AM, PM பார்க்காமல் உழைக்கும் நாளைய பிரதமரே.. முதல்வர் விஜய்யை புகழ்ந்து தள்ளிய அமைச்சர் கில்லி சரத்!

  • சென்னை: எங்கள் இதயத்திலும், இல்லத்திலும், கோட்டையிலும் முதல்வராக இருக்கும் எங்கள் தலைவா, நாளைய இந்தியாவின் பிரதமர் நீங்கள் தான் என்று அமைச்சர் சரத் பேசியுள்ளார். அதுமட்டுமல் AM, PM பார்க்காமல் உழைக்கும் எங்கள் சிஎம்-ஏ, நாளைய PM நீங்களே தான் என்றும் புகழ்ந்து தள்ளியுள்ளார்.

    Advertisement

    சட்டசபையில் மானிய கோரிக்கை விவாதத்தின் 2வது நாள் அமர்வு நடைபெற்றது. இன்று பொதுப்பணி, விளையாட்டு மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறைகளின் வானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர் சரத்குமார் பதில் அளித்துள்ளார்.

    Advertisement

    அமைச்சர் சரத்குமார் பதிலுரை அளித்து பேசுகையில், சிறந்த தலைவர்கள் மத்தியில் சிறந்தே பிறந்த எங்கள் தலைவா.. நான் மீண்டும் இறந்து பிறந்தால் உங்களை மட்டும் மறவாமல் இருக்க அருள்வாய்.. கிருஷ்ணன் பிறப்பை இந்துக்கள் கொண்டாடுகிறார்கள்.. இயேசு பிறப்பை கிறிஸ்தவர்கள் கொண்டாடுகிறார்கள்.. நபிகள் பிறப்பை இஸ்லாமியர்கள் கொண்டாடுகிறார்கள்.

    நாடே கொண்டாடும் பிறந்த நாள் யாருடையது தெரியுமா.. தமிழ்நாட்டின் எழுச்சி நாள் ஜூன் 22. நிறைய சிந்தித்து குறைவாய் பேசும் முதல்வர், மக்கள் நலனுக்காக தன் நலன் துறப்பவர். வியர்வை சிந்தி வெற்றிக்கு உழைப்பவர். பிறரை மகிழ வைத்து மகிழ்பவர். மக்களாட்சி தரும் மாண்பாளர்.. மனிதநேய பண்பாளர். அப்படியென்று யாரெல்லாம் சொல்கிறார்கள் தெரியுமா..

    Advertisement

    தாய் வயிற்றில் இருக்கும் குழந்தை கூட நாளைய ஆட்சி கில்லி தான் என்கிறது.. அடுத்த 50 ஆண்டுகளுக்கு தவெக ஆட்சி தான்.. தமிழக மக்கள் 2026 மே 4ல் நாளைய தீர்ப்பை எழுதினார்கள். குழந்தைகள் குஷியோ குஷி.. காலமெல்லாம் காத்திருந்த மக்களுக்கு காவலனாய், கண்ணுக்குள் நிலவாய், பகவதியாய், திருமலையாய், ப்ரியமுடன் தமிழகத்தில் புதிய கீதையை படைப்பதற்கு சர்க்காரில் சரித்திரம் படைத்தாய்.

    துள்ளாத மனதையும் துள்ள வைத்து நீங்கள் சொல்லி அடிப்பதில் கில்லி என்று பெயரெடுத்த தலைவா.. நீங்கள் பேசினால் எதிரிகள் மெர்சல் தான்.. ஜனநாயகத்தை காத்த தலைவா, மக்கள் ஒன்ஸ் மோர் என்று 100 வருடம் கேட்பார்கள். மிக சாதாரணமாக இருந்த எனக்கு அங்கீகாரம் கொடுத்து கட்சியில் உறுப்பினராய் சேர்த்து தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்து, அமைச்சராக்கி அழகு பார்த்த எங்கள் தலைவா..

    Advertisement

    தங்களுக்கு என்னுடைய ஆயுளை மட்டுமல்லாமல் என் குடும்ப ஆயுளையும் சேர்த்து தருகிறேன். எங்கள் இதயத்திலும், இல்லத்திலும், கோட்டையிலும் முதல்வராக இருக்கும் எங்கள் தலைவா, நாளைய இந்தியாவின் பிரதமர் நீங்கள் தான்.. AM, PM பார்க்காமல் உழைக்கும் எங்கள் சிஎம்-ஏ, நாளைய PM நீங்களே தான் என்று பேசியுள்ளார்.

    English Summary

    Vijay: Minister Sarath Hails CM Vijay as "Tomorrow’s Prime Minister of India" in the Tamilnadu Assembly