-அவுட்டாகியிருக்கிறார். அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனாவையும் சி.டி.நிர்மல் குமாரையும் ஃபோனில் தொடர்புகொண்டு, "என்னுடைய பிரச்சார பொதுக்கூட்டத்துக்கு மற்ற மாவட்டங்களில் இருந்து நம் கட்சிக்காரர்களை மொபலைஸ் பண்ணி அழைத்து வந்தீர்களா?

    ஏன் என்னிடத்தில் சொல்லவில்லை? - விஜய் ஆவேசம்

    இப்படிப்பட்ட ஏற்பாடுகளைத்தான் செய்கிறோம் என ஏன் என்னிடத்தில் சொல்லவில்லை? தொகுதி மக்களைத் தவிர வேறு யாரையும் பொதுக்கூட்டத்தில் அனுமதிக்கக் கூடாது என ஏற்கனவே திட்டமிடப்பட்டதுதானே? அதனை ஏன் மாத்தினீர்கள்? "என்று கடிந்துகொண்டிருக்கிறார் விஜய்.

    அதற்கு ஆதவ் அர்ஜுனா, "தொகுதியில் உள்ள நம் கட்சியினரை அழைத்தால் எல்லோருக்கும் பாஸ் கொடுக்க வேண்டும்ங்கிற நெருக்கடி இருக்கிறது. ஒருவருக்கு பாஸ் கொடுத்துட்டு மத்தவங்களுக்கு கொடுக்கலைன்னா...அந்த நபர் கோபித்துக்கொள்கிறார்.

    Advertisement

    தொகுதி மக்களுக்கு பாஸ் கொடுத்து அழைத்து வர முடிவு

    இதனால் தேர்தல் வேலையில் அவர்களுக்கு அக்கறையில்லாமல் போகுமோ என யோசிக்க வேண்டியதிருந் தது. இதை தவிர்த்து தொகுதி மக்களுக்கு பாஸ் கொடுத்து அழைத்து வந்தால், வேட்பாளருக்கு எதிராக அவர்கள் ஏதேனும் சத்தம் போட்டுவிட்டால் அந்த ரகளை தான் ஊதி பெரிசாக்கப்படும்.

    ஜெகதீஸ் தான் ரூட் போட்டுக்கொடுத்தார்

    அதனால் தான், வெளி மாவட்டங்களில் இருந்து அழைத்து வரலாம்னு முடிவு செய்யப்பட்டது. இதனைக் கூட நாங்கள் சொல்லவில்லை. ஜெகதீஸ் தான் ரூட் போட்டுக்கொடுத்தார்" என்று ஏற்கனவே போடப்பட்ட திட்டம் ஏன் மாற்றப்பட்டது ? யாரால் மாற்றப்பட்டது என விஜய்யிடம் போட்டுக்கொடுத்துள்ளாராம் ஆதவ் அர்ஜுனா.

    Advertisement

    இந்த பதிலைக்கேட்டு வேறு எந்த ஆர்கியுமெண்ட்டையும் செய்யாத விஜய், "இனி ரோட் ஷோ பிரச்சாரத்தில் தொகுதி மக்களை மட்டுமே மொபலைஸ் பண்ணுங்கள் "என்று கேட்டுக்கொண்டிருக்கிறாராம்.

    - சிறப்பு நிருபர் எழில்

    English Summary

    Vijay is angry with TVK leaders on his Madhurantakam and Dharapuram Campaign plan