எந்த முதல்வரும் செய்யாத காரியம்.. விஜய் மாஸ் சம்பவம்.. சீக்ரெட் உடைத்த விஜயதாரணி

  • சென்னை: சட்டமன்ற தேர்தல் முடிவு தமிழக அரசியலில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக, திமுக, பாஜக உள்ளிட்ட மாற்று கட்சிகளில் இருந்து தவெகவில் இணைந்து வருகிறார்கள். தவெகவில் இணைந்தவர்கள் முதலமைச்சர் விஜயை புகழ்ந்து எதிர்க்கட்சிகளை விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் நான் 12 வருடங்களுக்கு மேல் சட்டமன்றத்தில் இருந்துள்ளேன். விஜய் போல செயல்பட்ட முதலமைச்சர் யாரும் இல்லை என்று விஜயதாரணி புகழ்ந்துள்ளார்.

    Advertisement

    தவெக நிகழ்ச்சியில் அந்த கட்சி நிர்வாகி விஜயதாரணி பேசும்போது, "மக்கள் அலை அலையாய் வந்து தவெகவில் இணைந்து கொண்டிருக்கிறார்கள். எல்லா கட்சியிலும் இருந்து தவெகவில் இணைகிறார்கள். தமிழகத்தின் ஒற்றை கட்சியாக தவெக மாறிக்கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் இனி தவெக மட்டும் தான் இருக்கும். தவெக மட்டும் போதும் என்று மக்கள் முடிவு செய்துவிட்டனர். இதோ 2 மாதத்தில் ஆட்சி கவிழும், 6 மாதங்களில் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று சொல்வோர் எல்லாம் தலையை கவிழ்த்து போக போகிறார்கள்.

    Advertisement

    உள்ளாட்சியில் டார்கெட்

    ஆட்சி எல்லாம் கவிழாது. ஐந்து ஆண்டுகளுக்கு ஆட்சி வலுவாக இருக்கும். உள்ளாட்சி தேர்தலில் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். ஊழலற்ற ஆட்சியை தரும் அரசு தலைவர் விஜய் தலைமையில் செயல்பட்டு கொண்டிருக்கிறது. அதற்கு உறுதுணையாக உள்ளாட்சி மன்றங்கள் இருக்க வேண்டும். உள்ளாட்சி மன்றங்கள் எல்லாவற்றிலும் ஜெயிக்க வேண்டும். அப்படி ஜெயித்தால் அடிமட்ட ஊழலும் ஒழிந்துவிடும். மக்கள் ரொம்பவும் தெளிவாக உள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணியை வெற்றி பெற வைக்க வேண்டும்.

    நான் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக 3 முறை இருந்தேன். பாஜகவிலும் இருந்தேன். அங்கே எந்த ஒரு விஷயத்தையும் பல்வேறு விஷயங்களை சொல்வதற்கு ஒரு அமைப்பே இருக்காது. மக்களை சந்திக்கும் வாய்ப்பை தவெக தருகிறது. எம்எல்ஏவாக இருந்தபோது நான் என்னிடம் உதவி கேட்டு வருகிற எல்லாருக்கும் கடிதம் கொடுப்பேன். பல எம்எல்ஏக்கள் அப்படி கடிதம் கொடுக்க மாட்டார்கள். எம்எல்ஏ சரவணன் அலுவலகத்தில் தினசரி 200, 300 பேர் வருகிறார்கள்.

    Advertisement

    முதல் முதலமைச்சர் விஜய்

    இதுதான் மக்கள் பணி. மக்கள் பணியை குறைத்து எடை போட கூடாது. குடும்பத்தை மறந்து மக்கள் பணி செய்கிறார்கள். 60 வருடங்களாக எதிர்பார்த்த ஒரு அரசு இப்போதுதான் வந்துள்ளது. இதற்கு முன்பிருந்தவர்கள் அரசியல் செய்தார்களே தவிர, மக்களுக்கு நல்லது செய்யவில்லை. கேட்டால் மத்தியில் இருந்து நிதி வரவில்லை என்பார்கள். நல்லது செய்யாததற்கான காரணத்தை தான் தேடுவார்கள். தவெக அரசு நிதியை தேடித் தேடி நல்லது செய்து வருகிறார்கள்.

    விஜய்யின் வலிமை, திறமை சிறப்பாக உள்ளது. 54 துறைகளுக்கும் மானிய கோரிக்கை நடைபெறும். அதற்கு இந்த மாதத்தில் இருந்தே துறை ரீதியாக ஆய்வு செய்கிறார்கள். இதற்கு முன்பு இப்படி யார் செய்தார்கள். இதை வேறு யாரும் செய்யவில்லை. எனக்கு எல்லாமே நன்கு தெரியும். நான் நீண்ட காலம் எம்எல்ஏவாக இருந்துள்ளேன். இந்த மாதிரியான ஆய்வு கூட்டம் நடத்திய முதல் முதலமைச்சர் விஜய் தான். என்னால் அதை 100 சதவிகிதம் உறுதியாக சொல்ல முடியும். மக்களின் பிரச்னைகளை சரி செய்யப்படும் என்பது நன்கு புரிகிறது" என்றார்.

    English Summary

    TVK Vijayadharani said, I was part of many years in Assembly. Vijay is the first CM to do this in government.