திருமாகிட்ட போய் பேசுங்க.. ஆதவ் அர்ஜுனாவிடம் சொன்ன விஜய்.. மனசே கேட்கலயாமே.. ஏன்?

  • சென்னை: தாய்மாமன் தங்கமோதிரம் திட்டத்தை துவக்கி வைத்ததில் மன மகிழ்ச்சியாக முதல்வர் விஜய் இருந்தாலும், இடைத்தேர்தல் குறித்து வரும் தகவல்கள் அவருக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை என்கிறார்கள்.
    நேற்று இரவு முதல்வர் விஜய்க்கு மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளின் கள நிலவரங்கள் குறித்த சில விபரங்கள் தரப்பட்டுள்ளன. அது அவரை அப்-செட்டாக்கியிருக்கிறது.

    Advertisement

    தவெக கூட்டணி அரசுக்கு ஆதரவு தெரிவித்து அமைச்சரவையிலும் இடம் பிடித்திருக்கும் காங்கிரஸ், விசிக, ஐ.யூ.எம்.எல் உள்ளிட்ட கட்சிகள், தவெகவின் கூட்டணி கட்சிகளாகவும் சமீபத்தில் இணைந்தன. கூட்டணி இருப்பதால் மிக நம்பிக்கையுடன் இடைத்தேர்தலை எதிர்கொண்டு வருகிறார் விஜய். ஆனால், நேற்று கொடுக்கப்பட்ட ரிப்போர்ட்டில், "தவெக தொண்டர்களுக்கும் கூட்டணி கட்சிகளின் தொண்டர்களுக்கும் கீழ் மட்டத்தில் இணக்கமானப் போக்குகள் இல்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    அதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும், தவெக தலைமையில் இருந்து தேர்தல் செலவினங்க ளுக்கு போதுமான, கனமான தொகை கொடுக்கப்படவில்லை என்பதே பிரத்யேக காரணம்.

    மேலும், தவெக வேட்பாளர்களிடம் இது பற்றி கூட்டணி கட்சிகளின் மாவட்ட மற்றும் தொகுதி நிர்வாகிகள் முறையிட்டும் அவர்களது கோரிக்கை கண்டுக் கொள்ளப்படவில்லை. அவர்களிடம் பேசும் தவெக வேட்பாளர்கள், "தொகுதி பொறுப்பாளர்களாக அமைச்சர்களை முதல்வர் விஜய் நியமித்திருக்கிறார். அவர்களிடத்தில் முறையிடுங்கள்; தேவையானது அனைத்தும் கிடைக்கும் " என்று சொல்லி வருகிறார்கள்.

    இதனையடுத்து தொகுதி பொறுப்பாளர் களான அமைச்சர்களிடம் இந்த பஞ்சாயத்து சென்றபோது, "உங்க கட்சி தான் அமைச்சரவையில் இருக்கிறதே. அதில் நிறைய விசயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அதனால் உங்கள் அமைச்சர்களிடம் கேளுங்கள். அவர்கள் ஏற்பாடு செய்து அனுப்பி வைப்பார்கள்" என்று கூலாக, சிரித்தபடியே சொல்லி அனுப்பி வைத்துவிடுகிறார்கள். இதனால் காங்கிரஸ், விசிக கட்சி களின் நிர்வாகிகளும் தொண்டர்களும் சோர்வடைந்துள்ளனர். இதனால், கீழ் மட்டத்தில் தவெகவினருடன் இணைந்து தேர்தல் பணிகளை முன்னெடுப் பதில் சுணக்கம் காட்டி வருகிறார்கள் கூட்டணி கட்சிகள் என்றும் அந்த ரிப்போர்ட் சொல்லுகிறது. இதனை பார்த்துத்தான் அப்-செட்டாகியிருக்கிறார் விஜய்.

    Advertisement

    தாராபுரம் நிலவரம்

    இன்னொரு பக்கம் தாராபுரத்தில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ-வாக ஆனவர் சத்யபாமா. ஆனால் பதவிக்கு வந்த சில நாட்களிலேயே தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தார். அந்த முடிவே இப்போது அவருக்கு எதிராகத் திரும்பியுள்ளது.

    "எங்கள் விரலில் வைத்த மை கூட இன்னும் அழியவில்லை, அதற்குள் பதவியை விட்டுவிட்டு கட்சி மாறிவிட்டீர்களே? எங்களைக் கேட்டுவிட்டுத்தான் ராஜினாமா செய்தீர்களா?" என்று கிராமப்புற வாக்காளர்கள் அவரை நேருக்கு நேர் நிறுத்தி கேள்வி கேட்கிறார்கள். தாராபுரத்தின் பட்டிதொட்டி எங்கும், கிராமப் பஞ்சாயத்துகள் முதல் பேரூராட்சிகள் வரை சத்யபாமா செல்லும் இடங்களில் எல்லாம் "துரோகி! துரோகி!" என்ற கோஷங்கள் பலமாக எதிரொலிக்கின்றன. இது அதிமுக அல்லது திமுக ஆகிய கட்சிகளின் எதிர்ப்பாக மட்டும் இல்லாமல், பொதுவான நடுநிலை வாக்காளர்களின் நேரடி கோபமாகவும் வெடிக்கிறது.

    Advertisement

    இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாக்கூரிடமும், விசிக தலைவர் திருமாவிடம் பேசுமாறு அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு விஜய் உத்தரவிட்டிருக்கிறார். தவெக - கூட்டணி கட்சிகளிடையே கலவரம் இருப்பதால் தேர்தல் களமும் தவெகவிற்கு எதிரான கலவரத்தை உருவாக்குகிறது.

    - சிறப்பு நிருபர் எழில்

    English Summary

    Vijay is not happy about the current situation in Madhurantakam and Dharapuram Bypoll Ground Reality