திமுக குடும்பத்தில் புதிய புயல்! தவெகவில் இணையும் அழகிரி மகள் கயல்விழி? மேயர் நாற்காலிக்கு ஸ்கெட்ச்!

  • சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் களம், தினமும் ஒரு புதிய திருப்பத்தைச் சந்தித்து வருகிறது. அந்த வகையில், தற்போது திமுகவின் 'கலைஞர் குடும்பத்தில்' இருந்து புதிய புயல் ஒன்று கிளம்பியுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி, முதல்வர் விஜய்யின் தவெகவில் இணையப் போவதாக அரசியல் வட்டாரங்களில் பேச்சுகள் வேகமாக பரவி வருகின்றன.

    Advertisement

    சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற முதலமைச்சர் விஜய்யின் பதவியேற்பு விழாவில், திமுகவின் முக்கிய தலைவர்கள் பலரும் பங்கெடுக்காத நிலையில், மு.க.அழகிரியின் மகள் கயல்விழி நேரில் கலந்துகொண்டது அனைவரையும் உற்றுநோக்க வைத்தது. பதவியேற்பு விழாவுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய கயல்விழி, "விஜய் சரித்திர சாதனையாளர். அவருடைய கடின உழைப்புக்குக் கிடைத்த வெற்றி இது" என்றார்.

    Advertisement

    மதுரையில் மு.க. அழகிரி நீண்ட காலமாகவே அரசியலில் ஒதுங்கியிருந்தாலும், அவரது தீவிர விசுவாசிகள் இன்னும் தென்மாவட்டங்களில் கணிசமாக உள்ளனர். ஸ்டாலின் மீதான தங்களின் அதிருப்தியைக் காட்ட, அழகிரி ஆதரவாளர்கள் பலரும் கயல்விழியை மாற்றுப் பாதையைத் தேர்ந்தெடுக்க தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

    தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல்கள் வரவிருக்கும் சூழலில், கயல்விழியின் தவெக என்ட்ரிக்கு பின்னால் ஒரு மாபெரும் 'மதுரை கணக்கு' இருப்பதாகக் கூறப்படுகிறது. மதுரை மாநகராட்சி மேயர் பதவியைக் கயல்விழி குறி வைத்துள்ளதாகத் தெரிகிறது. மதுரை மண்ணில் அழகிரி செல்வாக்கையும், தவெகவுக்கு இருக்கும் இளைஞர்கள் மற்றும் மகளிர் ஆதரவையும் இணைத்தால், எளிதாகக் வெல்லாம் என்று கணக்கு போட்டுள்ளனர்.

    Advertisement

    கலைஞர் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரே, திராவிடக் கோட்டைக்கு சவால் விட்டு எழுந்துள்ள தவெக-வில் இணைந்தால் அது திமுகவுக்குப் பின்னடைவாக அமையும். கயல்விழியின் முடிவுக்கு பின்னணியில் மு.க.அழகிரியும் இருப்பதாக சொல்லப்படுகிறது. அண்மையில் அவரது ஆதரவாளர்களான மன்னன், எஸ்ஸார் கோபி ஆகியோர் அதிமுகவில் ஐக்கியமாகினர்.

    அதேபோல் முன்னாள் அமைச்சர் மூர்த்தியை தோற்கடித்த கார்த்திகேயன் மு.க.அழகிரியின் ஆதரவாளராக இருந்தவர் தான். இவபர் மூலமாக கயல்விழி தவெகவில் இணைய காய்களை நகர்த்தி வருகிறார். கயல்விழியின் இந்த முடிவு மதுரையில் திமுகவுக்கு மிகப்பெரிய பின்னடைவை உருவாக்கலாம் என்று கருதப்படுகிறது.

    English Summary

    Vijay: MK Alagiri’s Daughter Kayalvizhi to Join TVK? Aiming for Madurai Mayor post ahead of Local Body Elections