விஜய் ரொம்ப தெளிவு.. பாஜக பாதையில் திமுக.. வன்னி அரசு விமர்சனம்

  • ராணிப்பேட்டை: சட்டமன்ற தேர்தல் முடிவு தமிழக அரசியலில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இணக்கமாக இருந்த திமுக கூட்டணி சுக்குநூறாக உடைந்துள்ளது. காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல், கம்யூனிஸ்ட்கள் மீது திமுக கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகிறது. விசிக மீது திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா விமர்சனம் வைத்துள்ளார். இதற்கு பதில் அளித்துள்ள அமைச்சர் வன்னி அரசு, ராசா திமுகவை பாஜக பாதையில் அழைத்து செல்கிறார் என்று கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

    Advertisement

    ராணிப்பேட்டையில் அமைச்சர் வன்னி அரசு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், "ஆ. ராசா தேர்தல் தோல்வி ஏற்பட்டதால் மன உளைச்சலில் உளறி கொண்டிருக்கிறார். விடுதலை சிறுத்தைகள், இடதுசாரிகளை தாக்கி பேசுவதன் மூலமாக திமுக என்கிற பேரியக்கத்தை பாஜகவுடன் அல்லது பாஜக பாதையில் இழுத்து செல்கிறாரா என்று அச்சம் தோன்றுகிறது.

    Advertisement

    பாஜக பாதையில் திமுக

    ஒரு திராவிட இயக்கம், திராவிட கொள்கைகளை அழுத்தமாக பேசுகிற இயக்கம் விசிக மற்றும் இடது சாரிகளாவர். இந்த திராவிட கொள்கைகளையும், புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியாரின் கொள்கையுடன் செயல்படும் விடுதலை சிறுத்தைகளை விமர்சிப்பதன் மூலமாக, எங்கள் மீது அவதூறுகளை கொட்டுவதன் மூலமாக அவர் என்ன சொல்ல வருகிறார். விசிக மற்றும் இடதுசாரிகளை விமர்சிப்பது மூலம் திமுகவை பாஜக பக்கம் அழைத்து செல்கிறார்.

    இதன் பின்னணியில் தான் ராசா எங்களை விமர்சனம் செய்கிறார். இதற்கு வேறு எந்த காரணமும் இல்லை. முதலமைச்சர் தமிழ்நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும், எல்லோருக்குமான முதலமைச்சர். அவர் எல்லா கட்சிகளுடனும் நெருக்கமாக இருப்பதில் தவறொன்றும் இல்லையே. தவெக ஏற்று கொண்ட கொள்கையில் என்ன மாதிரியான செயல் திட்டங்களை முன் வைக்கிறார்கள் என்பதைத்தான் பார்க்க வேண்டும்.

    Advertisement

    விஜய் தெளிவு

    முதலமைச்சர் விஜய் மிகுந்த தெளிவோடு இடதுசாரி கொள்கைகளுடன், இடதுசாரி கட்சிகளுடன் இணைந்து ஆட்சி செய்கிறார். சமூக நீதி தொடர்பாக, சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், முதலமைச்சரை சந்தித்துள்ளார். அதில் தவறு இல்லையே. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதுதான் எங்களின் நிலைப்பாடும். அதைத்தான் அன்புமணியும் சொல்கிறார். இதற்கு நெருக்கம் காட்டுவதில் தவறில்லையே" என்று கூறினார்.

    English Summary

    Minister Vanni Arasu said that Vijay is very clear. A Rasa pushing DMK into BJP root. After election result, he's in depression.