கோட்டை விட்ட சிஎம் விஜய்.. கார் ரேஸ் பார்க்கவா லண்டன் பயணம்? அடுக்கடுக்காய் எழும் கேள்விகள்!

  • சென்னை: தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் லண்டன் பயணம் மேற்கொண்டதாக தமிழக அரசு கூறிய நிலையில் இதுவரை எந்த தொழில் முதலீட்டாளர்களையும் சந்திக்கவில்லையா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. நடிகர் அஜித்குமாரின் கார் பந்தயத்தை மட்டும் பார்வையிடுவதற்காகவா? முதல்வர் லண்டன் சென்றார் என கேள்வி நெட்டிசன்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    Advertisement

    தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பொறுப்பேற்றவுடன் 1.5 ட்ரில்லியன் பொருளாதாரத்தை இலக்காகக் கொண்டு செயல்படுவதாக கூறியிருந்தார். மேலும் 100 நாட்களில் ஒரு லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாகவும் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா கூறியிருந்தார்.

    Advertisement

    இது ஒருபுறம் இருக்க தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் பயணம் மேற்கொண்டார். கடந்த 10ஆம் தேதி லண்டன் சென்ற அவருடன் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் அதிகாரிகள் சென்றார். ஆனால் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா செல்லவில்லை. இதுவும் விமர்சனத்திற்கு உள்ளானது.

    இந்த நிலையில் லண்டன் பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் விஜய் நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் ரேஸை தொடங்கி வைத்ததோடு, அஜித்தை சந்தித்து பேசிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டானது. மேலும் அந்த நிகழ்வில் நடிகை ஒருவர் கலந்து கொண்டதும் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. இதற்கிடையே கடந்த 10 ஆம் தேதியே முதல்வர் லண்டன் பயணம் மேற்கொண்ட நிலையில் நான்கு நாட்கள் ஆகியும் இதுவரை எந்த ஒரு தொழில் முதலீட்டாளர்களையோ தொழில் நிறுவனங்களையோ சந்தித்ததாக அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

    Advertisement

    வழக்கமாக தமிழ்நாட்டின் முதலமைச்சர்கள் முதலமைச்சராக இருப்பவர்கள் வெளிநாடுகளுக்கு தொழில் முதலீடு ஈர்ப்பது தொடர்பாக பயணம் மேற்கொண்டால் டிஐபிஆர் எனப்படும் தமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை சார்பில் முன்னதாகவே அறிக்கையை வெளியிடப்படும். முதல்வர் என்ன நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்? யார் யாரை சந்திக்கிறார்? என்பது தொடர்பாக விரிவாக விளக்கம் அளிக்கப்படும். மேலும் ஒவ்வொரு நாள் நிகழ்வுகளும் செய்தி அறிக்கையாக வெளியிடப்படும்.

    தற்போது கார் ரேசில் கலந்து கொண்டதை தவிர முதல்வர் விஜயின் பயணம் குறித்து செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கையும் எதுவரை வெளியாகவில்லை. இதனால் உண்மையில் முதல்வர் விஜய் முதலீடுகளை ஈர்க்கத்தான் லண்டன் பயணம் மேற்கொண்டாரா என்ற விமர்சனத்தை பாஜக முன் வைத்திருக்கிறது. முதல்வர் எதற்காக சென்றார் என விளக்கம் அளிக்க வேண்டும் என பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல் முருகன் உள்ளிட்டோ தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

    Advertisement

    இது ஒரு புறம் இருக்க தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மு க ஸ்டாலின் ஆகியோர் வெளிநாடு பயணம் மேற்கொண்ட போது ஏராளமான நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க முன் வந்தன. ஆனால் தமிழக வெற்றிக்கழக அரசு அமைந்த பின்பு எந்த ஒரு பெரிய நிறுவனமும் இதுவரை தமிழகத்தில் கால் பதிக்கவில்லை. சொல்லப்போனால் முக்கிய நிறுவனங்கள் அண்டை மாநிலங்களுக்கு தாவி விட்டன. இதனால் தொழில் துறையில் கோட்டை விட்டுவிட்டார் முதல்வர் விஜய் என குற்றச்சாட்டை முன்வைக்கின்றன எதிர்க்கட்சிகள்.

    English Summary

    Vijay faces questions over his London investment tour after attending Ajith Kumar’s race, with no major investor meetings officially announced.