“விஜய் தமிழ்நாட்டின் முதல்வர் அல்ல.. அவருக்கு மேல் 3 முதலமைச்சர்கள் உள்ளனர் - எடப்பாடி பேச்சு!

  • சென்னை: "விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சர் அல்ல.. அவருக்கு மேல் 3 முதலமைச்சர்கள் உள்ளனர். தேர்தல் வியூக வகுப்பாளர்கள் 3 பேரை தேர்தலுக்கு பயன்படுத்தினார். ஆட்சிக்கு வந்த பிறகு அவர்கள் 3 பேர் தான் தமிழ்நாட்டை ஆண்டுகொண்டிருக்கின்றனர். முதலமைச்சருக்கு ஒன்றும் தெரியாது" என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.

    Advertisement

    செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், "அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களைப்போல ஒரு திட்டமாவது இந்த 6 மாதகால தவெக ஆட்சியில் கொண்டு வரப்பட்டதா? பிரேக் இல்லாத வண்டியைப்போல திட்டமிடல் இல்லாமல் இந்த ஆட்சி போய்க் கொண்டிருக்கிறது.

    Advertisement

    சமீபத்தில் முதல்வர் வெளிநாடு சென்றார். அவர் எதற்காக சென்றார் என்பது உங்களுக்கே தெரியும். வெளிநாடுகளில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பார் என நினைத்தேன். ஆனால், செய்தித்தாள்களில் வேறு புகைப்படம் இருந்தது. அந்தப் புகைப்படத்தில் தொழிலதிபர்கள் யாரும் இல்லை. எந்தப் புகைப்படம் என்பதும் உங்களுக்கே தெரியும். இவரா நாட்டு மக்களுக்கு நல்லது செய்யப் போகிறார்?

    திரைப்பட நடிகரான ரேஸர் ஒருவர் அரசியலுக்கு வருவார் எனத் தெரிந்தவுடன், தனக்குப் போட்டியாக ரேஸர் வந்துவிடக் கூடாது என்பதற்காக அவரைப் பார்க்கச் சென்று விட்டார் முதல்வர். வரை போலவே உடை அணிந்துகொண்டு வெளிநாட்டில் போய் அவரை பார்க்கிறார். மக்களின் பிரச்னைகளைத் தீர்க்கவோ தொழில் முதலீடுகளை ஈர்க்கவோ அவர் வெளிநாடு செல்லவில்லை. தன்னுடைய சொந்த விஷயத்துக்காகவே அவர் வெளிநாடு சென்றதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகின.

    Advertisement

    மதுராந்தகம் தேர்தல் பிரசாரத்தில் 5 நிமிடங்கள் பேசினால் கொத்து பரோட்டா போட்டு விடுவோம் எனப் பேசினார். ஆனால், அவரை 2 நாட்களாக ஓட ஓட விரட்டினோமா இல்லையா? மதுராந்தகத்தில் முதலில் பிரச்சாரம் செய்தார். இரண்டாவது முறை வீதி வீதியாக வந்தார்.

    அவரது முகத்தைக் காட்டினாலே வெற்றி கிடைக்கும் என சில அமைச்சர்கள் பேசினர். ஆனால், அவர் முகத்தை மட்டும் காட்டவில்லை. ஆடு மேய்த்தார், டிராக்டர் ஓட்டினார், முருங்கைக்காய் பறித்தார், டீ குடித்தார். அவர்கள் டிபன் பாக்ஸில் பணம் கொடுத்து வைத்ததாக அவர்களின் கூட்டணிக் கட்சியினரே குற்றம் சாட்டினர். பணத்தைக் கொடுத்துத்தான் வெற்றி பெற்றீர்களே தவிர, மக்களை நேரடியாகச் சந்தித்து வாக்குகளைப் பெறாத கட்சி தவெக.

    Advertisement

    மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்துவிட முதல்வர் வந்து சென்ற செலவு மட்டும் ரூ. 5.5 கோடி என்கிறார்கள். ஆனால், பிரிட்டிஷ் காலத்தில் அணை கட்டுவதற்கு ஆன செலவு ரூ. 4.5 கோடி மட்டுமே. இதில் யாருடைய பணம் விரயமாகிறது என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். மக்கள் கட்டுகிற வரிப் பணம்தான்.

    சில கட்சிகள் ரீல்ஸ் விடுகின்றன. ரியலாக இருக்கும் கட்சி அதிமுகதான். ஏழைகளுக்காக எம்ஜிஆர் தொடங்கிய அதிமுக ரீல்ஸ் போடும் கட்சி அல்ல. 6 மாதங்களில் தவெக அரசு மக்களுக்கு கொடுத்த பரிசு என்னவென்றால் விலைவாசி உயர்வுதான். மின்கட்டணம்தான் உயர்ந்துள்ளது; ஆனால் மின்சாரம் சரியாக வருவது இல்லை.

    Advertisement

    சந்தி சிரிக்கும் நிலையில் சட்டம் ஒழுங்கு உள்ளது. குழந்தைகள் அடிக்கடி காணாமல் போகின்றனர். போதைப் பொருள் விற்பனை அதிகரித்துள்ளது. நாகையில் ரூ.400 கோடி மெத்தபெட்டமைன் கண்டுபிடிக்கப்பட்டது. உயிரோட்டமுள்ள அதிமுகவை பலர் உடைக்க பார்க்கின்றனர். தொட்டு கூட பார்க்க முடியாது.

    விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சர் அல்ல.. அவருக்கு மேல் 3 முதலமைச்சர்கள் உள்ளனர். தேர்தல் வியூக வகுப்பாளர்கள் 3 பேரை தேர்தலுக்கு பயன்படுத்தினார். ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு அவர்கள் 3 பேர் தான் தமிழ்நாட்டை ஆண்டுகொண்டிருக்கின்றனர். முதலமைச்சருக்கு ஒன்றும் தெரியாது

    இந்த 6 மாதத்தில் எங்கேயாவது ஒருமுறையாவது பேட்டி கொடுத்திருக்கிறாரா? அரசாங்கத்தில் என்னென்ன பணிகள் நடக்க வேண்டும்.. ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றுவது என எல்லாமே அந்த 3 பேர் தான். முதலமைச்சருக்கு ஒன்றும் தெரியாது. இந்த நாடு உருப்படுமா?" எனக் கேள்வி எழுப்பினார்.

    English Summary

    “Vijay is not the Chief Minister of Tamil Nadu; there are three Chief Ministers above him. He employed three election strategists for the polls, and since coming to power, it is these three individuals who have been governing Tamil Nadu. The Chief Minister knows nothing,” stated AIADMK General Secretary Edappadi Palaniswami.