பட்டு வேஷ்டி, சட்டை.. விஜய்யின் வெள்ளிக்கிழமை செண்டிமெண்ட்.. பின்னணியில் இருக்கும் காரணம் என்ன?

  • சென்னை: முதல்வர் விஜய் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் தலைமைச் செயலகத்திற்கு பட்டு சட்டை, வேஷ்டி அணிந்து வருவதை வழக்கமாக்கி இருக்கிறார். முதல்வர் விஜய்யின் இந்த வெள்ளிக்கிழமை செண்டிமெண்டிற்கு பின்னணியில் அவரின் ஆஸ்தான ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

    Advertisement

    தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்றது முதலே அவரின் செயல்பாடுகள் ஒவ்வொன்றும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. அவரின் ஆடை முதற்கொண்டு ஒவ்வொரு நாளும் புகைப்படங்கள் வெளியாகி டிரெண்டாகி வருகின்றன. முதல் ஒரு மாத காலம் வரை விஜய் கருப்பு கோட் சூட் மட்டுமே அணிவதை வழக்கமாக வைத்திருந்தார்.

    Advertisement

    அதன்பின் வெள்ளை சட்டையை மாற்றிய விஜய், சில நேரங்களில் வெறும் சட்டையை மட்டுமே அணிந்தும் வெளி வந்தார். ஆனாலும் ஒவ்வொரு வாரம் வெள்ளிக் கிழமையும் விஜய் வெள்ளை வேஷ்டி, சட்டை அணிவதை வாடிக்கையாக வைத்துள்ளார். எது மாறினாலும், விஜய்யின் இந்த வெள்ளிக்கிழமை செண்டிமெண்ட் மாறவில்லை என்று பார்க்கப்படுகிறது.

    விஜய்யின் இந்த செண்டிமெண்டிற்கு பின்னணியில் என்ன காரணம் என்று தவெகவினர் மத்தியில் விவாதமாகி வருகிறது. வழக்கமாகவே விஜய்யின் ஜோதிட நம்பிக்கை அதிகம். தவெக ஆட்சிக்கு வந்த பின், அவரின் ஆஸ்தான ஜோதிடரான ரிக்கி ராதன் பண்டிட்-க்கு முதல்வரின் சிறப்பு தனி அதிகாரியாக பொறுப்பு வழங்கினார். ஆனால் எதிர்க்கட்சிகள் மற்றும் மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்ப்பு எழுந்தது.

    Advertisement

    இதனால் அந்த உத்தரவை தவெக அரசு பின் வாங்கி கொண்டது. ஆனாலும் ரிக்கி ராதன் பண்டிட்க்கு தவெகவில் தொடர்ந்து முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. தவெக சார்பாக தேசிய தொலைக்காட்சியில் பேசக் கூடிய முகமாக ரிக்கி ராதன் பண்டிட் இருந்து வருகிறார். இதனால் ரிக்கி ராதன் பண்டிட் தான் விஜய்யின் வேஷ்டி, சட்டை செண்ட்மெண்ட்க்கு காரணம் என்று பார்க்கப்படுகிறது.

    ஏற்கனவே விஜய்யின் அரஜகா பொட்டு சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது. தவெகவை தொடங்கிய போது விஜய் வெள்ளை சட்டை, காக்கி பேண்ட் என்று ஒரே மாதிரியாக உடை உடுத்தி வந்தார். ஆட்சிக்கு வந்த பின் கோட் சூட் மற்றும் வெள்ளை சட்டை, வேஷ்டி என்று மாறி இருக்கிறார். இதனால் விஜய்யின் ஜோதிட நம்பிக்கை அதிகமாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

    English Summary

    Vijay: Is Astrologer Ricky Radhan Pandit Behind Chief Minister Vijay Weekly Traditional Look?