முதல்வர் விஜய் மீட்டிங்கில் இருக்கும் போதே ரீல்ஸ்! சர்ச்சையை கிளப்பிய வீடியோவை எடுத்த நபர் யார்?

  • சென்னை: தமிழக வெற்றிக் கழகம் ரீல்ஸ் ஆட்சி நடத்துவதாக எதிர்க்கட்சிகள் விமர்சனங்கள் முன்வைத்து வரும் சூழலில், இன்று அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தின் போது ஒருவர் செல்பி வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    தமிழக அரசு தரப்பில் வெளியிடப்படும் அதிகாரப்பூர்வமாக டிஐபிஆரில் கூட இத்தகைய வீடியோக்களில் ஆடியோ மீயூட் செய்யப்பட்டு வீடியோ காட்சி மட்டுமே வெளியிடப்படும் நிலையில், முதல்வரின் ஆலோசனையை செல்ஃபி வீடியோவாக எடுத்து ஆடியோவுடன் வெளியிட்டது கண்ணியக்குறைவான செயல் என சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

    Advertisement

    தலைமை செயலகத்தில் விஜய்

    தமிழக முதல்வராக விஜய் கடந்த 10 ஆம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார். விஜய் முதல்வராக பதவியேற்ற நாளில் இருந்து தினமும் காலை 10 மணிக்கு முன்பே தலைமை செயலகம் வந்து விடுகிறார். மாலை 4 மணிக்கு மேல்தான் தலைமை செயலகத்தில் இருந்து கிளம்பி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

    மதிய உணவையும் கையோடு எடுத்து வந்து விடுகிறார். முதல்வர் விஜய்யின் இந்த செயல் தலைமை செயலக அதிகாரிகள் மத்தியில் வியப்பை கொடுத்துள்ளது. அதுபோல, தினமும் பல்வேறு துறைகள் ரீதியாக அலுவல் ஆய்வு கூட்டங்களை நடத்தும் விஜய், அதிகாரிகளுக்கு ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார்.

    Advertisement

    செல்ஃபி வீடியோ

    இந்த சூழலில்தான் இன்று அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தின் போது ஒருவர் செல்பி வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் பங்கேற்கும் அலுவல் ஆய்வு கூட்டங்களில் வீடியோவானது தமிழக அரசு தரப்பில் அதிகாரப்பூர்வமாக டிஐபிஆரில் இருந்து வெளியிடப்படும். இத்தகைய வீடியோக்களில் ஆடியோக்கள் மீயூட் செய்யப்பட்டு வெறும் வீடியோ காட்சி மட்டுமே வெளியிடப்பட்டு வரும் நிலையில், முதல்வரின் ஆலோசனையை செல்பி வீடியோவாக எடுத்து ஆடியோவுடன் வெளியிட்டது கண்ணியக்குறைவான செயல் என்று சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

    எதிர்க்கட்சிகள் விமர்சனம்

    ஏற்கனவே, எதிர்க்கட்சிகள், தமிழக வெற்றிக் கழகம் ரீல்ஸ் ஆட்சி நடத்துவதாக விமர்சனங்கள் முன்வைத்து வருகின்றன. அமைச்சர்களும் நிர்வாக பணிகளில் ஈடுபடுவதை விட ரீல்ஸ்கள் போடுவதில்தான் கவனம் செலுத்துகிறார்கள் என்று எதிர்க்கட்சிகள் விமர்சிக்கும் நேரத்தில், முதல்வர் அறையில் இருந்தே இப்படி வீடியோ வெளியாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பல்வேறு தரப்பினரும் தங்கள் கவலையை வெளிப்படுத்தியதையும் பார்க்க முடிந்தது.

    Advertisement

    இதனிடையே, முதல்வர் அறையில் இருந்து வீடியோ வெளியிட்டது யார் என்பது தொடர்பான ஒரு தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்கங்கள் சார்பில் நிர்வாகிகள் முதலமைச்சர் விஜய்யை சந்தித்தபோது அதை வீடியோ எடுத்து ரீல்ஸ் ஆக பதிவிட்டது தெரியவந்துள்ளது. வீடியோ எடுத்தவர் அரசு அதிகாரி இல்லை என்பதும் மாற்று திறனாளிகள் சங்கங்கள் கூட்டமைப்பு தலைவர் சிம்மச்சந்திரன் என்றும் கூறப்படுகிறது. முதல்வர் விஜயின் அனுமதி பெற்ற பிறகே வீடியோ எடுத்ததாக சிம்மச்சந்திரன் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

    English Summary

    Vijay: A controversy has erupted after a person recorded and shared a selfie-style reels video from inside Chief Minister Vijay’s official meeting with government officials. The incident has triggered criticism on social media, especially as even official government releases usually mute audio in sensitive meeting visuals. Opposition parties have intensified their criticism, accusing the TVK government of prioritising publicity over governance.