தாராபுரம், மதுராந்தகம்.. நினைச்சது நடக்கல.. எதோ சரியில்லை.. செம அப்செட்டில் விஜய்? பின்னணி

  • சென்னை: நடந்து முடிந்த இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் தவெக வெற்றி பெற்றாலும் முதல்வர் விஜய்க்கு அதீத உற்சாகம் இல்லை என்கிறார் கள் தவெகவின் மேலிடத்தில் தொடர்புடையவர்கள்.

    Advertisement

    இரண்டு தொகுதிகளிலுமே ஆளும் தவெக, திமுக, அதிமுக என கடுமையான மும்முனைப் போட்டி நிலவியது.

    Advertisement

    தாராபுரம் தொகுதி இறுதி நிலவரம்:

    பி. சத்தியபாமா (தவெக): 66,841 வாக்குகள் (வெற்றி)
    எஸ். சுகன்யா (திமுக): 57,370 வாக்குகள் (இரண்டாம் இடம்)
    க. பானுமதி (அதிமுக): 45,280 வாக்குகள் (மூன்றாம் இடம்)
    கார்த்திகா (நாம் தமிழர் கட்சி): 5,268 வாக்குகள்
    லட்சுமணன் (சிபிஐ): 1,157 வாக்குகள்

    மதுராந்தகம் தொகுதி இறுதி நிலவரம்:

    கே. மரகதம் குமரவேல் (தவெக): 72,240 வாக்குகள் (வெற்றி)
    இ. பரந்தாமன் (திமுக):*52,098 வாக்குகள் (இரண்டாம் இடம்)
    எஸ். கணிதா சம்பத் (அதிமுக): 46,356 வாக்குகள் (மூன்றாம் இடம்)
    ஜானகிராமன் (நாம் தமிழர் கட்சி): 2,298 வாக்குகள்
    பி. சுகந்தி (சிபிஎம்): 1,701 வாக்குகள்

    Advertisement

    தவெகவில் அப்செட்

    இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதுமே தேர்தலை எதிர்கொள்வது குறித்து அமைச்சர்களிடமும் ஆலோசகர்களிடமும் ஆலோசனை நடத்திய விஜய், இப்போது நாம் நிறைய விசயங்களை அலசிப் பார்த்துள்ளோம். விவாதிச்சிருக்கோம். அதனடிப்படையில், நான் விரும்புவது என்னன்னா... நமக்கு வெற்றி கிடைத்து விடும் ; அது பிரச்சனை இல்லை. ஆனால், நம்மை எதிர்க்கும் திமுகவையும் அதிமுகவையும் டெபாசிட் இழக்க வைக்க வேண்டும் என்பதுதான். அந்த வெற்றியைத்தான் நான் எதிர்பார்க்கிறேன் என சொல்லியிருக்கிறார். நிச்சயம் உங்கள் விருப்பம் நிறைவேறும் என்று அப்போது அமைச்சர்கள் பலரும் நம்பிக்கை கொடுத்துள்ளனர்.

    ஸ்டேட்டர்ஜி போட்டு, அடிச்சுக்கிட்டது யாரோ.. வின் பண்ணுனது வேறொருத்தர்! விஜய் சேதுபதி கலாய்! யாரை?
    Advertisement

    அந்த வகையில் தேர்தல் ரிசல்ட்டை பரபரப்பாக அமைச்சர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், திமுகவும் அதிமுகவும் டெபாசிட்டை தக்க வைத் துக் கொண்டது மட்டுமல்லாமல், சொற்ப எண்ணிக்கை வித்தியாசத்தில் தான் தவெக ஜெயித்திருக்கிறது என்கிற ரிசல்ட்டை பார்த்துத்தான் விஜய் யிடம் பெரிய அளவில் உற்சாகம் இல்லை என்று சுட்டிக்காட்டுகிறார்கள்.

    வெற்றி என்பது கேள்வி குறியாகியிருக்கும்

    ஒருவேளை மிக கடுமையான தேர்தல் பிரச்சாரத்தை விஜய் முன்னெடுத்திரு ந்தார் ; இடைத்தேர்தல் தானே என நினைத்து அவர் பிரச்சாரம் செய்வதில் அலட்சியம் காட்டியிருந்தால், வெற்றி என்பது கேள்வி குறியாகியிருக்கும் என்கிற கருத்தும் அமைச்சர்களிடையே இருந்து வருகிறது.

    Advertisement
    துண்டு 2 பக்கமும் போட்ட ராகுல் காந்தி? ஸ்டாலின், விஜய் தரப்பில் இப்படியெல்லாம் நடந்ததா? நம்ப முடியல

    மேலும், தேர்தல் ரிசல்ட்டின் ஒவ்வொரு நீள அகலத்தையும் அலசி ஆராய்ந்துள்ள தவெக ஆலோசகர்கள், திமுக அதன் வாக்கு வங்கியை தக்க வைத்துக்கொண்டுள்ளது. சட்டமன்ற பொதுத்தேர்தலையும் இடைத்தேர்தலை யும் ஒப்பிடும் போது பதிவான வாக்குகள், இடைத்தேர்தலில் சரிவை கண்டி ருக்கிறது. பொதுதேர்தலில் பதிவான வாக்கு சதவீதம் போல முழுமையாக இப்போது பதிவாகியிருந்தால் ஒருவேளை திமுக இன்னும் முன்னேறியிருக்க கூடும்.

    அது தவெகவிற்கு பாதிப்பை ஏற்படுத்தவும் செய்திருக்க வாய்ப்பு உண்டு அல்லது பொதுத் தேர்தலில் தவெகவுக்கு வாக்களித்தவர்கள் இந்த முறை வாக்காளிக்காமல் கூட இருந்திருக்கலாம். இதில் எது நடந்திருந்தாலும் தவெகவின் அரசியல் வளர்ச்சிக்கு தடையை ஏற்படுத்தும். அதனால், இன்னும் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். அந்த தேர்தலில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தவில்லை எனில் தவெகவிற்கு வெற்றி என்பது அவ்வளவு எளிதாக கிடைக்காது என்று கணக்கிட்டுள்ளனர்.

    Advertisement

    - சிறப்பு நிருபர் எழில்

    English Summary

    Vijay is not happy with the margin of TVK winning the Dharapuram & Madurantakam